MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்

Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனின் திருமணத்தில் கலந்துகொள்ள சக்திக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார் ஈஸ்வரி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 18 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறதுசீரியலில் ஜனனி, ஆதி குணசேகரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு ஆதி குணசேகரன் ஆப்செண்ட் ஆகி இருந்தாலும் அவருக்கு பதிலாக அவருடைய தம்பிகள் மற்றும் மனைவி ஈஸ்வரி ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனனி தரப்பு தொடர்ந்த வழக்கு முழுக்க முழுக்க ஒரு பொய் வழக்கு என்றும் கூறினார். அப்போது நீதிபதி, இந்த கேஸில் முக்கிய நபரே ஆதி குணசேகரன் தான். அவர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
வழக்கு ஒத்திவைப்பு
Image Credit : youtube/suntv

வழக்கு ஒத்திவைப்பு

வழக்கம்போல் ஒரு கட்டுக் கதையை அவிழ்த்துவிடும் வக்கீல், குணசேகரனுக்கு உடம்பு சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்டு ஈஸ்வரியே ஷாக் ஆகிறார். மறுபுறம் இருக்கு ஜனனி தரப்பு வக்கீல், அவர் கூறுவது பொய் என வாதிடுகிறார். பின்னர் குறுக்கிடும் நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குணசேகரனால் ஆஜராக முடியாததால், இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிடுகிறார். இதனால் குணசேகரன் தரப்பு நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Related image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
35
சவால்விட்ட ஜனனி
Image Credit : youtube/suntv

சவால்விட்ட ஜனனி

பின்னர் வெளியே வந்ததும் அவர்களிடம் ஜனனி வந்து பேசுகிறார். அப்போது ஈஸ்வரியிடம், இப்போ வேண்டுமானால் உங்களுக்கு சாதகமாக உத்தரவு வந்திருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குணசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஜனனி சென்றதும், அவருக்கு என்ன ஆச்சு எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு வக்கீல், அதையெல்லாம் இப்போ கேட்காதீங்க, நான் வீட்டுக்கு வந்து எல்லா விஷயத்தையும் சொல்றேன் என கூறுகிறார்.

45
சக்தியை கல்யாணத்துக்கு அழைக்கும் ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

சக்தியை கல்யாணத்துக்கு அழைக்கும் ஈஸ்வரி

மறு தினமே வீட்டில் தர்ஷனுக்கான கல்யாண வேலைகள் தடபுடலாக நடக்கின்றன. ஆதி குணசேகரனும் வீட்டுக்கு வந்துவிடுகிறார். சக்திக்கு போன் போட்டு தர்ஷனுக்கும், பார்கவிக்கும் கல்யாணம் நடக்கப்போகுது, அதில் கலந்துகொள்ள நீ வரணும்னு நாங்க ஆசைப்படுறோம் என கூறுகிறார். அப்போது ஜனனி அருகில் இருக்க, அவரிடம் போன் கொடுக்கவா என சக்தி கேட்க, வீட்டு ஆம்பளைய கூப்பிட்டால், வீட்டில் இருக்குற எல்லாரையும் கூப்பிட்ட மாதிரி தான், அதனால் தான் நான் உனக்கு போன் பண்ணுனேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார் ஈஸ்வரி.

55
கல்யாணத்துக்கு போக மறுக்கும் சக்தி
Image Credit : youtube/suntv

கல்யாணத்துக்கு போக மறுக்கும் சக்தி

ஜனனியை அழைக்காததால், சக்தியும் அந்த கல்யாணத்துக்கு போக மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறார். மறுதினம் காலையில் ஜனனி, சக்தியிடம் சென்று, போய் கிளம்பு கல்யாணத்தை அட்டண்ட் பண்ணிட்டு வா என சொல்கிறார். அதற்கு சக்தி, உன்கிட்ட ஒரு வார்த்தைகூட அவங்க சொல்லல, உன்னை வானு கூப்பிடல, உனக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கு ஒரு மன்னும் தேவையில்ல. நான் அந்த கல்யாணத்துக்கு போக மாட்டேன் என சொல்லிவிடுகிறார். சக்தி தன்னை மதித்து எடுத்த இந்த முடிவால் எமோஷனல் ஆகிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved