MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?

Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?

Pandian Stores 2 Serial Twist : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் லஞ்சம் வாங்கிய செந்தில் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 23 2026, 12:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Twist
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Twist

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செம விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது மற்றுமொரு அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது. இந்த சீரியலில் செந்திலும் மீனாவும் தனியாக குவாட்ரஸில் வசித்து வரும் நிலையில், தன்னுடைய மருமகனுக்கு ஆசையை தூண்டிவிட்ட மீனாவின் அப்பா, அவரை லஞ்சம் வாங்குமாறு கூற, செந்திலும் லஞ்சம் வாங்கத் தொடங்கினார். தற்போது அவருக்கு அது பழக்கமாக மாறிவிட்டது.

Siragadikka Aasai : மீனாவுக்கு என்ன ஆச்சு? சிந்தாமணியிடம் சண்டையிட்ட முத்து - காத்திருந்த எதிர்பாரா திருப்பம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லஞ்சம் வாங்கும் செந்தில்
Image Credit : jiohotstar

லஞ்சம் வாங்கும் செந்தில்

அரசு வேலையாக இருந்தாலும் அதில் லஞ்சம் வாங்கினால் தான் முன்னேற முடியும் என ஆசைவார்த்தை கூறி, அவரை லஞ்சம் வாங்க வைத்துவிட்டார் மீனாவின் அப்பா. லஞ்சம் வாங்கிய பணத்தை வைத்து தான் தன்னுடைய தந்தைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்தார் செந்தில். அப்போதே இவ்வளவு பணம் எப்படி வந்தது என சந்தேகப்பட்டு மீனா கேட்க, அது தன்னுடைய சேவிங்ஸ் பணம் என கூறி மழுப்பினார் செந்தில். அப்போதே அவர் என்றாவது ஒருநாள் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Related Articles

Related image1
ராஜியை வாழ்த்திய சக்திவேல்... கோமதியின் முடிவால் அப்செட் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related image2
தங்கமயில் ரகசியம் முதல் அம்மாச்சியைத் துரத்திய கதிர் வரை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திருப்பங்கள்!
35
மீனாவுக்கு வந்த டவுட்
Image Credit : jiohotstar

மீனாவுக்கு வந்த டவுட்

அந்த தருணம் தற்போது வந்துள்ளது. செந்தில் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை வைத்திருப்பதை பார்த்த மீனா, உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்க, அதற்கு செந்தில், நான் சேமித்து வைத்த பணம் என சொல்கிறார். உடனே மீனா, எனக்கு ஏதோ தப்பா இருக்குதுங்க என சொல்ல, அப்போது பீரோவை பூட்டிவிட்டு, தனக்கு வேலைக்கு டைம் ஆகிவிட்டதாக கூறிவிட்டு எஸ்கேப் ஆகிறார் செந்தில்.

45
செந்தில் ஆஃபிஸில் அதிகாரிகள் ரெய்டு
Image Credit : jiohotstar

செந்தில் ஆஃபிஸில் அதிகாரிகள் ரெய்டு

ஆபிஸுக்கு சென்றதும், செந்திலிடம் கையெழுத்து வாங்க, ஒரு ஃபைலை கொண்டு வந்து நீட்டுகிறார் ஒருவர். அப்போது செந்தில் அருகே சென்று, உங்களுக்கு வர வேண்டியது வந்துவிட்டது கையெழுத்து போடுங்க சார் என கூறி, ஃபைலுக்குள் ஒளித்து வைத்திருந்த பணக்கட்டை எடுத்து செந்திலிடம் கொடுக்கிறார். அப்போது தன்னுடைய மேஜையில் உள்ள டிராவில் அந்த பணத்தை வைக்க செந்தில் முயல, அதில் இடமில்லாமல் போகிறது. பின்னர் அந்த நபரிடம் அதை நீயே வச்சிக்கோ எனக் கூறிவிடுகிறார் செந்தில்.

55
வசமாக சிக்கும் செந்தில்?
Image Credit : jiohotstar

வசமாக சிக்கும் செந்தில்?

அந்த பணத்தை அந்த நபர் தன்னுடைய பையில் வைத்துக் கொண்டே வெளியே கிளம்பும் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு ரெய்டு வருகிறார்கள். அதைக்கேட்டதும் செந்தில் ஷாக் ஆகிறார். அநேகமாக செந்தில் இந்த சோதனையில் சிக்க வாய்ப்பு உள்ளது. அவர் லஞ்சம் வாங்கியது உறுதியானால் அவரின் அரசு வேலையும் பறிபோக வாய்ப்பு உள்ளது. வேலை பறிபோனால் செந்தில் மீண்டும் தன்னுடைய தந்தையின் கடைக்கே வேலைக்கு செல்வதுபோல் கதைக்களம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனாவுக்கு என்ன ஆச்சு? சிந்தாமணியிடம் சண்டையிட்ட முத்து - காத்திருந்த எதிர்பாரா திருப்பம்
Recommended image2
Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்
Recommended image3
Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!
Related Stories
Recommended image1
ராஜியை வாழ்த்திய சக்திவேல்... கோமதியின் முடிவால் அப்செட் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
தங்கமயில் ரகசியம் முதல் அம்மாச்சியைத் துரத்திய கதிர் வரை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திருப்பங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved