MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?

Sai Abhyankkar Upcoming Movies : அனிருத்தைப் போல் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் சாய் அபயங்கரின் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதனை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 04 2026, 09:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sai Abhyankkar Upcoming Movies
Image Credit : Divo Music

Sai Abhyankkar Upcoming Movies

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக சாய் அபயங்கர் கவனம் ஈர்த்து வருகிறார். ஆரம்பத்திலேயே தனது தனித்துவமான இசை மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இவர், தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக, அடுத்தடுத்து பல பெரிய படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.

சாய் அபயங்கர் இசையமைப்பில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆல்பம் பாடல்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலும் தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆல்பம் பாடல்கள் மூலம் கிடைத்த பிரபலம்!
Image Credit : instagram.com/abhyankkar

ஆல்பம் பாடல்கள் மூலம் கிடைத்த பிரபலம்!

கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான 'கட்சி சேர' என்ற ஆல்பம் பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சாய் அபயங்கர். இந்தப் பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவருக்குப் பெரிய அளவில் ரசிகர்களையும் உருவாக்கிக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 'ஆச கூட', 'சித்திர புத்திரி' உள்ளிட்ட ஆல்பம் பாடல்களிலும் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து வெளியான பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததால், திரையுலகிலும் இவருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

34
திரைப்பட இசையமைப்பாளராக அடுத்த கட்டம்!
Image Credit : instagram.com/abhyankkar

திரைப்பட இசையமைப்பாளராக அடுத்த கட்டம்!

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கருக்கு திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தன. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக ஒப்பந்தமானார். இருப்பினும், இவரது இசையில் முதலில் திரையரங்குகளில் வெளியான திரைப்படமாக 'டியூட்' அமைந்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படத்திற்கும் இசையமைத்தார். இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தன. குறைந்த காலத்திலேயே முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்புகளைப் பெற்றிருப்பது சாய் அபயங்கரின் இசைப் பயணத்தில் முக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

44
சாய் அபயங்கர் கைவசம் உள்ள திரைப்படங்கள் என்னென்ன?
Image Credit : Instagram

சாய் அபயங்கர் கைவசம் உள்ள திரைப்படங்கள் என்னென்ன?

தற்போது சாய் அபயங்கர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களின் படங்கள் இவரது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகும் 'ஓம்', ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்', அல்லு அர்ஜுனின் 'ராக்கா' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளார். மேலும், சூர்யாவின் 48வது திரைப்படம், தனுஷின் 56வது திரைப்படம், சிவகார்த்திகேயனின் 27வது திரைப்படம் ஆகியவையும் இவரது கைவசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்', பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம், சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் 'தமிழ் முருகன்' ஆகிய படங்களிலும் சாய் அபயங்கர் இசையமைப்பாளராகப் பணியாற்ற உள்ளார். இப்படி குறுகிய காலத்திலேயே தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, சிலம்பரசன், அல்லு அர்ஜுன் எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

ஆல்பம் பாடல்கள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வரை வளர்ந்துள்ள சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. இதனால், வருங்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் உருவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாய் அபயங்கர்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Related Stories
Recommended image1
2கே கிட்ஸ்களின் பேவரைட்! கயாடு லோஹர் உடன் குத்தாட்டம் போட்ட சாய் அபயங்கர்: பவழ மல்லி பாடல் வெளியீடு!
Recommended image2
அனிருத்-க்கே டஃப் கொடுப்பார் போலயே! குறுகிய காலத்தில் கோடீஸ்வரரான சாய் அபயங்கர்! ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved