- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?
Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?
Siragadikka Aasai Serial 26 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு புது வரன் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் ஏற்றாரா? இல்லையா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் ஷோரூமில் இருக்கும் போது அவரை பார்க்க கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய அம்மாவும் வருகிறார்கள். அந்த பெண் வந்தால், ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுப்பார் மனோஜ். அந்த வகையில் இன்று அந்த பெண் வருவதை பார்த்ததும் ஆப்பிள் ஜூஸ் வாங்க கிளம்பிவிட்டார் சந்தோஷ். இதையடுத்து கனகாவின் அம்மா மனோஜிடம் நான் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். பின்னர் இருவரும் அமர்ந்து முக்கிய விஷயத்தை பற்றி பேசுகிறார்கள்.
Pandian Stores 2 : செந்தில் ஆபிஸில் ரெய்டுவிட்ட அதிகாரிகள்... லஞ்ச பணத்துடன் சிக்கியது யார்... யார்?
மனோஜுக்கு ஷாக் கொடுத்த கனகா அம்மா
கனகாவின் அம்மா, நாங்க என் பொண்ணுக்கு நிறைய ட்ரீட்மெண்ட் பார்த்துட்டோம். எதுவும் கைகொடுக்கல. இறுதியா, அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவ சரியாகிடுவான்னு டாக்டர் சொன்னாரு. அதனால் அவளுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருக்கோம். அது விஷயமா தான் உங்களை பார்த்து பேச வந்தோம் என கனகாவின் அம்மா சொல்ல, ஓஹோ கல்யாணத்துக்கு சீர் வரிசைக்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருக்கீங்களா என மனோஜ் கேட்கிறார். அதற்கு அவர் கல்யாண மாப்பிள்ளையை பார்க்க வந்திருக்கோம் என சொல்கிறார்.
கல்யாணத்துக்கு ஓகே சொல்வாரா மனோஜ்?
பின்னர் மனோஜ், மாப்பிள்ளை எங்க என கேட்க, அதற்கு கனகாவின் அம்மா என் எதிரில் தான் உட்கார்ந்திருக்கிறார் என சொன்னதும், என்னது நான் மாப்பிள்ளையா என ஷாக் ஆகிறார் மனோஜ். பின்னர் அவரிடம் எனக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு, அது எல்லாமே என் பொண்ணுக்கு தான் என சொன்னதும், மனோஜின் மைண்ட் மாறுகிறது. இதுகுறித்து உங்கள் முடிவை உடனே சொல்ல வேண்டாம், நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க என சொல்லிவிட்டு கனகாவின் அம்மா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
முத்து வீட்டுக்கு வரும் அடியாட்கள்
இதையடுத்து வீட்டுக்கு செல்லும் மனோஜ், அங்கு இந்த விஷயம் தொடர்பாக யோசித்துக் கொண்டிருக்க, சில ரெளடிக்கள் வீட்டுக்கு வந்து முத்து எங்கடா என கேட்டு மனோஜை அடிக்கிறார்கள். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தும் முத்து, யார்ரா நீங்க என கேட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து சிந்தாமணியும் அவரது கணவரும் உள்ளே வருகிறார்கள். பின்னர் தான் அது அவர்கள் அனுப்பிய ஆள் என்பது தெரியவருகிறது. உள்ளே வந்ததும், என் பொண்ண எங்கடா என கேட்டு முத்துவை மிரட்டுகிறார் சிந்தாமணி.
பிரச்சனை பண்ணும் சிந்தாமணி
அப்போது அங்கு வரும் விஜயா, எனக்கு துரோகம் பண்ணுனேல அதான் உனக்கு இப்படி நடக்குது என சாபம் விட, பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணை இந்த மீனாவின் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வக்கிறீங்களா என கேட்டு பிரச்சனை பண்ணும் சிந்தாமணி, தன்னுடைய அடியாட்களை ஏவிவிட்டு அடிக்க சொல்ல, அப்போது அங்கு அக்கம் பக்கத்தினர் வந்துவிடுகிறார்கள். அவர்கள் வந்து போலீசில் புகார் அளிக்கப்போவதாக சொன்னதும், சிந்தாமணியும், அவரது ஆட்களும் அங்கிருந்து செல்கிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

