MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!

'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!

விஜய் நடித்த 'பிகில்' படத்துக்காக 6 மாதங்கள் வேலை செய்ததற்கு தனக்கு கம்மியான சம்பளம் மட்டுமே கிடைத்ததாக நடிகை இந்திரஜா ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indraja Robo Shankar First Salary
Image Credit : X

Indraja Robo Shankar First Salary

சினிமா நட்சத்திரங்களோட சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சுக்க ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் இருக்கும். ஆனா, அதுபத்தின அதிகாரப்பூர்வ தகவல்கள் எப்போதாவதுதான் வெளியே வரும். இப்போ, வெறும் ஆறு படங்கள் மட்டுமே நடித்துள்ள இளம் தமிழ் நடிகை இந்திரஜா ஷங்கர், தன்னுடைய சம்பளத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி ஓப்பனாக பேசியிருக்கார். தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடியனும், நடிகருமான ரோபோ ஷங்கரின் மகள்தான் 22 வயதான இந்திரஜா. 2019-ல் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படம் மூலமாதான் இவர் சினிமாவுக்குள்ளே வந்தார். அந்தப் படத்துல, விஜய்யுடன் சேர்ந்து வர்ற பாண்டியம்மா என்கிற கேரக்டர்ல நடிச்சிருந்தார் இந்திரஜா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிகில் படத்துக்காக இந்திரஜா வாங்கிய சம்பளம்
Image Credit : AGS Entertainment, INDRAJA ROBO SANKAR/ Instagram

பிகில் படத்துக்காக இந்திரஜா வாங்கிய சம்பளம்

'டேட் வித் அசார்' என்ற யூடியூப் சேனலுக்கு கொடுத்த ஒரு பேட்டியில்தான் தன்னுடைய சம்பளம் பற்றி இந்திரஜா பேசியிருக்கார். முதல் படமான 'பிகில்'-ல வாங்குன சம்பளமா அல்லது கடைசியா நடிச்ச 'TN 2026'-ல வாங்குன சம்பளமா எது அதிகம்னு அவர்கிட்ட கேட்கப்பட்டது. அதுக்கு இந்திரஜா சொன்ன பதில் தான் ஹைலைட்: “பிகில் படத்துக்காக நான் 180 நாள் வேலை செஞ்சேன். அதாவது ஆறு மாசம். டப்பிங் உட்பட எல்லா வேலையும் சேர்த்துதான் இந்த கணக்கு. இது எல்லாத்துக்கும் சேர்த்து எனக்கு கிடைச்ச சம்பளம் 3 லட்சம் ரூபாய்தான். அந்த நேரத்துல நான் புதுமுகம் இல்லையா. அதனால, பிகில் வாய்ப்பை விட்டுடாதேன்னு அப்பா என்கிட்ட சொன்னார்,” என்று இந்திரஜா கூறினார்.

34
ரோபோ சங்கர் சொன்ன அட்வைஸ்
Image Credit : Asianet News

ரோபோ சங்கர் சொன்ன அட்வைஸ்

“அப்பா, தன்னோட 15 வருஷ சினிமா வாழ்க்கைக்கு அப்புறம்தான், கிரீன் மேட்லயாச்சும் விஜய் சாரோட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதுன்னு சொன்னார். 'புலி' படத்துல கிரீன் மேட் சீன்ல அப்பா நடிக்கும்போது, விஜய் சார் ஸ்பாட்ல இல்ல. அவர் தனியா வந்து ஷூட் பண்ணுவார். ஆனா, படத்துல பார்க்கும்போது ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்ச மாதிரி இருக்கும். ஆனா உனக்கு முதல் படத்துலேயே விஜய் சாரோட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதனால சம்பளத்தை பார்க்காதேன்னு சொன்னார். அதே சமயம், 'TN 2026' படத்துல நான் ஒரே ஒரு நாள்தான் நடிச்சேன். அதுக்கு எனக்கு 40,000 ரூபாய் சம்பளம் கிடைச்சது,” என்று இந்திரஜா விளக்கினார்.

44
TN 2026 படத்தில் இந்திரஜா ரோபோ சங்கர் நடித்தது ஏன்?
Image Credit : Instagram

TN 2026 படத்தில் இந்திரஜா ரோபோ சங்கர் நடித்தது ஏன்?

இந்திரஜா தனது குடும்ப உறுப்பினர் போல கருதும் தம்பி ராமையாதான் 'TN 2026' படத்தின் கதையை எழுதியுள்ளார். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். தனக்கு ஒரு கம்பேக் கொடுத்தது அவர்தான் என்பதால், சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் அந்த ரோலை ஒப்புக்கொள்வதாக தான் கூறியிருந்ததாகவும் இந்திரஜா குறிப்பிட்டார். ஆனால், தயாரிப்பாளர்கள் ஒரு நாள் படப்பிடிப்புக்கு 40,000 ரூபாய் கொடுத்ததாக அவர் கூறினார். 'TN 2026' திரைப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அரசியல் நையாண்டி படமான இது கடந்த ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திரஜா ரோபோ சங்கர்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Indraja: தம்பி ரொம்ப தேடுறான்பா... உனக்கும் பிடிச்ச போட்டோ இது! உருக்கமாக பதிவிட்ட இந்திரஜா சங்கர்!
Recommended image2
சதம் அடித்த ரோபோ ஷங்கர் பேரன்! குடும்பத்தோடு கொண்டாடிய இந்திரஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved