- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!
Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!
Siragadikka Aasai Serial 20 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மா வீட்டிற்கு சென்ற மீனா, திடீரென காணாமல் போய் உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும், விஜயாவும் விவாகரத்து விவகாரம் தொடர்பாக பேச வக்கீலை சந்தித்துள்ளனர். அப்போது ரோகிணி 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துள்ள விஷயத்தை விஜயா, வக்கீலிடம் சொல்ல, இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தோன்றுவதாக கூறுகிறார் வக்கீல். இதையடுத்து, ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார் வக்கீல். அப்போது, நீ 5 லட்சம் ரூபாய் கொடுத்தால், டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவியா என கேட்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
5 லட்சம் கொடுத்தால் டைவர்ஸ்
தனக்கு ஒரே செட்டில்மெண்டாக 5 லட்சம் கொடுத்தால் தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுகிறேன் என கூறுகிறார். வக்கீலிடம் ஓப்பனாக சொன்னாலும், மனோஜுக்கு அந்த ஐந்து லட்சம் கிடைக்கக் கூடாது என மனசுக்குள்ளேயே வேண்டிக் கொள்கிறார் ரோகிணி. பின்னர் வக்கீல், மனோஜிடம் 5 லட்சத்தை ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க என சொல்ல, அதற்கு மனோஜ், அவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி ரெடி பண்ணுவேன் என கேட்கிறார். அதற்கு வக்கீல், உங்க தம்பி, ஒரே நேரத்துல 38 லட்சத்தை ரெடி பண்ணி உங்க வீட்டையே மீட்டிருக்கிறார். நீ பெரிய பிசினஸ் மேன்னு சொல்ற, உன்னால ஒரு 5 லட்சம் ரெடி பண்ண முடியாதா என கேட்கிறார் வக்கீல்.
மீனாவிடம் புலம்பிய சந்திரா
மறுபுறம் மீனாவுக்கு அவருடைய அம்மா சந்திரா போன் போட்டு, யாரோ ரெண்டு பேர் என்னை நோட்டமிடுகிறார்கள். எனக்கு பயமா இருக்குனு சொல்ல, நீங்க கவலைப்படாதீங்க, நாளைக்கு நான் வர்றேன் என மீனா சொல்கிறார். இதையடுத்து முத்துவிடம் இதுதொடர்பாக டிஸ்கஸ் பண்ணுகிறார் மீனா. பேசாம அம்மாவை பார்வதி ஆண்ட்டி வீட்டில் தங்க வைக்கலாம் என பிளான் போடுகிறார் மீனா. இதுதொடர்பாக பேச பார்வதியின் வீட்டிற்கு மறுநாள் காலையிலேயே கிளம்பி செல்கிறார் மீனா.
பார்வதியிடம் உதவி கேட்ட மீனா
அங்கு போய் இதுகுறித்து தயங்கி தயங்கி கேட்கிறார் மீனா. ஆனால் பார்வதி, இதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்குற, உன்னோட தம்பிக்கும், ரேகாவுக்கும் கல்யாணம் முடியும் வரை உங்க அம்மா என்கூடவே இருக்கட்டும். நீ உடனே போய் உங்க அம்மாவை அழைச்சிட்டு வா என மீனாவை அனுப்பி வைக்கிறார். இதையடுத்து மீனா தன்னுடைய அம்மாவை அழைத்து வருவதற்காக செல்கிறார். அதன்பின் மீனாவை காட்டவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து முத்து, மீனாவுக்கு போன் போட்டுகிறார். ஆனால் போன் போகவே இல்லை.
காணாமல் போன மீனா
அதேபோல் அண்ணாமலையும் மீனாவுக்கு போன் போட்டு பார்க்கிறார். லைன் கிடைக்கவே இல்லை. பின்னர் பார்வதி, சந்திரா ஆகியோருக்கும் போன் போட்டு விசாரிக்கிறார் முத்து. ஆனால் எங்குமே மீனா கிடைக்கவில்லை. பின்னர் பூ வியாபாரிகள் ஒவ்வொருவராக சந்தித்து விசாரிக்கிறார் முத்து. அப்போதும் மீனா கிடைக்கவில்லை. அநேகமாக மீனாவை சிந்தாமணியின் ஆட்கள் கடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. அவரை முத்து கண்டுபிடிப்பாரா? இல்லையா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

