Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், தர்ஷினியை ஜனனி மீட்டு அழைத்துவந்த போது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, தர்ஷினியை மீட்க சென்றுள்ள நேரத்தில், ஆதி குணசேகரன் வீட்டுக்குள் நுழைந்த இராவணன், அவரின் நன்மதிப்பை பெற்றதோடு, தான் தர்ஷினியை மீட்டுக் கொண்டு வருவேன் என உறுதியளித்துள்ளார். தர்ஷினி சிறுமலை ஏரியாவில் தான் இருக்கிறார் என்றும், அவரை ஜனனி தான் கடத்திச் சென்றிருக்கிறார் என்றும் இராவணன் சொல்ல, அதைக்கேட்டு அனைவருமே ஷாக் ஆகிறார்கள். அவளை வெட்டி போட்டு தர்ஷினியை கூட்டிட்டு வர்றேன் என ஆதி குணசேகரன், ஆவேசமாக கிளம்ப அவரை தடுத்து நிறுத்தும் இராவணன், நான் கொண்டு வர்றேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட இராவணன்
அதுமட்டுமின்றி ஜனனியோடு இருக்கும் பெண் ஒரு பயங்கரவாதி என்றும் அவர்களை நாம் பாலோ பண்ணுவது தெரிந்தால் அது தர்ஷினி உயிருக்கு தான் ஆபத்து என்று சொல்லி ஆதி குணசேகரனை தடுத்து நிறுத்திய இராவணன், வீட்டை விட்டு வெளியே சென்றதும், தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு, தர்ஷினி உடன் இருக்கும் சுவாமிநாதனை சுட்டுக் கொல்லுமாரு கூறுகிறார். இதையடுத்து இராவணனின் ஆட்கள் வேகமாக சென்று சுவாமிநாதனை சுட்டுக் கொல்வதற்காக தேடுகிறார்.
தர்ஷினியை காப்பாற்றிய ஜனனி
அப்போது அங்கு ஒளிந்திருந்த தர்ஷினி, அவர்களை அடிக்கிறார். பதிலுக்கு அந்த அடியாட்களும் அவர்களை தாக்க, அப்போது ஒரு துப்பாக்கி சத்தம் கேட்கிறது. அந்த நேரத்தில் உள்ளே எண்ட்ரி ஆகும் அருந்ததி, இராவணனி ஆள் ஒருவரை காலிலேயே சுட்டுவிடுகிறார். பின்னர் ஜனனி வந்து அங்கிருந்த கட்டையை எடுத்து தர்ஷினியை பிடித்து வைத்திருந்த இரு பெண்களை தாக்குகிறார். இதையடுத்து அருந்ததியும், மீதமிருந்த ஒரு அடியாளையும் அடிச்சு சாய்த்துவிட்டு, தர்ஷினியை அங்கிருந்து வேகமாக மீட்டு செல்கிறார்.
புது கேங்கை இறக்கும் இராவணன்
பின்னர் இராவணன் போன் போட்டு முடிச்சிட்டியா என கேட்க, அதற்கு அந்த அடியாள், அவங்க எங்களை அடிச்சு போட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க என கூறுகிறார். உங்களை நம்புனது வேஸ்ட், இனி வேறொரு டீமை இறக்குறேன் என சொல்லி, மற்றொரு கேங்கை களத்தில் இறக்கி, அவர்களை காட்டுக்குள் தேடச் சொல்லி அனுப்பி இருக்கிறார் இராவணன். அப்போது தர்ஷினிக்கு காலில் அடிபட்டு இருப்பதால், அவரை கைதாங்களாக மெதுவாக அழைத்து செல்கிறார் ஜனனி. சுவாமிநாதனும் காயங்களுடன் இருப்பதால், அவராலும் வேகமாக செல்ல முடியவில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட சுவாமிநாதன்
ஜனனி, தர்ஷினியை மீட்டுச் செல்வதை இராவணன் அனுப்பிய புது கேங் ஆட்கள் பார்த்துவிட, அவர்கள் துப்பாக்கியால் சுடுகிறார்கள். இதில் சுவாமிநாதன் மீது துப்பாக்கி குண்டு பாய்கிறது. இதைப்பார்த்த ஜனனி பதறுகிறார். தர்ஷினி கண்முன்னே சுவாமிநாதன் இறந்துபோகிறார். பின்னர் அருந்ததி தன் பங்கிற்கு துப்பாக்கிச்சூடு நடத்தி, அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். இதையடுத்து அந்த ஆட்கள் ஜனனியை துரத்திச் செல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

