MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Kadhal Kadhal Kadhal : "உங்களை எனக்கு பிடிக்கல"... அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த மது... ஸ்வேதாவின் லவ் புரபோசல்

Kadhal Kadhal Kadhal : "உங்களை எனக்கு பிடிக்கல"... அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த மது... ஸ்வேதாவின் லவ் புரபோசல்

Kadhal Kadhal Kadhal Serial 16 July 2026 Today Episode : காதல் காதல் காதல் சீரியலில் அர்ஜுன் மதுவுக்கு ரூட் விட, ஸ்வேதா, அர்ஜுனிடம் புரபோஸ் பண்ணி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kadhal Kadhal Kadhal Serial Today Episode
Image Credit : jiohotstar

Kadhal Kadhal Kadhal Serial Today Episode

விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீரியல் தான் காதல் காதல் காதல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், மெஹந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. அனைவரும் உற்சாகமாக மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அர்ஜுனின் கவனம் முழுவதும் மது மீதே இருக்கிறது. மதுவை பார்த்துக் கொண்டே அவளைப் புகழ்ந்து பேசும் அர்ஜுனுக்கு, அவரது அம்மாவும் மறைமுகமாக ஆதரவாக செயல்படுகிறார். மெஹந்தி போடும் நேரத்தில், மதுவை ஸ்வேதா அருகில் அமர வைத்த பிறகு, அர்ஜுனின் அம்மா ஒரு சிறிய திட்டம் போடுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மதுவுக்கு மெஹந்தி போடும் அர்ஜுன்
Image Credit : jiohotstar

மதுவுக்கு மெஹந்தி போடும் அர்ஜுன்

மதுவுக்கு வேறு யாரும் அல்ல, அர்ஜுனே மெஹந்தி போட வேண்டும் என்று கூறி இருவரையும் ஒன்றாக அமர வைக்கிறார். ஆரம்பத்தில் மது தயக்கம் காட்டினாலும், பெரியவர்கள் சொன்னதால் மறுக்க முடியாமல் சம்மதிக்கிறார். இதனால் அர்ஜுன் மகிழ்ச்சியில் மதுவின் கையில் அழகாக மெஹந்தி வரைகிறார். இந்த காட்சியை பார்த்த கஸ்தூரிக்கும் ஆசை பிறக்கிறது. கார்த்திக்கும் தன்னுடைய கையில் மெஹந்தி போட வேண்டும் என்று கூறி அழைக்கிறார். கார்த்திக்கும் எந்த சந்தேகமும் இல்லாமல் கஸ்தூரிக்கு மெஹந்தி போட்டு விடுகிறார்.

Related Articles

Related image1
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Related image2
Serial : சன் டிவி, விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 சூப்பர் ஹிட் சீரியல்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி
35
கஸ்தூரிக்கு வந்த ஆசை
Image Credit : jiohotstar

கஸ்தூரிக்கு வந்த ஆசை

ஆனால் இதை தூரத்தில் இருந்து கவனிக்கும் ஆதவ், கார்த்திக்கிடம் எச்சரிக்கை விடுக்கிறார். கஸ்தூரியின் நடத்தை சரியாக இல்லை என்று கூறி கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார். ஆனால் கார்த்திக், கஸ்தூரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல், ரியாவை பற்றிய தனது எண்ணங்களிலேயே இருக்கிறார். மறுபுறம், மது கையில் மெஹந்தி போட்டு முடிந்ததும், அர்ஜுனின் அம்மா அதை பாராட்டி, இருவரையும் சேர்த்து பேச முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் அர்ஜுன், "மெஹந்தி பிடிச்சிருக்கா?" என்று மதுவிடம் கேட்கிறார்.

45
அர்ஜுனிடம் காதலை சொன்ன ஸ்வேதா
Image Credit : jiohotstar

அர்ஜுனிடம் காதலை சொன்ன ஸ்வேதா

அதற்கு மது, "மெஹந்திதான் பிடிச்சிருக்கு... நீங்க இல்லை" என்று நேரடியாக பதிலளித்து அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த உரையாடலை வீட்டில் இருந்த பெரியவர்கள் கவனிக்கிறார்கள். உடனே அர்ஜுனிடம் விளக்கம் கேட்க, "நான் எதுவும் செய்யவில்லை. அம்மா சொன்னதால்தான் மெஹந்தி போட்டேன்" என்று நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறார். இதற்குப் பிறகு சங்கீத் விழா தொடங்குகிறது. அந்த நேரத்தில் ஸ்வேதா, அர்ஜுனை தனியாக அழைத்துச் சென்று, "இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை... நான் விரும்புவது உன்னைத்தான்" என்று தனது மனதில் இருந்த காதலை வெளிப்படுத்துகிறார்.

55
காத்திருக்கும் ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

காத்திருக்கும் ட்விஸ்ட்

ஆனால் அர்ஜுன், ஸ்வேதாவின் காதலை ஏற்க மறுத்து, "எனக்கு உன் மீது அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லை" என்று தெளிவாகக் கூறி விலகிச் செல்கிறார். இறுதியாக, நிகழ்ச்சி தொடங்குகிறது அனைவரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள். அப்போது மதுவையும் அர்ஜுனுடன் சேர்ந்து ஆட அழைக்கிறார்கள். ஆனால் மது அதை மறுத்து விடுகிறார். இதனால் அடுத்த எபிசோடில் இந்த முக்கோண காதல் என்ன புதிய பிரச்சினையை உருவாக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : கர்ப்பமாக இருக்கிறாரா மீனா? சந்தேகப்படும் விஜயாவுக்கு ஆஸ்பத்திரியில் காத்திருந்த ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : மீனாவின் இங்கிலீஷ் திறமையால் அதிர்ந்த சிந்தாமணி... ரோகிணி எடுத்த அதிரடி முடிவு!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜை விடாமல் துரத்தும் கனகா... ரகசியமாக நடக்கும் பர்ஸ்ட் நைட் ஏற்பாடு; ரோகிணிக்கு வந்த டவுட்
Related Stories
Recommended image1
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Recommended image2
Serial : சன் டிவி, விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 சூப்பர் ஹிட் சீரியல்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved