MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : லஞ்சம் வாங்குறீங்களா? மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன செந்தில் - பணத்தால் வெடிக்கும் பிரச்சனை

Pandian Stores 2 : லஞ்சம் வாங்குறீங்களா? மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன செந்தில் - பணத்தால் வெடிக்கும் பிரச்சனை

Pandian Stores 2 Serial 24 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலிடம் வீட்டில் இருந்த பணத்தை பற்றி விசாரணை நடத்தி உள்ளார் மீனா. இதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 24 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கிய பணத்தை வீட்டில் வந்து வைத்திருந்த நிலையில், அதைப்பார்த்த மீனா, உங்ககிட்ட ஏது இவ்வளவு பணம் என சந்தேகத்துடன் கேட்க, அது தன்னுடைய சேவிங்ஸ் பணம் என சொல்லிவிட்டு ஆபிஸுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் செந்தில். இதையடுத்து மீனாவும் வேலைக்கு போனதை அடுத்து, அந்த பணத்தை பீரோவில் இருந்து எடுத்து தன்னுடைய மாமனாரிடம் கொடுத்துவிடுகிறார். அவரும் தான் பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
செந்திலிடம் விசாரிக்கும் மீனா
Image Credit : jiohotstar

செந்திலிடம் விசாரிக்கும் மீனா

ஆபிஸில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு போனால் மீனா ஏதாவது கேட்பாள் என பயந்து லேட்டாக வீட்டுக்கு வருகிறார் செந்தில். ஆனால் வீட்டில் மீனா அவருக்காக காத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் அவர், இன்னும் நீ தூங்கலையா என கேட்கிறார். பின்னர் மீனாவும் நீங்க சாப்பிடுறீங்களா என கேட்க, அப்பாடா பண விஷயத்தை மறந்துட்டா என செந்தில் நினைக்க, நான் ஆபிஸில் வேலை பார்ப்பவர்களுடன் வெளியே சாப்பிட்டுட்டு வந்துட்டேன் என கூறுகிறார். பின்னர் அந்த பணத்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார் மீனா.

Related Articles

Related image1
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
Related image2
Pandian Stores 2 : குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தாரா முத்துவேல்? விசாரணையில் திடீர் திருப்பம்
35
பொய் சொல்லும் செந்தில்
Image Credit : jiohotstar

பொய் சொல்லும் செந்தில்

ஆஹா இவ இன்னும் அதை மறக்கலையா என மைண்ட் வாய்ஸில் பேசிக்கொள்ளும் செந்தில், அது என்னோட சேவிங்ஸ் பணம் தான் மீனா என சொல்ல, அதில் எவ்வளவு இருந்தது என மீனா கேட்கிறார். அதற்கு அவர் 10 ஆயிரம் இருக்கும் என சொல்கிறார். இல்லையே லட்சக்கணக்கில் இருந்தது மாதிரி தெரிஞ்சது என துருவி துருவி கேட்கும் மீனா, எங்க லாக்கரை ஓப்பன் பண்ணுங்க பார்க்கலாம் என சொல்கிறார். அப்போது தான் பணம் தற்போது லாக்கரில் இல்லை, என்னுடைய ஃபிரெண்டு ஒருத்தன் கடனா கேட்டான், அவனிடம் கொடுத்துட்டேன் என கூறுகிறார்.

45
நம்ப மறுக்கும் மீனா
Image Credit : jiohotstar

நம்ப மறுக்கும் மீனா

அப்போது மீனாவுக்கு மேலும் சந்தேகம் வலுக்கிறது. நீங்க ஏதும் லஞ்சம் வாங்குறீங்களா என ஓப்பனாக கேட்டுவிடுகிறார் மீனா. அதற்கு பதற்றத்துடன் பதிலளிக்கும் செந்தில், அதெல்லாம் நான் வாங்கல நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க என சொல்ல, நீ நம்பலேனா வந்து லாக்கரை பாரு என திறந்து காட்டுகிறார் செந்தில். எவ்வளவு நாளா அந்த பணம் இங்க இருந்துச்சு என மீனா கேட்க, அது கொஞ்சநாளா இருந்துச்சு என சொல்லும் செந்திலிடம், அப்போ நான் கேட்ட உடனே அந்த பணம் காணாம போச்சுனா என்ன அர்த்தம் என கேட்கிறார் மீனா.

55
வெடிக்கும் பிரச்சனை
Image Credit : jiohotstar

வெடிக்கும் பிரச்சனை

நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி டயர்டாகிட்டேன், நான் போய் தூங்குறேன் என சொல்லிவிட்டு செல்கிறார் செந்தில். பின்னர் மறுநாள் காலையில், எழுந்ததும் மீனாவிடம் வந்து பேசுகிறார் செந்தில், அப்போது நான் கேட்ட கேள்விக்கு இன்னைக்காவது பதில் வருமா என மீண்டும் அந்த பண விஷயத்தை இழுக்கிறார் மீனா. இதையடுத்து டென்ஷன் ஆன செந்தில், உனக்கு ஏன் என்மேல நம்பிக்கை இல்லை என கேட்க, உங்ககிட்ட அவ்வளவு பணம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. லஞ்சம் வாங்குனா வேலையே போயிடும் தெரியும்ல என சொல்ல, செந்தில் பதறிப்போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா
Recommended image2
Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!
Recommended image3
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
Related Stories
Recommended image1
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தாரா முத்துவேல்? விசாரணையில் திடீர் திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved