- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு புதிதாக பெண் பார்த்து இருக்கிறார் விஜயா. இந்த விஷயத்தை சிந்தாமணி, ரோகிணியிடம் சொல்லி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை எப்படியாவது டைவர்ஸ் கேஸில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய நண்பன் சந்தோஷை அனுப்பி, ரோகிணியை காதலிப்பது போல் டிராமா போட சொல்லி இருந்தார் மனோஜ். அவரின் பேச்சைக் கேட்டு சந்தோஷும் போய் ரோகிணியிடம் புரபோஸ் பண்ண, அவர் சந்தோஷை தனியாக ஒரு இடத்துக்கு வர வைத்து, சவுக்கடி கொடுத்திருக்கிறார். பின்னர் முத்துவும், மனோஜும் வந்து அவரை காப்பாற்றினர். பிளான் சொதப்பியதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஷோரூமுக்கு வரும் ரோகிணி
மறுதினம் மனோஜ் ஷோரூமில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு ரோகிணி வருகிறார். ரோகிணியை பார்த்ததும் சந்தோஷ் ஒளிந்துகொள்கிறார். பின்னர் மனோஜிடம் உனக்கு தான் பிளான் ஒழுங்கா பண்ண வராதுல்ல, நீ போட்ட பிளான்ல பாவம் உன்னோட ஃபிரெண்டு தான் அடிவாங்குனான் என ரோகிணி சொல்ல, உனக்கே பிளான் ஒழுங்கா போட வராது, உன்கூட வேலை செய்யுறவன் அவனுக்கு எப்படி ஒழுங்கா பிளான் போட வரும் என ரோகிணி கேட்க, நீ ரொம்ப டேஞ்சர் ஆன ஆளு, சந்தோஷயே இப்படி ஆள் வச்சு அடிச்சிருக்க என திட்டுகிறார் மனோஜ்.
ரோகிணி வாங்கி தந்த ஆர்டர்
இதற்கு பதிலடி கொடுக்கும் ரோகிணி, நீ மட்டும் என்ன ஒழுங்கானவனா, உன்னோட பொண்டாட்டி கிட்டயே மோசமா நடக்க சொல்லி ஒருத்தன அனுப்சிருக்க, உலகத்துல எந்த புருஷனாவது இப்படி இருப்பானா என மனோஜிடம் கேட்கிறார். பின்னர் எதுக்காக நீ வந்த என மனோஜ் கேட்க, தன் பையில் இருந்து ஒரு லட்சத்துக்கான செக்கை எடுத்து நீட்டுகிறார். ஒரு கல்யாண சீர்வரிசைக்கான அட்வான்ஸ் இது என கொடுக்கிறார். நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்கவே மாட்டேன் எனவும் ஒரு பிட்டை போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் ரோகிணி.
முத்துவுக்கு கிடைக்கும் உதவி
மறுபுறம் மீனாவின் பூக்கடைக்கு சென்ற முத்து, அங்கு மீனாவிடம் இருந்து சாப்பாட்டை வாங்கிக் கொண்டு கிளம்பும் போது, அங்கு ஒரு தம்பதி வந்து முத்துவை சந்திக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் முத்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பையனை காப்பாற்றினார் அவரின் பெற்றோர்கள் தான் அவர்கள். தங்கள் மகனை காப்பாற்றியதற்காக உங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும் என கூறுகிறார்கள். அப்போது முத்து தான் டிரைவராக இருக்கும் விஷயத்தை சொன்னதும், நீங்க ஒரு வேன் வாங்குங்க, இங்க நிறைய பேர் டூர் போவாங்க, அதன்மூலம் நிறைய ஆர்டர் கிடைக்கும் என சொல்கிறார்கள். முத்துவும் அதற்கு ஓகே சொல்கிறார்.
மனோஜுக்கு பெண் பார்த்த விஜயா
அடுத்ததாக விஜயா, தன்னுடைய தோழி பார்வதி வீட்டில் அமர்ந்திருக்க, அப்போது அங்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். விஜயா தற்போது மனோஜுக்கு பெண் பார்த்து வருவதால், அதுபற்றி பேச தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். தங்கள் வீட்டு பெண்ணுக்கு 30 வயது ஆவதாக சொன்னதைக் கேட்டு விஜயா ஷாக் ஆனாலும், பெண்ணுடைய அப்பாவுக்கு நிறைய சொத்து இருப்பதாக சொன்னதும் அப்படியே ஆஃப் ஆகி விடுகிறார். அதன்பின்னர் தன்னுடைய மகனுக்கு நிறைய பெரிய இடத்தில் இருந்து வரன் வந்ததாக பில்டப் விடுகிறார் விஜயா. இதைக்கேட்டு அருகிலிருந்த பார்வதி மற்றும் சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார்கள்.
செம அப்செட்டில் ரோகிணி
பின்னர் சிந்தாமணி நேராக ரோகிணி வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும் மனோஜுக்கு விஜயா பெண் பார்க்கும் விஷயத்தை போட்டுடைக்கிறார். அதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ரோகிணியின் அம்மாவும் என் பொண்ணோட வாழ்க்கையே போச்சு என புலம்பித் தள்ளுகிறார். ரோகிணி கோபத்தில் அங்கிருந்த கிளாசை தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து என்ன ஆனது? மனோஜுக்கு பெண் பார்க்கும் விஷயத்தை ரோகிணி எப்படி தடுத்து நிறுத்தப் போகிறார் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

