- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலைக்கு அடிபட்டதற்கு ரோகிணி தான் காரணம் என புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ருதி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டில் இருந்தால் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என சாமியார் சொன்னதை அடுத்து, அவரை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என இருந்த விஜயாவுக்கு தற்போது அல்வா சாப்பிடுவது போல் ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. அண்ணாமலை விபத்தில் சிக்கியதால், அதற்கு காரணம் மீனா தான் என சொல்லி அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். இதனால் மீனாவும் தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். முத்து வந்து அழைத்தும் செல்ல மறுத்துவிட்டார் மீனா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஃபீல் பண்ணும் முத்து
முத்து மீண்டும் வீட்டுக்கு சென்ற நிலையில், அவரிடம் மீனா எங்கே என அண்ணாமலை கேட்க, அவள் வர மறுத்துவிட்ட விஷயத்தை சொல்கிறார் முத்து. அதைக்கேட்டதும் சந்தோஷப்படும் விஜயா, அப்பாடா இனி நம்ம வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்ல, அப்போது அருகில் இருந்த விஜயா, இதுமாதிரி மூட நம்பிக்கையை நம்புபவர்கள் முட்டாள்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பி செல்கிறார். பின்னர் அண்ணாமலை முத்துவிடம் பேசி, மீனாவை எப்படியாவது வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திரு என சொல்கிறார். முத்துவும் அவளே கொஞ்ச நாள்ல வந்திருவா என கூறுகிறார்.
கனவில் ரொமான்ஸ் பண்ணும் ஜோடிகள்
இதன்பின்னர் மீனா வீட்டில் தனியாக உட்கார்ந்து இரவில் பூ கட்டிக் கொண்டிருக்க, அப்போது போனில் உள்ள முத்துவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் எதிரிலேயே முத்து அமர்ந்திருப்பது போல் அவருக்கு தோன்றுகிறது. அவரிடம் ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, பின்னர் தான் அது நிஜமல்ல வெறும் கனவு என்பதை உணர்கிறார். அதேபோல் வீட்டில் உள்ள முத்துவும், மீனாவை நினைத்துக் கொண்டிருக்க, அப்போது ரூமில் மீனா நிற்பது போல் அவருக்கு கனவு வருகிறது. அவரை சந்தோஷமாக வரவேற்க முத்து சென்ற போதுதான் அவரும் அது நிஜமில்லை என்பதை உணர்கிறார்.
கனவிலும் டார்ச்சர் பண்ணும் நீத்து
முத்து மட்டுமின்றி மனோஜும் தன்னுடைய படுக்கையில் படுத்திருக்கும் போது ரோகிணியை நினைக்கிறார். அவருக்கும் ரோகிணியுடம் சேர்ந்து இருப்பது போல் கனவு வருகிறது. பின்னர் விழித்துப் பார்த்து அது கனவு என தெரிந்ததும், இனி அதுபோல் கனவு வரக்கூடாது என கண்ணை மூடி தியானம் பண்ணுகிறார். மறுபுறம் ரவியும் ஸ்ருதியை நினைத்துக் கொண்டிருக்க, அப்போது அவர் நேரில் வந்து நீ நீத்துவிடம் பேசி அவளை காதலிக்கவில்லை என சொல்ல வைக்க வேண்டும் என சொல்கிறார். அப்போது அங்கு இருக்கும் நீத்து இதையெல்லாம் பார்த்து சிரிக்க, அவரை கத்தியால் குத்துவது போல் கனவு காண்கிறார் ரவி.
ஸ்ருதிக்கு வந்த சந்தேகம்
மறுதினம் மீனாவின் பூக்கடைக்கு செல்கிறார் ஸ்ருதி. அங்கு சென்று எதற்காக உங்க அம்மா வீட்டுக்கு போனீங்க என கேட்க, எனக்கும் அதில் நம்பிக்கை இல்லை தான், ஆனால் மாமாவுக்கு இப்படி ஆனதால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன் என சொல்ல, அப்போது மீனாவிடம், தனக்கு இந்த விஷயங்களுக்கு பின்னணியில் ரோகிணி இருப்பாரோ என சந்தேகம் வருவதாக கூறுகிறார். அந்த நேரம் பார்த்து ரோகிணி அங்கு காரில் வந்து இறங்குகிறார். இதைப்பார்த்த மீனாவும், ஸ்ருதியும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

