- Home
- Cinema
- Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!
Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!
Chokka Thangam Actress Uma Shankari: ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Chokka Thangam Actress Uma Shankari
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் குறைந்த படங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்தான் நடிகை உமா சங்கரி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான இவர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதையும் படியுங்கள் - S Janaki: ரெக்கார்டிங்கில் பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?
திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்திய உமா சங்கரி
தொடர்ந்து கலகலப்பு, சொக்கத் தங்கம், விகடன், சூரியன், தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்கியலட்சுமி போன்ற பல படங்களில் நடித்தார். இறுதியாக அவர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் சிறு வயது சுமித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ‘சொக்கத்தங்கம்’ மற்றும் ‘கோவை பிரதர்ஸ்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார்.
இதையும் படியுங்கள் - S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சொக்கத் தங்கம் பட நடிகை
இந்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் - Actor Jai: இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!
வைரலாகும் இன்ஸ்டா பதிவு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கீமோ மற்றும் இம்யூனோ சிகிச்சையின் இரண்டாம் சுற்றில் இருக்கிறேன். நான் ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலேயே எதிர்கொண்டு வருகிறேன். கடினமான நாட்களை எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொள்கிறேன். என்னை வலிமையாக உணரும் நாட்களை கொண்டாடுகிறேன். எனக்கு துணையாக இருக்கும் குடும்பத்தினருக்கு நன்றி. அன்பும், ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி. நான் எனது பணிகளை தொடர்கிறேன். மேலும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகைகள்
இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் பலரும் விரைவில் குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும், உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன், நீங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்று ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையில் ஏற்கனவே நடிகை கௌதமி, மமதா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரா, மனிஷா கொய்ராலா போன்றவர்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

