MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal : குணசேகரனுக்கு வில்லனாக மாறும் கதிர்... இராவணனின் சதியால் கைதாகும் ஜனனி...!

Ethirneechal : குணசேகரனுக்கு வில்லனாக மாறும் கதிர்... இராவணனின் சதியால் கைதாகும் ஜனனி...!

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இராவணன் செய்த சதி வேலையால் போலீசார் ஜனனியை கைது செய்துள்ளனர். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 16 2026, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ஜனனி, அங்கிருந்த அடியாட்களை தாக்கிவிட்டு, தர்ஷினியையும், சுவாமிநாதனையும் மீட்டு வருகிறார். செல்லும் வழியில் மற்றொரு கும்பல் ஜனனியை துரத்துகிறது. அந்த கும்பல் துரத்தி வரும்போதே துப்பாக்கிச்சூடும் நடத்தி உள்ளது. இதில் சுவாமிநாதனின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்துவிடுகிறது. இதனால் அவர் வலியால் துடிக்கிறார். பின்னர் ஒரு புதருக்குள் ஒளிந்துகொண்டதால், அந்த ரெளடி கும்பலிடம் இருந்து தப்பித்துவிடுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : சிந்தாமணிக்கு விபூதியடித்துவிட்டு ரேகாவை தூக்க பிளான் போடும் முத்து... சிக்கலில் மனோஜ்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜனனியை சுட்டுப் பிடிக்க உத்தரவு
Image Credit : youtube/suntv

ஜனனியை சுட்டுப் பிடிக்க உத்தரவு

ஜனனியும், அருந்ததியும் தர்ஷினியுடன் சேர்ந்து குண்டடிபட்ட சுவாமிநாதனை காரில் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். அப்போது செல்லும் வழியில் அருந்ததி போனில் நியூஸ் பார்க்கிறார். அதில் பிளாஷ் நியூஸ் ஆக, ஜனனி தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து செயல்படுகிறார் என ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜனனியை சுட்டுப் பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்படுகிறது. இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகிறார்.

Related Articles

Related image1
Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!
Related image2
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
35
உயிரிழந்த சுவாமிநாதன்
Image Credit : youtube/suntv

உயிரிழந்த சுவாமிநாதன்

பின்னர் சுவாமிநாதனை ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். எந்த தப்பும் செய்யாத ஒரு அப்பாவி இளைஞரான சுவாமிநாதன், தங்களால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் ஜனனி கண்ணீர்விட்டு அழுகிறார். சுவாமிநாதனை பரிசோதனை செய்யும் டாக்டரிடம் என்ன ஆச்சு என ஜனனி பதற்றத்துடன் கேட்க, அந்த டாக்டர், சுவாமிநாதன் இறந்துவிட்டதாக கூறுகிறார். இதைக்கேட்டதும் தர்ஷினி கண்ணீர்விட்டு கதறி அழுகிறார். ஜனனியும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த நேரத்தில் இராவணனுக்கு ஜனனி எங்கு இருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கிறது.

45
போலீஸை ஏவிவிட்ட இராவணன்
Image Credit : youtube/suntv

போலீஸை ஏவிவிட்ட இராவணன்

அப்போது தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு போன் போட்டு பேசும் இராவணன், உடனடியாக அந்த ஹாஸ்பிடலுக்கு சென்று அங்குள்ள தர்ஷினி என்கிற பொண்ணை விட்டுட்டு, மத்த ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணு என கூறுகிறார். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி, சார் எவிடன்ஸ் இல்லாம எப்படி அரெஸ்ட் பண்றது என கேட்க, அப்போது உனக்கு தேவையான எவிடன்ஸ் எல்லாம் நான் கொடுக்குறேன், நீ முதல்ல ஹாஸ்பிடலுக்கு போய் அந்த ஜனனியையும், அருந்ததியையும் அரெஸ்ட் பண்ணு என உத்தரவிடுகிறார்.

55
குணசேகரனை எதிர்க்கும் கதிர்
Image Credit : youtube/suntv

குணசேகரனை எதிர்க்கும் கதிர்

இதையடுத்து மருத்துவமனைக்கு கிளம்பி செல்லும் போலீஸ், ஜனனியை அரெஸ்ட் பண்ண வருகிறது. ஆனால் போலீஸை பார்த்ததும் பதற்றம் அடையும் ஜனனி, நடந்த எல்லா தப்பையும் சரி பண்ண நான் எப்படியாவது இங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். மறுபுறம் ஆதி குணசேகரன் தன்னை நம்பாமல், இராவணனை மலைபோல் நம்புவதால், கடும் கோபத்தில் இருக்கிறார் கதிர், என்னை யூஸ் பண்ணிட்டு அப்படியே தூக்கி போட்டுட்டான்ல, அவனை எதாச்சும் பண்ணனும் என கூறுகிறார் கதிர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணிக்கு விபூதியடித்துவிட்டு ரேகாவை தூக்க பிளான் போடும் முத்து... சிக்கலில் மனோஜ்..!
Recommended image2
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Recommended image3
Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Related Stories
Recommended image1
Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!
Recommended image2
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved