MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2கே கிட்ஸ்களின் பேவரைட்! கயாடு லோஹர் உடன் குத்தாட்டம் போட்ட சாய் அபயங்கர்: பவழ மல்லி பாடல் வெளியீடு!

2கே கிட்ஸ்களின் பேவரைட்! கயாடு லோஹர் உடன் குத்தாட்டம் போட்ட சாய் அபயங்கர்: பவழ மல்லி பாடல் வெளியீடு!

Sai Abhyankkar and Kayadu Lohar Pavala Malli Music Video : 2கே கிட்ஸ்களின் ஃபேவரட் பாடல் ஹீரோவாக வலம் வரும் சாய் அபயங்காரின் பவழமல்லி என்னும் பாடல் நேற்று வெளியானது இதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 06 2026, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Pavala Malli Song Dance Performance
Image Credit : Sai Abhyankkar X Page

Pavala Malli Song Dance Performance

தமிழ் திரையுலகில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் இந்த சிறு வயதிலேயே இந்த அளவிற்கு உருவானவர் இவர் ஒருவர்தான் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு தமிழ் திரையுலகை தன்வசம் வைத்துக் கொள்ளும் சாய் அபயங்கரின் பாடல்கள் தற்போது வளர்ந்து வரும் 2கே கிட்ஸ்களின் ஃபேவரிட் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் உருவாக்கி வரும் இன்டீ பாடல்கள் தான் இவருக்கு தனிச்சிறப்பை பெற்று வந்தது. அனைத்து ரசிகர்களின் மனதிலும் இவர் தற்போது சேர் போட்டு அமர்ந்துள்ளார் என்றே சொல்லலாம். அனைத்து ரசிகர்களையும் மற்றும் படங்களை உருவாக்கும் இயக்குனர்களையும் இவர் ஸ்கெட்ச் போட்டு தாக்கியுள்ளார் என்றே சொல்லலாம். இவர் உருவாக்கும் பாடல்கள் அனைத்தும் புதுவிதமாக இருக்கின்றன.

26
இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பு:
Image Credit : instagram.com/abhyankkar

இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பு:

இவர் சிறு சிறு ஆல்பங்கள் மூலம் தனது இசை திறமையை தமிழ் திரையுலகிற்கு தெரிய வைத்தார்.2022 ஆம் ஆண்டு "வலம் வரவேண்டுமே" என்ற பாடலை எழுதி இசையமைத்து வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, தனிப்பாடலான "ஆசா கூடா"வை வெளியிட்டார். உனக்கென்ற ஒரு தனிமொழியையும் பாட்டு கேட்டால் உடல் அசைவுகளைக் கொண்டு பாட்டுகளை உருவாக்கினார். இவரது ஆல்பம் புதுவிதமாக இருப்பதாலும் தற்போதைய ஜெனரேஷன்க்கு பிடித்தாகவும் இருந்தது. இவரது ஆல்பம் வெளியானதும் ரசிகர்கள் விகிதம் மிகுந்த ஆர்வம் காட்டி வலைதளத்தில் தனது கமெண்ட்ஸ்களை வாரி குவித்து வந்தனர். அதுவே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

36
கயாடு லோஹருடன் குத்தாட்டம் போட்ட சாய் அபயங்கர்
Image Credit : You Tube

கயாடு லோஹருடன் குத்தாட்டம் போட்ட சாய் அபயங்கர்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவர இருக்கும் கருப்பு திரைப்படத்திற்கு இவர் இசையமைப்பாளராக வாய்ப்பினை பெற்றார்.அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பான் இந்திய படத்திற்கு இசையமைத்து வருகிறார். வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றார்.

46
சாய் அபயங்கரின்‌ ஆடலும் பாடலும்:
Image Credit : Sai Abhyankkar X Page

சாய் அபயங்கரின்‌ ஆடலும் பாடலும்:

இசையமைப்பாளர்களில் இவர் ஒரு புது விதமான கலைஞர். தனது ஆல்பத்தில் தன் தன் பாட்டிற்கு ஏற்ப ஒரு புதுவிதமான நடனத்துடனும் இவர் பாடலை பாடியும் ஆடியும் உருவாக்கி இருப்பார். பாடல் இந்த அளவிற்கு ட்ரெண்டாகிறதோ அதே அளவிற்கு அவர் அந்த பாடலில் ஆடும் நடனமும் டிரெண்டாகும். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்பு மிக்க நடனத்தையும் உருவாக்கி ஆடலும் பாடலும் ஆக அவரது ஆல்பம் உருவாகி இருக்கும். ஒவ்வொரு ஆல்பத்திற்கும் ஒவ்வொரு ஹீரோயின்களை தேடி பிடித்து தனது ஆல்பத்தில் இடம்பெற வைப்பார். ஒரு பாடலுக்கு அனைத்து விதமான சிறப்பு செயல்களையும், பேக்ரவுண்ட், உடைகள் என்று அனைத்திலும் சிறப்பாக செய்திருப்பார் சாய் அபயங்கர். இதுனாலயே இவரது ஆல்பம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றிருக்கும்.

56
பவழ மல்லி:
Image Credit : instagram.com/abhyankkar

பவழ மல்லி:

இந்த நிலையில், சாய் அபயங்கர் இசையமைத்த தன் 5வது இசை ஆல்பத்தை மார்ச்‌ 5 நேற்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார். பவழ மல்லி எனப் பெயரிட்ட இந்த ஆல்பத்தில் பெண் குரலாக ஷ்ருதி ஹாசனுடன் முதன்முறையாக இணைந்து சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார். 

66
கயாடு லோஹர்
Image Credit : Sai Abhyankkar X Page

கயாடு லோஹர்

சாய் அபயங்கருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். திருமணம் சார்ந்த பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. ஒரு பாரம்பரிய வீட்டில் திருமண அலங்காரங்கள் கொண்ட வேட்டி சட்டை மற்றும் உடைகள் அணிந்த திருமணம் சார்ந்த பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. சாய் வெளியிட்ட ஆல்பங்கள் அனைத்தும் ஹிட் என்பதால் இப்பாடல் வலைதளங்களில் வெளியானதில் பலரும் லைக் மட்டும் கமெண்ட்கலை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சாய் அபயங்கர்
கயாடு லோஹர்
தமிழ் சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"செல்லமே செல்லமே விக்ரம் யார் தெரியுமா? நடிகர் ஜிஷ்ணுவின் நிஜ வாழ்க்கையும்.. அவர் கடந்து வந்த பாதையும்!"
Recommended image2
அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ
Recommended image3
2 கிலோ தங்கத்தில் ஜொலித்த ராஷ்மிகா! ரகசியத்தை உடைக்கும் ரூ.20 கோடி பட்ஜெட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved