- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Ethirneechal Thodargiradhu Serial 17 May 2026 Today Episode : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல் சன் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். பந்தக்கால் நடுவதற்காக வீட்டிற்கு வந்த ஜனனியிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு ஈஸ்வரி கேட்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஜனனி, என்ன ஆனாலும் பரவாயில்லை நான் நீதிமன்றம் செல்வேன் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீதிமன்றத்தில் அண்ணனுக்கு ஆதரவாக பேசுமாறு ஈஸ்வரியிடம் கூறுகிறார்.
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!

வழக்கு விசாரணை
இந்த நிலையில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வருகிறது. அங்கு ஈஸ்வரியை கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிறார்கள். ஆதி குணசேகரன் கோர்ட்டுக்கு வரவில்லை. வழக்கு விசாரணைக்காக ஜனனி நீதிமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது சாருபாலாவை அழைக்கும் நீதிபதி, நீங்கள் மறு விசாரணை கேட்டு பெட்டிசன் சமர்ப்பிப்பது ஏன்? எனக்கு கேட்கிறார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட தன்மை நேர்மையாக இருந்தாலும், காலம் நீட்டித்துக் கொண்டே செல்வதால் சில விஷயங்கள் நார்மல் ஆகிவிட்டது. குணசேகரன் செய்தது மிகப்பெரிய குற்றம். ஆனால் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை என்று சாருபாலா கூறுகிறார்.
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
ஈஸ்வரியை மடக்கிய நீதிபதி
ஜாமீனுக்கு பிறகு குணசேகரன் நிறைய தப்பு செய்திருக்கிறார். அதை இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். அனைத்தையும் சேர்த்து மறு விசாரணைக்கு முறையிட்டு இருக்கிறோம் என சாருபாலா கூற, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆதி குணசேகரன் எங்கே என நீதிபதி கேட்கிறார். ஆதி குணசேகரன் வக்கீல் பேச முடியாமல் வாயடைத்துப் போகிறார். இத்துடன் கடந்த வாரத்திற்கான எபிசோடுகள் நிறைவடைந்த நிலையில், இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்துள்ள ஈஸ்வரியை நீதிபதி கேள்விகளால் மடக்குகிறார். நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஈஸ்வரி திணறுகிறார்.
ஈஸ்வரியிடம் சவால் விடும் ஜனனி
அதில் சாட்சியம் கூறும் ஈஸ்வரி, நீதிபதியிடம் நான் மாடி படியில் இருந்து தவறி விழுந்து விட்டேன் என்று கூறுகிறார். அதற்கு நீதிபதி கடந்த கால விஷயங்கள் எல்லாம் மறந்து விட்டது. ஆனால் படியில் இருந்து விழுந்தது மட்டும் எப்படி ஞாபகம் இருக்கிறது? என்று கேள்விகளால் மடக்குகிறார். இதனால் ஈஸ்வரி பதில் சொல்ல முடியாமல் தருமாறுகிறார். பின்னர் அந்த வழக்கின் தேதியை மாற்றி வைக்கின்றனர். கோபத்தில் வெளியே வந்த ஜனனி ஈஸ்வரியிடம், நீங்கள் இப்போது தேதியை மாற்றி வைத்து ஜெயித்திருக்கலாம். ஆனால் கண்டிப்பாக நியாயம் தான் ஜெயிக்கும் என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
ரசிகர்கள் கவலை
இந்தப் ப்ரோமோவை பார்த்த பலரும் இந்த பிரச்சனை எப்போதுதான் முடிவுக்கு வரும்? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க என்று புலம்பி தள்ளி வருகின்றனர். எப்போதும் வில்லன் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். அதில் இருந்து தப்பிப்பது போல் சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் நியாயத்திற்காக போராடும் ஜனனி ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொண்டு அதில் தோல்வியே தழுவுகிறார். இப்படியே வில்லன் கை ஓங்கி இருப்பதும், கதாநாயகி கை அதல பாதாளத்திற்கும் சென்ற வண்ணமே உள்ளது. இது ரசிகர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

