- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Top 10 Tamil Serial TRP Rating : சின்னத்திரை சீரியல்களுக்கான டிஆர்பி ரேஸில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் சீரியலும் களத்தில் குதித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்ச்சியாக டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அந்த ரேஸில் ஜீ தமிழ் சீரியலும் இணைந்துள்ளது. அதேபோல் சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் போன்ற விஜய் டிவி சீரியல் சற்று பின்னடைவை சந்தித்திருக்கின்றன. அதே வேளையில் சன் டிவியின் அன்னம், மருமகள் ஆகிய சீரியல்கள் ஏற்றம் கண்டுள்ளன. இப்படி 2026-ம் ஆண்டின் 24வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரத்தில் எந்தெந்த சீரியல்கள் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
டாப் 10-ல் நுழைந்த கார்த்திகை தீபம்
ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரம், 10வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம், 5.11 புள்ளிகள் உடன் 11வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 5.23 புள்ளிகள் உடன் 10ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதுமட்டுமின்றி விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலும் இந்த வாரம் 5.23 டிஆர்பி உடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.16 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இது அந்த சீரியலின் ஒரு மணி நேர ஒளிபரப்புக்கு கிடைத்த டிஆர்பி ஆகும்.
ஏற்றம் கண்ட அன்னம் மற்றும் அழகே அழகு
இதையடுத்து 9-வது இடத்தில் விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் உள்ளது. கடந்த வாரம், 5.30 புள்ளிகள் உடன் 10ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 5.26 புள்ளிகள் உடன் 9ம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் அன்னம் சீரியல் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருக்கிறது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 5.92 புள்ளிகளும் இந்த வாரம் 5.85 புள்ளிகளும் கிடைத்துள்ளது.
சரிவை சந்தித்த சிறகடிக்க ஆசை
இந்த வாரம் 7-ம் இடத்தை விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரமும் இதே இடத்தில் இருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் 6.19 புள்ளிகள் கிடைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. அந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரம் 6-ம் இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 6.56 புள்ளிகள் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு 6.58 புள்ளிகளை பெற்றுள்ளது.
டாப் 4 சீரியல்கள் என்னென்ன?
கடந்த வாரம் 5-ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 6.95 புள்ளிகள் உடன் 4-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் 3ம் இடத்திலேயே நீடிப்பதோடு, 7.16 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் கயல் சீரியல் உள்ளது. அதற்கு 7.70 டிஆர்பி ரேட்டிங் உள்ளது. வழக்கம் போல் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு 8.59 புள்ளிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

