- Home
- Cinema
- S.Janaki Net Worth: எஸ்.ஜானகியின் சொத்து மதிப்பு எவ்வளவு? நெஞ்சை உலுக்கும் குடும்ப பின்னணி!
S.Janaki Net Worth: எஸ்.ஜானகியின் சொத்து மதிப்பு எவ்வளவு? நெஞ்சை உலுக்கும் குடும்ப பின்னணி!
S.Janaki Net Worth: மறைந்த பின்னணி பாடகி ஜானகி அம்மாவுன் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்தும் நெஞ்சை உலுக்கும் அவரது குடும்ப பின்னணி குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜானகி அம்மா மறைவு
இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற பின்னணி பாடகியான 'கானக்குயில்' எஸ்.ஜானகி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்ட இசைப் பேரரசியின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் இதோ:
ஜானகி குடும்பம்
ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ஜானகி அம்மாவின் திரைக்குப் பின்னால் இருக்கும் குடும்பத்தில் சமீபத்திய ஆண்டுகளில் பல சோகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜானகியின் இசைப் பயணத்திற்குப் பின்னால் ஒரு அழகான காதலும், பெரும் தியாகமும் இருந்தது. 1959-ஆம் ஆண்டு வி. ராம்பிரசாத் என்பவரை ஜானகி மணந்தார்.
ஜானகியின் அசாத்திய திறமையைக் கண்டறிந்து, அவரை முதன்முதலில் சென்னை ஏவிஎம் (AVM) ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றவர் இவர்தான். திருமணத்திற்குப் பின், ஜானகி என்ற ஆளுமை உலகிற்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தனது சொந்த வாழ்க்கையையே அவரது இசைப் பயணத்திற்காக அர்ப்பணித்தார். கடந்த 1997-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக ராம்பிரசாத் காலமானார்.
இதையும் படிங்க:இன்றும் சிலிர்க்க வைக்கும் எஸ். ஜானகியின் குரல்... இந்த 10 பாடல்கள் ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன?
ஜானகி மகனும் சில மாதஙக்ளுக்கு முன்பு மறைந்தார்
இந்தத் தம்பதியருக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, சில மாதங்களுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் காலமானார். மகனின் இந்த மறைவு ஜானகி அம்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதித்திருந்தது. ஜானகி அம்மாவின் மருமகள் உமா முரளிகிருஷ்ணா, சென்னையில் வசிக்கும் புகழ்பெற்ற பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர் ஆவார். ஜானகி அம்மாவுக்கு வர்ஷா, அப்சரா என இரண்டு பேத்திகள் உள்ளனர். இதில் அப்சரா தான் ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தியை இன்று அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
ஜானகியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
எஸ்.ஜானகி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்தவர். ஜானகியின் சொத்து மதிப்பை பார்த்தால் சென்னை, ஹைதராபாத் மற்றும் அவர் இறுதிக்காலத்தில் வசித்து வந்த மைசூர் ஆகிய நகரங்களில் இவருக்குச் சொந்தமான குடியிருப்பு வீடுகள் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதன் மூலம் கிடைத்த ராயல்டி (Royalty) மற்றும் பிற முதலீடுகள் உள்ளன. சினிமா வட்டாரங்களின் உத்தேசக் கணக்கீடுகளின்படி 2026 ஜூலை நிலவரப்படி ஜானகி அம்மாவின் சொத்து மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இவரது சொத்து விவரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

