- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Serial : சன் டிவி, விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 சூப்பர் ஹிட் சீரியல்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி
Serial : சன் டிவி, விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 சூப்பர் ஹிட் சீரியல்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி
Vijay TV and Sun TV Serials : விஜய் டிவி 2 சூப்பர் ஹிட் சீரியல்களையும், சன் டிவி லேட்டஸ்ட் சீரியலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vijay TV and Sun TV Serials End Soon
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகள் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். இந்த இரண்டு சேனல்களும் முன்னணியில் இருப்பதற்கு அதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தான் முக்கிய காரணம். காலை முதல் இரவு வரை போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த சேனல்களில் ஏதேனும் சீரியல்களுக்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் வராவிட்டால் அந்த சீரியலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி மூன்று சீரியல்களை ஒரே நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர உள்ளன.
முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
சன் டிவியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ந் தேதி தொடங்கப்பட்ட சீரியல் தான் செல்லமே செல்லமே. ரேஷ்மா கதையின் நாயகியாக நடித்த இந்த சீரியல், அண்மையில் கூட அன்னம் சீரியல் உடன் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தனியாக இந்த சீரியலுக்கு பெரியளவில் டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் இதனை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து உள்ளனர். இந்த சீரியல் 150 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஜூலை உடன் முடிவடைய வாய்ப்பு உள்ளது.
விஜய் டிவி இழுத்து மூடும் இரண்டு சீரியல்கள்
சன் டிவி ஒரு சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் அதே நேரத்தில் விஜய் டிவி இரண்டு சீரியல்களுக்கு எண்டு கார்டு போட்டுள்ளது. அதன்படி விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் விரைவில் மூடுவிழா காண உள்ளது. பிரவீன் பென்னட் இயக்கும் இந்த சீரியல் விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 850 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோ - ஹீரோயினாக நடித்து வரும் விஜய் - காவேரி ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலின் கிளைமாக்ஸும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இன்னொரு விஜய் டிவி சீரியல் என்ன?
மகாநதியை போல் விஜய் டிவி இழுத்து மூட உள்ள மற்றொரு சீரியலின் பெயர் கனா கண்டேனடி, இந்த சீரியல் விஜய் டிவியில் இந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டது. வெறும் 106 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கும் இந்த சீரியல் கிளைமாக்ஸை நெருங்கி உள்ளது. இந்த சீரியலுக்கு மிக கம்மியான அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைத்ததால் அதனை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து உள்ளார்களாம். இப்படி இரண்டு சீரியல்களை மூடினாலும் விஜய் டிவியில் விரைவில் இரண்டு புத்தம் புது சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

