- Home
- Cinema
- S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?
S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?
S Janaki Vs Savitri: எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும், சினிமா துறையில் சின்ன சின்ன மோதல்கள் சகஜம். அப்படி, எஸ். ஜானகி மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான சர்ச்சை பற்றி தெரியுமா?

S Janaki Vs Savitri
நடிப்பில் சாவித்திரியும், பாட்டில் ஜானகியும் தங்கள் துறைகளில் சிகரம் தொட்டவர்கள். இவர்களுக்குள் ஒரு தொழில்முறை மோதல் இருந்தது பலருக்கும் தெரியாது. ஆரம்ப காலத்தில் நடந்த அந்த சம்பவம், ஜானகியின் மனதை ஆழமாகப் பாதித்தது.
S.Janaki Net Worth: எஸ்.ஜானகியின் சொத்து மதிப்பு எவ்வளவு? நெஞ்சை உலுக்கும் குடும்ப பின்னணி!
சாவித்திரிக்கு பாடியது அந்த இருவரா?
அன்றைய காலகட்டத்தில் சாவித்திரி ஒரு சூப்பர்ஸ்டார். பெரும்பாலும் பி. லீலா, பி. சுசீலா ஆகியோர்தான் அவருக்குப் பாடுவார்கள். குறிப்பாக, தன் நடிப்புக்கு சுசீலாவின் குரல்தான் கச்சிதமாகப் பொருந்தும் என சாவித்திரி உறுதியாக நம்பினார். இந்த விஷயம் தெரியாமல், ஜானகி ஒரு தமிழ் படத்தில் சாவித்திரிக்காக ஒரு அருமையான பாடலைப் பாடினார்.
S. Janaki: பத்ம பூஷனை மறுத்த தென்னகத்துக் கம்பீரம்.. சுயமரியாதையின் சிகரம்! ஜானகியின் மறுபக்கம்!
ஜானகியின் பாடலை நிராகரித்த சாவித்திரி!
ரெக்கார்டிங் முடிந்ததும் பாடல் சிறப்பாக வந்திருந்தது. ஆனாலும், தன் நடிப்புக்கு ஜானகியின் குரலை விட சுசீலாவின் குரலே பொருத்தமாக இருக்கும் என சாவித்திரி கருதினார். அதனால், ஜானகி பாடிய பாடலை நீக்கிவிட்டு, பி. சுசீலாவை வைத்தே மீண்டும் ரெக்கார்டிங் செய்தனர். இது எஸ். ஜானகியின் தன்மானத்தைப் பாதித்தது.
சாவித்திரிக்கு பாடவே மாட்டேன் - ஜானகியின் சபதம்!
இந்த அவமானத்தால், "இனிமேல் சாவித்திரி நடிக்கும் படங்களுக்கு நான் பாடவே மாட்டேன்" என்று ஜானகி சபதம் எடுத்தார். சொன்னது போலவே, தெலுங்கு பாடலை சாவித்திரிக்காகப் பாட மறுத்தார். இதனால், அந்தப் பாடலின் ரெக்கார்டிங் சுமார் மூன்று மாதங்கள் தாமதமானது. பின்னர் வேறு வழியின்றி அந்தப் பாடலை அவர் பாட வேண்டியிருந்தது.
பேட்டியில் உண்மையை உடைத்த ஜானகி!
ஒரு பேட்டியில் ஜானகி, "சாவித்திரிக்கு சுசீலாவின் குரல்தான் பிடிக்கும். அதனால நான் பாடுறதுக்கு அவங்க சம்மதிக்கல. சாவித்திரி நடித்த தெலுங்கு படத்தின் ஒரு பாட்டை நான் பாடமாட்டேன்னு சொல்லிட்டேன். 3 மாசம் பெண்டிங்ல வெச்சேன். கடைசியில, அந்தப் பாட்டுல சாவித்திரி நடிக்கலைன்னு சொன்னாங்க, அதனால பாடினேன். ஆனா, கடைசியில அந்தப் பாட்டுல சாவித்திரிதான் நடிச்சாங்க" என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

