MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி

Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியை பழிவாங்க அவரின் பழைய காதலன் உடன் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார் நீத்து. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 15 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தான் சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பிக்க உள்ளதாக சொல்லி அதற்காக ஸ்ருதியிடம் ஐடியா கேட்டிருந்தார். அதுமட்டுமின்றி அந்த யூடியூப் சேனலில் தான் நடனமாடி வீடியோ பாட இருப்பதாகவும் கூறி இருந்தார். பின்னர் மீனா ரூமுக்குள் சென்று முத்துவிடம் ஆலோசனை செய்யும்போது, முத்து, நீயும் நீ பூ கட்டுவதை வீடியோவாக போடு என சொல்கிறார். அதற்கு மீனாவும் ஓகே சொன்னதோடு, நீங்களும் உங்களுக்காக ஒரு யூடியூப் சேனல் தொடங்குங்க என ஊக்கப்படுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரோகிணி வீட்டிற்கு சென்ற மனோஜ்
Image Credit : jiohotstar

ரோகிணி வீட்டிற்கு சென்ற மனோஜ்

மறுபுறம் மனோஜ், ரோகிணியிடம் பணம் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு வாசலில் நின்று பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு மனோஜ் சொல்ல, நீ வீட்டுக்குள்ள வா என அழைத்து செல்கிறார் ரோகிணி. உள்ளே சென்றதும் மனோஜை அமரச் சொல்லும் ரோகிணி, அவருக்காக தன் கையால் செய்த சாப்பாட்டை போட்டு கொடுக்கிறார். மனோஜும் வேறு வழியின்றி சாப்பிடுகிறார். அப்போது அவரிடம் பேசும் ரோகிணி, நான் இதுமாதிரி நிம்மதியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. உன் அம்மா திட்டுனதில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை என கூறுகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்
Related image2
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
35
டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Image Credit : jiohotstar

டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி

பின்னர் மனோஜிடம் நாம ரெண்டு பேரும் தனியா ஒரு வீடு எடுத்து சந்தோஷமா வாழலாம் என ரோகிணி சொல்ல, அதற்கு அம்மா ஒத்துக்க மாட்டாங்க, நீ எனக்கு டைவர்ஸ் கொடுத்திரு என கேட்கிறார். அதற்கு ரோகிணி, உன்னை நான் ஜெயிலில் இருந்து வெளியே எடுப்பதற்காக 5 லட்சம் ரூபாய் செலவழிச்சிருக்கேன். அந்த பணத்துக்காக நான் இப்போ வரை வட்டி கட்டிட்டு இருக்கேன். நீ அந்த 5 லட்ச ரூபாயை திருப்பி கொடு நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்திடுறேன் என டீலிங் பேசுகிறார் ரோகிணி. அதற்கு மனோஜும் ஓகே சொல்லிவிடுகிறார்.

45
நீத்துவின் சதிவேலை
Image Credit : jiohotstar

நீத்துவின் சதிவேலை

மறுபுறம் நீத்து ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்க, அவரை சந்திக்க ஸ்ருதியின் முன்னாள் காதலனான பிஜு வருகிறார். பிஜு, ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்தவர். தன்னை காதலிக்க மறுத்ததால் ஸ்ருதி மீது ஆசிட் வீசும் அளவுக்கு சென்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். அவர் தற்போது விடுதலை ஆகி வந்துள்ளதால், அவரை அழைத்து பேசும் நீத்து, நான் சொல்வதை செய்தால் ஸ்ருதி உங்களுக்கு கிடைப்பால் என்று சொல்கிறார். ஸ்ருதி உங்களுக்கு கிடைச்சா, என்னோட ரவி என்கூட வந்திருவான் என கூறுகிறார்.

55
ஸ்ருதிக்கு காத்திருக்கும் சிக்கல்
Image Credit : jiohotstar

ஸ்ருதிக்கு காத்திருக்கும் சிக்கல்

ஸ்ருதிக்கு எல்லாமே அவளுடைய ரெஸ்டாரண்ட் தான். அதை எப்படியாவது மூட வைக்க வேண்டும் என பிஜுவிடம் கூறுகிறார். அதற்கு பிஜுவும் ஓகே சொல்கிறார். இருவரும் சேர்ந்து ஸ்ருதிக்கு எதிராக பிளான் போட ஆரம்பித்திருக்கிறார்கள், இந்த பிஜுவால் ஸ்ருதிக்கு என்ன ஆபத்து வரப்போகிறது. நீத்துவின் இந்த சதிவேலையை ஸ்ருதி முறியடிப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
Recommended image2
Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!
Recommended image3
Ethirneechal : இராவணனை நம்பி முட்டாள்தனமான முடிவெடுக்கும் ஆதி குணசேகரன்; காத்திருக்கும் செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்
Recommended image2
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved