MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அண்ணாமலையை அடிச்சு தூக்கியது யார்? மீனா மீது விழும் பழி; வன்மத்தை கொட்டிய விஜயா - சிறகடிக்க ஆசை அப்டேட்

அண்ணாமலையை அடிச்சு தூக்கியது யார்? மீனா மீது விழும் பழி; வன்மத்தை கொட்டிய விஜயா - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் நிலைக்கு மீனா தான் காரணம் என கூறி அவரை திட்டி உள்ளார் விஜயா.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை பிளாக்மெயில் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க பிளான் போட்டிருந்தார் ரோகிணி, இதற்காக மனோஜை ஒரு ஹோட்டலுக்கு வர வைத்து, அங்கு தான் கொடுக்கும் பேப்பரில் கையெழுத்து போடாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி இருந்தார். இதற்கு பயந்து மனோஜும் அந்த பேப்பரில் கையெழுத்து போடச் சென்ற நேரத்தில் முத்துவும், மீனாவும் கிரிஷ் உடன் வந்து மனோஜை காப்பாற்றிவிட்டனர். இதனால் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பினார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
வன்மத்தை கொட்டிய விஜயா
Image Credit : jiohotstar

வன்மத்தை கொட்டிய விஜயா

மனோஜை மீட்டு முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்த நிலையில், மீனாவால் தான் மனோஜுக்கு இப்படியெல்லாம் நடக்குது என்றும் இவளை வீட்டை விட்டு துரத்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் முட்டாள்தனமாக பேசுகிறார் விஜயா. இதைக்கேட்டு கடுப்பான முத்து, மீனா மட்டும் இல்லேனா இந்த முட்டாப்பய மனோஜ், ரோகிணி நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டிருப்பா, உங்க பையன காப்பாத்துனதே மீனா தான் அதை மறந்துராதீங்க என சொல்ல, விஜயா கோபித்துக் கொண்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறார். விஜயா தன்மீது தொடர்ந்து பழிபோடுவதால் மீனா கண்கலங்குகிறார்.

Related Articles

Related image1
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Related image2
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
35
ஆத்திரத்தில் ரோகிணி
Image Credit : jiohotstar

ஆத்திரத்தில் ரோகிணி

மறுபுறம் ரோகிணி வீட்டுக்கு சென்று தன்னுடைய அம்மாவிடம் நீ ஏன் கிரிஷை கூப்பிட ஸ்கூலுக்கு போகல என திட்டுகிறார். நான் போவதற்குள் முத்துவும் மீனாவும் கூட்டிட்டு போயிட்டாங்க என சொல்ல, அவங்களால என்னோட பிளான் எல்லாம் சொதப்பிவிட்டது என புலம்புகிறார் ரோகிணி. அப்போது அங்கு வரும் சிந்தாமணியிடம் தன்னுடைய பிளான் சொதப்பிய விஷயத்தை கூறுகிறார் ரோகிணி. அதற்கு சிந்தாமணியும், இந்த மீனாவை முதலில் அந்த வீட்டை விட்டு துரத்தணும், அவ இருக்குறதுனால தான் என்னோட பிசினஸும் பாதிக்குது, அவளுக்கு ஒரு முடிவு கட்டணும் என கூறுகிறார்.

45
ரவியை டென்ஷனாக்கிய நீத்து
Image Credit : jiohotstar

ரவியை டென்ஷனாக்கிய நீத்து

இதன்பின்னர் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிற்கு மீனா செல்கிறார். அங்கு வீட்டில் அத்தை தன்னை துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அப்போது ரவியும் அங்கு இருக்கிறார். அந்த சமயத்தில் நீத்து வருகிறார். அவரை வெளிய போ என ஸ்ருதி விரட்டுகிறார். அவரிடம் தான், ரவியிடம் அவர் என்னுடைய ரெஸ்டாரண்டில் வேலை பார்த்ததற்கான பணத்தை கொடுக்க வந்ததாக சொல்ல, சரி கொடுத்துட்டு கிளம்பு என கூறுகிறார் ஸ்ருதி. பின்னர், ரவியை தனியாக அழைத்து சென்ற நீத்து அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, ஒரு முத்தத்தையும் தந்துவிட்டு செல்கிறார். இதனால் ரவி கடுப்பாகிறார். பின்னர் ஸ்ருதியும் அவ என்ன கொடுத்தா என துருவி துருவி கேட்டுவிட்டு இறுதியில் முத்தம் கொடுக்கிறார். இப்படி இருவரும் மாற்றி மாற்றி தன்னை டார்ச்சர் பண்ணுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நிற்கிறார் ரவி.

55
மீனாவை கடிந்துகொண்ட விஜயா
Image Credit : jiohotstar

மீனாவை கடிந்துகொண்ட விஜயா

மறுபுறம் அண்ணாமலை தன்னுடைய நண்பன் பரசு உடன் வாக்கிங் செல்கையில் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை கூறுகிறார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் புல்லட்டில் வேகமாக வந்து அண்ணாமலையை இடித்துவிட்டு செல்கிறார். இதில் கை உடைந்து அண்ணாமலை வலியால் துடிக்கிறார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவரைப் பார்க்க பதறியடித்து ஓடி வரும் விஜயா, அங்கு வரும் மீனாவிடம், இந்த தரித்திரம் பிடித்தவலால் தான் அவருக்கு இப்படி ஆச்சு, இவளை துரத்துனா எல்லாம் சரியாகிவிடும் என திட்டுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணத்தை நிறுத்திய சேரன்... அதிர்ச்சியில் சந்தா - அய்யனார் துணை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?
Recommended image2
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Recommended image3
உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!
Related Stories
Recommended image1
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Recommended image2
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved