MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!

Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!

S Janaki Support Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி உருவானதன் பின்னணியின் ஜானகி செய்த உதவியும் இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : May 28 2026, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Untold Story of Ilaiyaraaja
Image Credit : facebook

Untold Story of Ilaiyaraaja

தமிழ் திரையுலகில் இன்று “இசைஞானி” என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இளையராஜாவின் ஆரம்ப கால பயணம் எளிதானதல்ல. அவர் முதல் முறையாக இசையமைப்பாளராக வாய்ப்பு பெற்ற கதை, பல தடைகள் மற்றும் சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. 1970களில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்திற்கான பணிகளை தொடங்கினார். தேவராஜ் – மோகன் இயக்கத்தில், ஆர்.செல்வராஜ் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு “அன்னக்கிளி” திரைப்படம் உருவாக முடிவு செய்யப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ராஜா... இளையராஜா ஆனது எப்படி?
Image Credit : Facebook/Ilaiyaraaja

ராஜா... இளையராஜா ஆனது எப்படி?

நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜாதா முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், படத்திற்கு புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பஞ்சு அருணாச்சலத்துக்கு ஏற்பட்டது. அப்போது கதாசிரியர் செல்வராஜ், “ராஜா” என்ற இளைஞரை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் இசையமைத்த சில ட்யூன்களை கேட்ட பஞ்சு அருணாச்சலம் மிகுந்த ஈர்ப்படைந்தார். ஏற்கனவே “ராஜா” என்ற பெயரில் ஒருவர் இருந்ததால் குழப்பம் தவிர்க்க, அந்த இளைஞருக்கு “இளையராஜா” என்ற பெயரையே அவர் சூட்டியதாக சொல்லப்படுகிறது.

Related Articles

Related image1
கமல்ஹாசனை வற்புறுத்தி இளையராஜா எழுத வைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Related image2
Music: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.! இளையராஜா இசைத்த மெலடி.! மெய் மறந்து கேட்டு கண்ணீர் வடித்த பாலச்சந்தர்.!
36
இளையராஜாவுக்கு டெஸ்ட்
Image Credit : Ilaiyaraaja/ Facebook

இளையராஜாவுக்கு டெஸ்ட்

ஆனால் இந்த புதிய இசையமைப்பாளரை இயக்குநர்கள் உடனே ஏற்கவில்லை. அவரின் திறமையில் முழு நம்பிக்கை வராததால், வேறு இசையமைப்பாளரை தேர்வு செய்யலாம் என அவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. எனினும், இளையராஜாவே இந்த படத்துக்கு சரியான தேர்வு என பஞ்சு அருணாச்சலம் உறுதியாக நின்றார். இதையடுத்து இயக்குநர்கள் ஒரு விதமான சோதனையை நடத்த முடிவு செய்தனர். ஒரு திருமண மண்டபத்தில் சிறிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அங்கு இளையராஜா பாடல்களை இசைக்க வேண்டும் என கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவர் திறமையை நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு உறுதி செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

46
ஆதரவாக வந்த ஜானகி
Image Credit : Facebook

ஆதரவாக வந்த ஜானகி

அந்த நிகழ்ச்சியில் அக்காலத்தின் பிரபல பாடகியான எஸ்.ஜானகி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க சம்பவமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பெரிய பாடகர்கள் இத்தகைய சோதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் ஒரு திறமையான இளைஞரின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் ஆதரவாக இருந்ததாக பின்னர் பலரும் கூறியுள்ளனர். இசை நிகழ்ச்சியில் இளையராஜா அமைத்த மெட்டுகள் அனைவரையும் கவர்ந்தன. அதன் பின்னரே “அன்னக்கிளி” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமானார். இந்த படத்திற்காக அவர் இசையமைத்த ஐந்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.அந்த நிகழ்ச்சியில் அக்காலத்தின் பிரபல பாடகியான எஸ்.ஜானகி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க சம்பவமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பெரிய பாடகர்கள் இத்தகைய சோதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் ஒரு திறமையான இளைஞரின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் ஆதரவாக இருந்ததாக பின்னர் பலரும் கூறியுள்ளனர். இசை நிகழ்ச்சியில் இளையராஜா அமைத்த மெட்டுகள் அனைவரையும் கவர்ந்தன. அதன் பின்னரே “அன்னக்கிளி” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமானார். இந்த படத்திற்காக அவர் இசையமைத்த ஐந்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

56
பாடல்களால் ஹிட் அடித்த அன்னக்கிளி
Image Credit : Instagram

பாடல்களால் ஹிட் அடித்த அன்னக்கிளி

குறிப்பாக “அடி ராக்காயி மூக்காயி”, “அன்னக்கிளி உன்னைத் தேடுதே”, “மச்சான பார்த்தீங்களா” போன்ற பாடல்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்கள் வரை ஒலித்தன. அதேசமயம் “சொந்தம் இல்லை பந்தம் இல்லை” போன்ற உணர்ச்சி மிகுந்த பாடல்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன. இந்த படத்தின் முதல் பாடல் பதிவு பல சிக்கல்களுடன் நடந்ததாக கூறப்படுகிறது. முதன்முறையாக பதிவு செய்யும் போது மின்தடை ஏற்பட்டதால் வேலை பாதியில் நின்றுவிட்டது. பின்னர் மீண்டும் பதிவு செய்ய முயன்றபோது, சவுண்ட் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இறுதியாக மூன்றாவது முயற்சியில்தான் அந்த பாடல் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

66
தடைகளை கடந்து சாதித்த இளையராஜா
Image Credit : our own

தடைகளை கடந்து சாதித்த இளையராஜா

1976ம் ஆண்டு மே மாதத்தில் “அன்னக்கிளி” திரைப்படம் வெளியானது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் ஆரம்பத்தில் பல விநியோகஸ்தர்கள் வாங்க தயங்கியதாக கூறப்படுகிறது. அதனால் படத்தை குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திரையரங்குகளில் முதல் நாளில் பெரிதாக வரவேற்பு இல்லாத இந்த படம், பின்னர் மக்கள் மத்தியில் வாய்மொழி பாராட்டுகளால் மெதுவாக ரீச் ஆகத் தொடங்கியது. குறிப்பாக வார இதழ்களில் வந்த நேர்மையான விமர்சனங்கள் படத்திற்கு பெரிய ஆதரவாக அமைந்தன. அதன் பின்னர் “அன்னக்கிளி” தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peddi First Review : ராம் சரணின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? பெத்தி முதல் விமர்சனம் இதோ
Recommended image2
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
Recommended image3
Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
Related Stories
Recommended image1
கமல்ஹாசனை வற்புறுத்தி இளையராஜா எழுத வைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image2
Music: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.! இளையராஜா இசைத்த மெலடி.! மெய் மறந்து கேட்டு கண்ணீர் வடித்த பாலச்சந்தர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved