- Home
- Cinema
- தங்கமயில் ரகசியம் முதல் அம்மாச்சியைத் துரத்திய கதிர் வரை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திருப்பங்கள்!
தங்கமயில் ரகசியம் முதல் அம்மாச்சியைத் துரத்திய கதிர் வரை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திருப்பங்கள்!
Pandian Stores 2 Serial Last Week All Episode: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் அதாவது 771ஆவது எபிசோடு முதல் 776ஆவது எபிசோடு வரை என்ன நடந்தது என்பதை ஹைலைட்ஸாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பாண்டியன் மட்டுமின்றி கோமதி, ராஜீ, அரசி, காந்திமதி, செந்தில் என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சரவணனிடம் இதைப் பற்றி கேட்கவே அவரும் தனக்கு இந்த உண்மை தெரியும். ஆனால், அவர் பொய் சொல்வதாக நான் நினைத்துக் கொண்டேன் என்று கூறிவிட்டார்.
தங்கமயில் ரகசியம், Thangamayil secret
என்னதான் தான் அப்பாவாக போவதாக இருந்தாலும் சரவணனுக்கு மீண்டும் தங்கமயில் உடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. அதே போன்று தனது முன்னாள் காதலியான அஞ்சலியை பிரியவும் மனமில்லை. தங்கமயில் உடனான பிரிவுக்கு பிறகு சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். சரவணன் கல்லூரி படிக்கும் போது இருவரும் காதலித்த நிலையில் தனது பெற்றோருக்காக அந்த பெண்ணை சரவணன் ஏற்றுக்கொள்ளவில்லை.
Pandian Stores 2 Highlights
ஆனால், இப்போது அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கும் சரவணனுக்கு தங்கமயில் கர்ப்பமாக இருப்பது சந்தோஷத்தை கொடுத்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. குழந்தையை ஏற்றுக் கொள்ளும் சரவணன் அஞ்சலியை ஏமாற்றமாட்டேன் என்று அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார். ஆனால், கோமதியோ தங்கமயிலுக்கு உன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை தான் எங்கவீட்டு வாரிசு. உன்னை அப்படியே விட்டுவிட மாட்டோம் என்று கூறி அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார்.
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
ஏற்கனவே சரவணன் அஞ்சலி காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பாண்டியன், இப்போது அமைதியாக இருப்பது சரவணனுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. மீண்டும் சரவணன் மற்றும் தங்கமயில் ஒன்று சேர்வார்களா அல்லது சரவணன் அஞ்சலி காதல் கைகூடுமா என்பது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் டுவிஸ்ட். இது ஒரு புறம் இருக்க தனது தாய்மாமாவின் குடல் புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னதாக அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக காந்திமதி அம்மாச்சியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்க கதிர் பல டிராமா போட்டார்.
கதிர் மற்றும் அம்மாச்சி சண்டை, Kathir and Ammachi fight
ஆனால், எதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை. கடைசியில் வீட்டில் ஒரே வெப்பமாக இருக்கிறது. என்னுடைய வீட்டில் ரூமில் ஏசி இருக்கும். அதனால் எனக்கு வெப்பம் தெரியாது என்று கூறியதைத் தொடர்ந்து சண்டை போட்டு கதிர் தனது அம்மாச்சியை வீட்டை விட்டு துரத்திவிட்டார். இதன் காரணமாக சக்திவேல் தனது தவறை உணர்ந்து தனது அம்மாவின் காலில் விழுந்து அவரை மீண்டும் தனது வீட்டிற்குள் அழைத்து சென்றார். இதன் காரணமாக இப்போது முத்துவேலுவின் ஆசை நிறைவேறிவிட்டது.
பார்ட்னருடன் ஜோடியா ஓடிடியில் பார்க்க... சூப்பரான டாப் 6 போல்ட் படங்கள்.. வேறலெவல்ல இருக்கும்!
தங்கமயில் ரகசியம், Thangamayil secret
முத்துவேலுவிற்கு குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது கதிரைத்தவிர குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு தெரியாது. இதைப்பற்றி முத்துவேலுவும் சரி, கதிரும் சரி யாரிடமும் சொல்லவில்லை. எப்போது முத்துவேலுவிற்கு குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இருவரது குடும்பத்திற்கு தெரிய வரும் என்பது இயக்குநர் வைத்திருக்கும் டுவிஸ்ட்.
Pandian Stores 2 today episode
கடைசி டுவிஸ்டாக பழனிவேல் அப்பாவாக போகும் விஷயத்தை ரொம்பவே சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். தனது அண்ணன்களிடமும், அக்கா, மாமாவிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுள்ளார். தங்கமயில் மற்றும் சுகன்யா இருவரும் மாசமாக இருக்கும் சூழலில் இதில் ஏதேனும் டுவிஸ்ட் அல்லது டிராமா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
விஜய் டிவி சீரியல் அப்டேட்ஸ், Vijay TV serial updates
ஒருவேளை ஒரு மாசமாக இருக்கும் தனது மனைவியை ஒரு கணவன் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுகன்யா மாசமாக இருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதன் மூலமாக சரவணன் மற்றும் தங்கமயில் இருவரையும் மீண்டும் ஒன்று சேரலாம் என்று தெரிகிறது. இப்படியான சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.