- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!
Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!
Priyanka Deshpande Announces Pregnancy : விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Priyanka Deshpande Announces Pregnancy
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தாய்மையை வரவேற்கத் தயாராகி வரும் அவர், தனது கர்ப்ப செய்தியை சமூக வலைதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரியங்கா திருமணம்
விஜய் டிவியில் தொகுப்பாளராக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்து வரும் பிரியங்காவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, கடந்த ஆண்டு தொழிலதிபர் வாசி சச்சியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இலங்கையைச் சேர்ந்த தமிழரான வாசி சச்சி, அங்கு நிகழ்ச்சி மேலாண்மை துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். ஒரு கலை நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இவர்களின் நட்பு, பின்னர் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.
கர்ப்பத்தை அறிவித்த பிரியங்கா
திருமணத்திற்குப் பிறகும் தனது தொலைக்காட்சி பயணத்தைத் தொடர்ந்து வரும் பிரியங்கா, சென்னை மற்றும் இலங்கை என இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்து தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மூலம் ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில், பிரியங்காவும் அவரது கணவர் வாசி சச்சியும் "Mommy" மற்றும் "Daddy" என எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்து மகிழ்ச்சியாக காட்சியளிக்கின்றனர்.
வைரலாகும் இன்ஸ்டா பதிவு
மேலும், பின்னணியில் ஒலிக்கும் மென்மையான பாடலுடன் அமைந்துள்ள அந்த வீடியோ, இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வைகளை பெற்றுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குவியும் வாழ்த்து
பிரியங்காவின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, சின்னத்திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தாய்மையின் புதிய பயணத்தை தொடங்கியுள்ள பிரியங்கா மற்றும் வாசி சச்சி தம்பதியருக்கு ரசிகர்கள் அன்பும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

