- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து
Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து
Siragadikka Aasai serial 24 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், கிரிஷ் மீது ஸ்கூலில் இருந்து புகார் வந்ததை அடுத்து அவரை அடிவெளுத்துள்ளார் ரோகிணி. அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ், விஜயாவை ரூமுக்குள் அழைத்து சென்று, தன்னுடைய ஷோரூமிற்கு நியூமராலஜிஸ்ட் ஒருவர் வந்ததாகவும், அவர் என்னுடைய பெயரில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். இனிமேல் என்னை எல்லாருமே பப்பரப்பா மனோஜ்னு தான் கூப்பிடனும் என சொன்னதுமே விஜயாவுக்கு ஷாக் ஆகிறது. என்னடா இது பப்பரப்பா கேக்குறதுக்கே காமெடியா இருக்கு என விஜயா சொல்ல, நீ தான் வீட்டுல இருக்குற எல்லார்கிட்டையும் சொல்லி என்னை அப்படி கூப்பிட சொல்லணும் என கூறுகிறார். அப்படி கூப்பிட்டால் நான் மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆவேன் என கூறுகிறார்.
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
விஜயா போடும் கண்டிஷன்
இதையடுத்து வெளியே வரும் விஜயா, எல்லோரையும் அழைத்து, இதுக்கப்புறம் யாரும் இவனை மனோஜ்னு கூப்பிடக்கூடாது. இவன் ஒரு நியூமராலஜிஸ்ட்டை சந்தித்திருக்கிறான். அவர் இவன் பெயரை மாத்தினா பெரிய ஆளா வருவனு சொல்லிருக்காருனு சொல்ல, அப்போது அருகில் இருந்த ரவி, ஏண்டா இந்த அளவுக்கு படிச்சிருக்க, இன்னுமா ஜோசியத்தை நம்புற, ஏற்கனவே ஜோசியர் சொன்னாருன்னு விதவிதமா, கலர் கலரா டிரெஸ்ஸ மாத்திக்கிட்டு இருந்த, இப்போ என்ன கலர் பொடியை பூசிட்டு போக போறியானு எல்லாரும் கிண்டல் பண்ணுகிறார்கள்.
வயிறு குலுங்க சிரிக்கும் அண்ணாமலை
அதெல்லாம் இல்ல, இப்போ என்னோட பெயரை மாத்தி இருக்கேன். அப்படி தான் நீங்க கூப்டனும்னு சொன்னதும், அப்படி என்னதான் மாத்திருக்க என முத்து கேட்க, இதுக்கப்புறம் என்னை எல்லாருமே பப்பரப்பா மனோஜ்னு தான் கூப்டனும் என சொன்னதும் எல்லாருமே விழுவிழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். யாராலும் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல, அண்ணாமலை கூட பயங்கரமா சிரிக்கிறார். இவங்க எல்லாரும் சிரிப்பதை பார்த்து மனோஜுக்கும் விஜயாவுக்கும் பயங்கரமாக கோபம் வருகிறது. இப்போ எதுக்காக எல்லாரும் சிரிக்கிறீங்க, மனோஜுக்கு நல்லது நடக்குறது பிடிக்கலையா என கேட்கிறார் விஜயா.
கிண்டலடிக்கப்படும் மனோஜ்
அதுமட்டுமின்றி இனிமேல் இவனை பப்பரப்பா மனோஜ்னு தான் எல்லாரும் கூப்பிடனும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார் விஜயா. என்னது பப்பரப்பாவா நான் கலாய்ச்சா திட்டுவீங்க, இப்போ நீங்களே இவனை கலாய்க்க சொல்றீங்களா, சரி அதுதான் உங்க ஆசை என்றால் அப்படியே கூப்பிடுறேன்னு சொல்லிட்டு, வேண்டுமென்றே, ஏய் பப்பரப்பா... பப்பரப்பானு சொல்லி மனோஜை கிண்டல் பண்ண ஆரம்பிக்கிறார்கள். பப்பரப்பானு மட்டும் கூப்பிடக் கூடாது பப்பரப்பா மனோஜ்னு சேர்த்து கூப்பிடனும்னு மனோஜ் சொன்ன உடனே, எல்லாருமே அதுமாதிரி சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள்.
கிரிஷை அடித்த ரோகிணி
மறுபுறம் ரோகிணியிடம் அவரது அம்மா, கிரிஷ் பற்றி புகார் கூறுகிறார். அவன் ஸ்கூலில் பொய் சொல்லுவதாகவும், பிள்ளைகளை அடிப்பதாகவும் சொல்கிறார். டிசி வாங்கிட்டு போக சொல்றாங்க என அவர் சொன்னதும், ரோகிணி, கிரிஷிடம் சென்று இதெல்லாம் எங்க இருந்துடா கத்துக்கிட்டனு கேட்டு அவரை அடிக்கிறார். அதற்கு கிரிஷ், இதெல்லாம் உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்னு கிரிஷ் மூஞ்சிக்கு நேரா சொல்கிறார். இதைக் கேட்டதும் ஷாக் ஆகிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

