- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கெஞ்சி கேட்டும் மனம் இறங்க மறுத்த ஜனனி, அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, ஆதி குணசேகரனை எப்படியாவது சிறையில் தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், ஆதாரத்தை திரட்டும் வேலைகளை முழு வீச்சில் செய்து வருகிறார் ஜனனி. மறுபுறம் தர்ஷன், வேலை விஷயமாக திருச்சி வரை சென்றிருக்கிறார். அவர் தன்னுடைய டீம் லீடர் அன்புக்கரசி உடன் தான் சென்றுள்ளார். அங்கு ஒரே ரூமில் இருவரும் தங்க முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Ethirneechal : ஓட்டலில் ஒரே ரூமில் தர்ஷன் - அன்புக்கரசி... வீடியோவால் வெடிக்கப்போகும் புது பிரச்சனை

தர்ஷனிடம் பேசும் அன்புக்கரசி
ஒரே ரூமில் தர்ஷனும், அன்புக்கரசியும் ஒன்றாக அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது நம்ம இந்த இடத்துல வேலைக்காக தான் வந்து தங்கி இருக்கிறோம். இதுக்கு முன்னாடியே உன்னை தெரியும் என்பதை தாண்டி, நமக்குள்ள வேற எதுவுமே இல்லை என அன்புக்கரசி தர்ஷனிடம் சொல்லி இருக்கிறார். இப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே ரூமில் தங்கி இருப்பதை ராவணன் வீடியோவாக பதிவு செய்து அதனை வைத்து கேம் ஆட முடிவு செய்துள்ளார். அப்படி அவர்கள் இருவரையும் ஒரே ரூமில் பார்த்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஈஸ்வரியை மலைபோல் நம்பும் ஆதி குணசேகரன்
மறுபுறம் ஆதி குணசேகரன் தன்னுடைய குலதெய்வம் கோவிலில் டேரா போட்டுள்ளார். அவரை அவருடைய தம்பிகள் ஞானம் மற்றும் கதிர் சந்திக்கிறார்கள். அப்போது வக்கீலும் உடன் இருக்கிறார். அவர் ஆதி குணசேகரனிடம் நாளைக்கு பெட்டிஷன் விசாரணைக்கு வருது சார் என சொல்கிறார். அதேபோல் உங்க அண்ணி மட்டும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கனும் என கதிர் மற்றும் ஞானத்திடம் சொல்கிறார் வக்கீல். அப்போது குறுக்கிட்டு பேசும் ஆதி குணசேகரன், ஈஸ்வரி நிச்சயம் என்பக்கம் தான் நிப்பா என கான்பிடண்ட் ஆக சொல்கிறார்.
ஜனனியிடம் செண்டிமெண்டா பேசும் ஈஸ்வரி
ஆதி குணசேகரன் எதிர்பார்த்தபடியே, ஈஸ்வரி, தன்னுடைய கணவருக்காக ஜனனியை எப்படியாவது சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். வீட்டில் பந்தக்கால் நட வந்த ஜனனியிடம் பேசுகிறார் ஈஸ்வரி, அப்போது, இந்த குடும்பத்துக்கு ஆகாதவங்களோட நீ சேர்ந்து நிக்குற, நம்ம வீடு, நம்ம குடும்பம்னு நினைச்சா நீ இப்போ செய்யுறதெல்லாம் செய்ய மாட்ட ஜனனி. எந்த பிரச்சனை வந்தாலும் விட்டுக்கொடுத்து போறது தான் வாழ்க்கை. அதனால் நீயும் விட்டுக்கொடுத்து போ என செண்டிமெண்டாக பேசுகிறார் ஈஸ்வரி.
அக்காவுக்கு அடிபணியாத ஜனனி
ஆனால் இதற்கெல்லாம் மனம் இறங்காத ஜனனி, அவரையே எதிர்த்து நிற்கிறார். நீங்க என்ன சொல்லி என் மனசை மாத்த முயற்சித்தாலும் அதை கேக்குற நிலைமையில் நான் இல்லை. நாளைக்கு நான் கோர்ட்டுக்கு போக தான் போறேன். அந்த கடவுளே இறங்கி வந்து வேண்டாம்னு சொன்னாகூட நான் விடமாட்டேன். தப்பு பண்ணவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என ஈஸ்வரியின் மூஞ்சில் அடித்தவாறு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

