- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விஜயா மூடிமறைத்த உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை... பெண் வீட்டார் கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
விஜயா மூடிமறைத்த உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை... பெண் வீட்டார் கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்வதற்காக விஜயா ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்த்துள்ள நிலையில், அவர்கள் முதன்முறையாக மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துள்ளனர்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பி சத்யா பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மீனா, முத்து, சீதா ஆகியோர் வந்திருந்த நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த சத்யாவின் ஓனர் பொண்ணு ரேகா, அவருக்கு கேக் மற்றும் விலையுயர்ந்த டிரெஸ் வாங்கி வந்து கொடுத்திருந்தார். மேலும் சத்யா வீட்டில் இருந்து கிளம்பும் முன், உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். இன்று மதியம் ஹோட்டல் புக் பண்ணிருக்கேன். அங்கு வருமாறு சொல்லிவிட்டு செல்கிறார் ரேகா. இதை முத்துவும், மீனாவும் கேட்டுவிடுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தயக்கம் காட்டும் மீனா
ரேகா சென்ற பின் சத்யாவை அழைத்து பேசும் முத்து மற்றும் மீனா, நீ அந்த பொண்ணை காதலிக்கிறியா என கேட்க, அதற்கு சத்யாவும் ஆமாம் என சொல்லிவிடுகிறார். முத்து சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாலும், ரேகா பணக்கார வீட்டு பெண்ணாக இருப்பதால் சத்யாவின் காதலை ஏற்க மீனா தயக்கம் காட்டுகிறார். பின்னர் மீனாவிடம் பேசும் முத்து, அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் தெரியுது அப்புறம் என்ன என கேட்க, காதல் வேண்டுமானால் வசதியை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் கல்யாணம் பார்க்கும் என சொல்ல, அதெல்லாம் பார்த்துக்கலாம். சத்யா நீ தைரியமா காதலை சொல்லு நான் உனக்கு இருக்கேன் என சப்போர்ட் பண்ணுகிறார் முத்து.
ரேகாவிடம் காதலை சொன்ன சத்யா
இதையடுத்து கிளம்பி ரேகாவை பார்க்க ஹோட்டலுக்கு செல்கிறார் சத்யா. அங்கு சென்றதும் டக்கென ஒரு பூவை கொடுத்து ரேகாவிடம் தன்னுடைய காதலை சொல்கிறார் சத்யா. அதைக் கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்ட ரேகா, நான் தான் படபடப்பா இருந்தேன். இப்போ ஹாப்பி என சொல்லி பேசிக் கொண்டிருக்க, அப்போது ரேகாவின் அம்மா சிந்தாமணி அவருக்கு போன் போடுகிறார். போனை எடுத்து பேசுகையில் ரேகா ஃப்ரெண்டோடு இருக்கேன் என சொல்ல, பையனா பொண்ணா என துருவி துருவி கேட்கிறார் சிந்தாமணி. இதனால் அப்செட் ஆன ரேகா போனை கட் பண்ணிவிடுகிறார்.
பெண் வீட்டாரிடம் உண்மையை சொன்ன அண்ணாமலை
மறுபுறம் விஜயா, தன் மகன் மனோஜை பார்க்க பெண் வீட்டார் வருவதால், வீட்டில் பரபரவென சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண் வீட்டார் வருகிறார்கள். அவர்களை அமர வைத்து மனோஜையும் காட்டுகிறார். அவர்களுக்கு மனோஜை பார்த்ததும் பிடித்துவிட்டது. பின்னர் அவர்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என கூறும் அண்ணாமலை, மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை போட்டுடைக்கிறார். இதைக்கேட்ட பெண் வீட்டார், தங்கள் பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், தாங்களும் இது போன்ற வரனை தான் தேடி வந்ததாக சொல்ல விஜயாவும் மனோஜும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். பின்னர் நாளை வீட்டுக்கு வருமாறு சொல்லிவிட்டு செல்கிறார்கள்.
கோவிலில் மீனா - ஸ்ருதி
இதையடுத்து விஜயா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு செல்கிறார். கோவிலில் ஏற்கனவே மீனாவும் ஸ்ருதியும் ஒன்றாக அடி பிரதட்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். தான் மீண்டும் வீட்டுக்கு போக வேண்டும் என வேண்டி மீனா இந்த பிரார்த்தனையை செய்கிறார். அப்போது அங்கு வரும் விஜயா, இவர்கள் இருவரையும் பார்த்துவிடுகிறார். அவரிடம் நீங்க எதுக்கு கோவிலுக்கு வந்தீங்க என ஸ்ருதி கேட்க, மனோஜுக்கு பெண் பார்க்க செல்ல உள்ள விஷயத்தை விஜயா கூறுகிறார். இதைக்கேட்டு மீனா ஷாக் ஆகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

