- Home
- Cinema
- தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் ரஜினியை முந்திய விஜய்... 5 ஆயிரம் கோடியுடன் டாப்பில் உள்ளது யார்?
தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் ரஜினியை முந்திய விஜய்... 5 ஆயிரம் கோடியுடன் டாப்பில் உள்ளது யார்?
Top 10 Richest South Indian Actors : தென்னிந்தியாவில் அதிக சொத்து மதிப்புகளை கொண்ட நடிகர்கள் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதில் தமிழ் நடிகர்களும் இருக்கிறார்கள்.

Top 10 Richest South Indian Actors
இந்தியத் திரையுலகில் நடிகர்களின் புகழ் மற்றும் ரசிகர் பட்டாளத்தைப் போலவே அவர்களது சொத்து மதிப்பும் அவ்வப்போது பேசப்படும் விஷயமாக உள்ளது. குறிப்பாக, தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, விளம்பரங்கள், தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு முதலீடுகள் மூலமாகவும் தங்களது சொத்து மதிப்பை அதிகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், 2026-ம் ஆண்டில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர்கள் யார் என்ற பட்டியல் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த PropGo Realty நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, தென்னிந்திய நடிகர்களில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அகினேனி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.5,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக வெளியான Hurun India Rich List பட்டியலிலும் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இந்திய நடிகர்களில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை அவர் பிடித்திருந்தார். ஷாருக்கானின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு தொழில் முதலீடுகளிலும் நாகார்ஜுனா கவனம் செலுத்தி வருவதால் இந்த அளவிலான சொத்துகளைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர்களின் ஆதிக்கம்!
தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்களே அதிக இடங்களைப் பிடித்துள்ளனர். குறிப்பாக, முதல் மூன்று இடங்களிலும் தெலுங்கு நடிகர்கள்தான் உள்ளனர். நாகார்ஜுனாவைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ரூ.1,700 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நடிகர் வெங்கடேஷ் டகுபதி சுமார் ரூ.1,650 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அடுத்ததாக, நடிகர் ராம் சரண் ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். ஜூனியர் என்டிஆர் ரூ.571 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தையும், அல்லு அர்ஜுன் ரூ.460 கோடி மதிப்புடன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜய், ரஜினியை முந்திய கமல்ஹாசன்!
இந்தப் பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் சொத்து மதிப்பும் சுமார் ரூ.450 கோடி என இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரஜினிகாந்தை விட விஜய் அதிக சொத்து மதிப்பைக் கொண்டிருப்பதோடு இந்த லிஸ்டில் 7ம் இடத்தில் உள்ளார்.
ஆனால், விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் இதைவிட அதிகமாக உள்ளன. அதன்படி, அவருடைய மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.624 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் அடங்கும்.
அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.450 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார். அடுத்ததாக 9ம் இடத்தில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு ரூ.430 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்த மகேஷ் பாபு!
இந்தப் பட்டியலின் கடைசி இடமான பத்தாவது இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.273 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கு நடிகர்கள் திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடம்பர வீடுகள், சொகுசு பங்களாக்கள், வணிக வளாகங்கள் மற்றும் நிலங்கள் எனப் பல்வேறு சொத்துகளையும் வைத்துள்ளனர். ஹைதராபாத்தைத் தாண்டி சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களிலும் இவர்களுக்குச் சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் சொத்து மதிப்பும் கணிசமான அளவில் இருப்பதாகப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், PropGo Realty வெளியிட்டுள்ள தென்னிந்தியாவின் முதல் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் இவர்கள் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















