MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்

பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜின் நண்பன் சந்தோஷை போன் போட்டு ஒரு இடத்துக்கு வரச் சொன்ன ரோகிணி, அவரை ஆள் வைத்து அடித்துள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2026, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் எப்படியாவது ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கிவிட வேண்டும் என இருக்கிறார். ஆனால் ரோகிணி, மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது புது பிளானாக மனோஜின் நண்பன் சந்தோஷ், நான் ரோகிணியை காதலிப்பது போல் நடிக்கிறேன். அதை வீடியோ எடுத்து ரோகிணிக்கும் எனக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் காட்டினால் உனக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும் என்கிற முட்டாள்தனமான ஐடியாவை சந்தோஷ் கொடுக்க, மனோஜும் அதை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

26
பிளானை சொன்ன மனோஜ்
Image Credit : jiohotstar

பிளானை சொன்ன மனோஜ்

வீட்டில் உள்ள அனைவருக்கும் மீனா சமைத்துக் கொடுத்துவிட, அந்த சப்பாட்டை விஜயா தவிர அனைவரும் சாப்பிடுகிறார்கள். அப்போது மனோஜ், தான் ரோகிணியை சிக்க வைக்க, சந்தோஷை வைத்து லவ் டிராமா பண்ணும் விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட அண்ணாமலை கட்டுன பொண்டாட்டியை இப்படி இன்னொருத்தன லவ் பண்ண வைக்குறியே உனக்கு அசிங்கமா இல்ல என கேட்கிறார். ஆனால் விஜயா, மனோஜின் பிளானை பாராட்டுகிறார். அந்த நேரம் பார்த்து சந்தோஷிடம் இருந்து மனோஜுக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. அவர் கதறி அழுதபடி போனில் பேசுகிறார்.

Related Articles

Related image1
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
36
சந்தோஷுக்கு சாட்டையடி
Image Credit : jiohotstar

சந்தோஷுக்கு சாட்டையடி

தான் இருக்கும் இடத்தை சொல்லி, எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறு கூறுகிறார். இதையடுத்து மனோஜ் செல்ல, அண்ணாமலை முத்துவையும் உடன் அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று பார்க்கையில் ஒரு குடோனில், சந்தோஷை அடைத்து வைத்து ஒருவர் சாட்டையடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அவர்களிடம் ரோகிணி தான் இதையெல்லாம் பண்ணியது என கூறுகிறார் மனோஜ், அதுமட்டுமின்றி ரோகிணி வரச் சொல்லி தான் நான் இந்த இடத்துக்கு வந்தேன் என்றும், வந்த உடனே என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டதாக சொன்ன ரோகிணி என்னை உள்ளே அழைத்து வந்தார்.

46
சந்தோஷுக்கு ரோகிணி கொடுத்த எச்சரிக்கை
Image Credit : jiohotstar

சந்தோஷுக்கு ரோகிணி கொடுத்த எச்சரிக்கை

அப்போது அந்த ஆளை அடிக்க சொல்கிறார். உள்ளே இருந்தவரும் சந்தோஷை சாட்டையால் அடிக்கிறார். அப்போது அவர் வலியால் துடிக்க, அவரிடம் என்னடா ரெண்டு பேரும் சேர்ந்து டைவர்ஸ் கேஸ்ல டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா, உன் ஃபிரெண்டோட பொண்டாட்டி நானு, என்கிட்ட போய் இப்படி நடந்துக்குற என ரோகிணி சொல்ல, அதற்கு சந்தோஷ், அவன் தான் இப்படி பண்ண சொன்னான் என கூறுகிறார். அவனுக்கு நீ தாண்டா இந்த ஐடியாவை கொடுத்திருப்ப, உன் முட்டாள் பாஸுக்கு போன் பண்ணி சொல்லு, அவன் வந்து உன்னை காப்பாத்துறானானு பார்ப்போம் என கூறிவிட்டு கிளம்புகிறார் ரோகிணி.

56
ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணிய மீனா
Image Credit : jiohotstar

ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணிய மீனா

இதையடுத்து ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் முத்து, அங்கு ஸ்ருதி, ரவி, மீனா ஆகியோரிடம் இந்த விஷயத்தை சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி பண்ணுனது சரிதான் என கூறுகிறார் மீனா. அருகில் இருந்த ஸ்ருதியும், நீங்க சொன்னதை வச்சு பார்க்கும்போது மனோஜோட ஃபிரெண்டு முட்டாளா இருப்பான் போல என சொல்ல, அதற்கு முத்து, அவன் முட்டாள் கிடையாது வடிகட்டுன முட்டாள் என கூறுகிறார். இதே மாதிரி சாட்டையை வச்சு நீத்துவை நாலு அடி அடிச்சா அவளும் திருந்திடுவா என ஸ்ருதி கூற, அருகில் இருந்த ரவி ஷாக் ஆகிறார்.

66
புத்திமதி சொல்லும் அண்ணாமலை
Image Credit : jiohotstar

புத்திமதி சொல்லும் அண்ணாமலை

மறுபுறம் வீட்டில் மனோஜ் அமைதியாக அமர்ந்திருக்க அவருக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கிறார் விஜயா. அப்போது மனோஜை திட்டுகிறார் அண்ணாமலை, இது மாதிரி பைத்தியக்கார தனமா பண்ணிக்கிட்டு இருந்தா டைவர்ஸ் கிடைச்சிருமா, நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா டைவர்ஸ் கிடைக்காம போயிடும் ஜாக்கிரதையா இரு என எச்சரிக்கிறார். அப்போது விஜயா, மனோஜுக்கு ஒரு வரன் பார்த்திருப்பதாக சொல்கிறார். அதைக்கேட்டதும் குஷியான மனோஜ் யார் அந்த பொண்ணு என கேட்க, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
கள்ள உறவில் சரவணன்; மீனாவிடம் கதறி அழுத மயில்... கதிரிடம் திட்டுவாங்கிய ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Recommended image3
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved