- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : மீனாவுக்கு என்ன ஆச்சு? சிந்தாமணியிடம் சண்டையிட்ட முத்து - காத்திருந்த எதிர்பாரா திருப்பம்
Siragadikka Aasai : மீனாவுக்கு என்ன ஆச்சு? சிந்தாமணியிடம் சண்டையிட்ட முத்து - காத்திருந்த எதிர்பாரா திருப்பம்
Siragadikka Aasai Serial 22 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை காணவில்லை என வலைவீசி தேடி வந்த முத்து. அவரை கண்டுபிடித்தாரா? என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவை காணவில்லை என தேடி அலையும் முத்து, ஒருவேளை சிந்தாமணி தான் மீனாவை கடத்தி இருப்பாள் என நினைத்து முத்து, நேராக சிந்தாமணி வீட்டுக்கே சென்று, பிரச்சனை பண்ணுகிறார். அங்கு சென்று சிந்தாமணியுடன் சண்டைபோட, அப்போது அங்கிருந்த அடியாட்கள் முத்துவை அடிக்க வர, அவரும் அடிக்க பாய்கிறார். அப்போது தடுத்து நிறுத்தும் சிந்தாமணி, நாங்க யாரும் மீனாவை கடத்தவில்லை. நாங்க எங்க பொண்ணை தான் தேடிக்கிட்டு இருக்கோம், ஒழுங்கு மரியாதையா எங்க பொண்ணை எங்களிடம் ஒப்படைச்சிடுனு சொல்கிறார்கள்.
Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!
கடுப்பான முத்து
பின்னர் முத்து டென்ஷனோடு வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றால், மீனா வீட்டில் இருக்கிறார். அவரைப்பார்த்ததும் கடுப்பான முத்து, என்ன ஆச்சு என்றுகூட கேட்காமல் திட்டுகிறார். எங்க போயிருந்த, ஒரு வார்த்தை கூட சொல்லல, போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது என மீனாவிடம் சண்டை போடுகிறார். அதன்பின்னர் தான் மீனா, முத்துவை பொறுமையாக உட்கார வைத்து சாப்பாடு போட்டுக் கொடுத்து, பிரச்சனை என்னவென்று, சொல்கிறார்.
உண்மையை சொன்ன மீனா
பார்வதி ஆண்ட்டி வீட்டுக்கு போயிட்டு வர்ற வழியில், லட்சுமி அக்கா பொண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருச்சு. நான் தான் அவங்களை அழைச்சிட்டு போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணுனேன். அவங்களுக்கு சீரியஸ் ஆயிடுச்சு, அந்த டென்ஷன்ல உங்களுக்கு போனும் பண்ண முடியல. சார்ஜ் இல்லாம போன் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு. அங்க சார்ஜும் போட முடியலனு எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். அதன்பின்னர் தான் முத்துவுக்கு மனசு நிம்மதியா இருக்கு.
முத்துவிற்கு சர்ப்ரைஸ்
மறுநாள் காலையில், முத்துவை தேடி அவரது வீட்டிற்கு 3 பேர் வருகிறார்கள். முத்து சார் இருக்காங்களா என அவர்கள் கேட்டதும், ஷாக் ஆன விஜயா, என்னது முத்து சாரா என கேட்கிறார். தாங்கள் டிராவல்ஸ் அசோசியேசன் வைத்திருப்பதாகவும், அதில் முத்துவையும் மெம்பராக சேர்த்துக் கொள்ள இருப்பதாக கூறி, தாங்கள் கொண்டுவந்த மெம்பர் ஐடி கார்டை முத்துவின் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள். நீங்களும் இனிமேல் இந்த டிராவல்ஸ் அசோசியனின் ஒரு அங்கம் என கூறுகிறார்கள்.
பாராட்டு மழையில் நனையும் முத்து
அதுமட்டுமின்றி எதனால் என்னை இந்த அசோசியனில் சேர்த்தீர்கள் என முத்து கேட்க, நீங்க நிறைய பேருக்கு, குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு கம்மியான விலையில் டூர் அழைச்சிட்டு போறீங்கனு கேள்விப்பட்டோம் என முத்துவை பாராட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி முத்துவிற்கு சால்வை போர்த்தி மரியாதையும் செய்கிறார்கள். இதைப்பார்த்தும் அண்ணாமலை, மீனா ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள். வழக்கம்போல் விஜயா சிடுமூஞ்சாக நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

