- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டை விட்டு வெளியேறியதால் வீடே வெறிச்சோடி கிடக்கும் நிலையில், விஜயாவும் திடீரென மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial unexpected twist
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளார் விஜயா. முதலில் இதை நம்பாமல் இருந்த மீனா, ஒருகட்டத்தில் அண்ணாமலை விபத்தில் சிக்கியதால், அத்தை சொன்னதுபோல் தன்னால் மாமா உயிருக்கு ஆபத்து இருக்குமோ என பயந்து அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் மீனா. ஏற்கனவே மனோஜும் ரோகிணியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் ரவி உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரைப் பிரிந்து ஸ்ருதியும் தன் அம்மா வீட்டில் வாழ்கிறார். இதன் பின் என்ன நடக்கபோகிறது என்பதை பார்க்கலாம்.
தனிமையில் வாடும் விஜயா
மருமகள் வீட்டில் இல்லாததால் எல்லா வேலைகளையும் மகன்கள் தான் பார்க்கிறார்கள். ஒருநாள் பார்த்த நிலையில் மறுதினமே முத்து தான் மீனா உடன் தங்கப் போவதாக சொல்லிவிட்டு, முத்து கிளம்புகிறார். அதேபோல் ரவி தனது நண்பன் வந்திருப்பதால் நான் அவனுடனே தங்கிக் கொள்கிறேன் என சொல்லிவிட்டார். மறுபுறம் மனோஜ், தான் ஷோரூமிலேயே தங்கிக் கொள்கிறேன் என சொல்லி உள்ளார். இதுபோதாதென்று அண்ணாமலை, அவரது நண்பர் பரசு உடன் மாடியில் சென்று தூங்க உள்ளதாக சொல்லிவிடுகிறார். இதனால் விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார்.
பார்வதியை சந்தித்த விஜயா
மீனாவின் அருமை அவர் வீட்டில் இருந்தபோது விஜயாவுக்கு தெரியவில்லை. தற்போது அவர் இல்லாதபோது தான் அவரை நினைத்துப் பார்க்கிறார் விஜயா. அவர் இருந்தபோது வீடு எப்படி ஜே ஜேவென இருந்தது என நினைத்துப்; பார்த்து கண்கலங்குகிறார். வீட்டில் தனிமையில் இருப்பதால், ஒருமாதிரி இருப்பதால், தன்னுடைய தோழி பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார் விஜயா. அங்கு சென்றதும், அவரைப் பார்த்து நீ ஏன் டல்லா இருக்க என பார்வதி கேட்க, நேத்து நைட்டு வீட்டுல யாருமே இல்லை, நான் மட்டும் தனிமையில் இருந்தேன் என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார் விஜயா.
தவறை உணரும் விஜயா
இதற்கு காரணமே நீ தான விஜயா என பார்வதி சொல்ல, பழசையெல்லாம் யோசித்துப் பார்க்கும் விஜயா, ஒரு நாள் கூட என்னால வீட்ல தனியா இருக்க முடியல, நீ எப்படி இத்தனை வருஷமா தனியா இருக்க என பார்வதியிடம் கேட்கிறார். உன்னோட கஷ்டம் எனக்கு இப்பதான் புரியுது. வாழ்க்கையில் ரொம்ப கொடுமையானது தனிமை தான் என கூறும் விஜயா, அதை தான் நேற்று தான் அனுபவித்ததாக கூறுகிறார். இதையடுத்து என்ன ஆனது? மீனாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப் போகிறாரா விஜயா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

