MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!

Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தானும் சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 13 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டிற்கு கும்பலாக வந்த சிலர், முதலாளிய எங்க என கேட்க, அதற்கு விஜயா, அவர்கள் மனோஜை தான் தேடி வந்திருப்பார்கள் என நினைத்து, மனோஜை அழைத்து வருகிறார். இவர் இல்லங்க, எங்க முதலாளி முத்துவ எங்க என கேட்க, அப்போது ரூமில் இருந்து வெளியே வரும் அண்ணாமலை, முத்துவை அழைக்கிறார். முத்து ரூமை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு மாலை அணிவிக்கும் அந்த டிரைவர்கள். அவரிடம் உங்களை மாதிரி முதலாளி கிடைச்சதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும் என பாராட்டுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முத்துவை பாராட்டும் டிரைவர்கள்
Image Credit : jiohotstar

முத்துவை பாராட்டும் டிரைவர்கள்

முத்துவிடம் தாங்கள் சம்பாதித்த பணத்தை கொடுக்கிறார்கள். அதற்கு முத்துவும் உங்களுக்கு போனஸ் இந்தாங்க என கொஞ்சம் பணம் கொடுக்கிறார். இதைப்பார்த்து ஆச்சர்யப்படும் ரவி, வேலைக்கு சேர்ந்த முதல் வாரமே போனஸ் கொடுக்குறதெல்லாம் பெரிய விஷயம் என கூறுகிறார். அதற்கு முத்து, நம்மிடம் வேலை பார்ப்பவர்களிடம் நாம் நன்றாக வைத்துக் கொண்டால், அவர்களும் நன்றாக வேலை செய்வார்கள் என கூறுகிறார். பின்னர் அந்த பணத்தை மீனாவிடம் கொடுத்து பீரோவில் வைக்க சொல்கிறார் முத்து.

35
விஜயாவுக்கு வந்த ஆசை
Image Credit : jiohotstar

விஜயாவுக்கு வந்த ஆசை

இதையடுத்து ஹாலில் உட்கார்த்து தன் தோழி பார்வதியின் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் விஜயா, இவளே யூடியூப் சேனல் ஆரம்பிக்கும்போது நாம் ஏன் ஆரம்பிக்கக்கூடாது என யோசிக்கிறார். இதையடுத்து ஸ்ருதியிடம் யூடியூப் சேனல் ஆரம்பித்து எப்படி சம்பாதிக்க முடியும் என கேட்கிறார். அதற்கு ஸ்ருதியும், படிப்படியாக ஒவ்வொன்றாக சொல்ல, அதில் எப்படி காசு வரும் என கேட்கிறார் விஜயா. உங்க வீடியோ பார்ப்பவர்கள் ஒவ்வொருவராக வந்து உங்களுக்கு காசு கொடுப்பாங்க என முத்து கிண்டலடிக்க, ஸ்ருதி அதையும் விஜயாவுக்கு படிப்படியாக சொல்லித்தருகிறார்.

45
யூடியூப் சேனல் தொடங்கும் விஜயா
Image Credit : jiohotstar

யூடியூப் சேனல் தொடங்கும் விஜயா

யூடியூப்பில் என்ன வீடியோ போடப்போறீங்க என முத்து கேட்க, அவங்களுக்கு டான்ஸ் நல்லா வரும் அதனால் டான்ஸ் ஆடி வீடியோ போடுங்க என ஸ்ருதி சொல்கிறார். மீனாவும், நீங்க யூடியூப் மூலமாக டான்ஸ் சொல்லிக் கொடுக்கலாம் என ஐடியா கொடுக்கிறார். பின்னர் மனோஜின் நண்பர் சந்தோஷ் வீட்டுக்கு வந்து டீலர் பணம் கொடுத்தால் தான் பொருள் தருவேன் என சொல்லிவிட்டார். அதனால் உடனடியாக பணத்தை ரெடி பண்ணுங்க என சொல்ல, அருகில் இருந்த விஜயா, என்னடா மனோஜ் இவ்வளவு படிச்சும் நீ இப்படி கஷ்டப்படுறியே, நீ அந்த முத்துவை விட வளர்ந்து காட்டணும் என கூறுகிறார்.

55
ரோகிணி வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கும் மனோஜ்
Image Credit : jiohotstar

ரோகிணி வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கும் மனோஜ்

இதையடுத்து ஷோரூமிற்கு செல்லும் மனோஜிடம், பணத்தை கொடுக்கிறார் ஜீவா. அவர் 25 ஆயிரம் பணத்தை எடுத்து இதை ரோகிணிக்கு கொடுத்திருங்க என கொடுக்க, அப்போது ஜீவாவிடம், ரோகிணி எங்க இருக்கானு போன் போட்டு கேட்க சொல்கிறார் மனோஜ். ரோகிணி தான் பார்லர் விஷயமாக வெளியே இருப்பதால், நாளை மனோஜை வீட்டுக்கு வரச் சொல் என கூறுகிறார். இதையடுத்து மனோஜ், கோர்ட் உத்தரவுப்படி ரோகிணிக்கு 25 ஆயிரம் பணத்தை கொடுக்க ரோகிணி வீட்டுக்கு செல்ல இருக்கிறார். அங்கு என்ன கூத்து காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image3
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : விடுதலையாகும் சத்யா... ரேகாவை கடத்தும் சிந்தாமணி; முத்து எடுத்த அதிரடி முடிவு
Recommended image2
Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved