- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Siragadikka aasai today episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மனோஜ் விவகாரத்து பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று விஜயா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிந்தாமணியும் விஜயாவுக்கு சில ஐடியாக்களை கொடுக்கிறார். விஜயாவிடம் இருந்து எப்படியாவது அவரது வீட்டை அபகரித்து வேண்டும் என்று திட்டம் தீட்டும் சிந்தாமணி, இதற்கு முத்து மற்றும் மீனா இருவரும் இடையூறாக இருப்பார்கள் என்று அவர்களை வீட்டை விட்டு துரத்தும் ஐடியாவை விஜயாவுக்கு கொடுக்கிறார்.
சிந்தாமணி தீட்டும் திட்டம்
அதே சமயம் பெண் சாமியார் ஒருவரை ஏற்பாடு செய்து முத்து மீனா இருவரும் விஜயாவின் வீட்டில் இருக்கக் கூடாது. அண்ணாமலையின் உயிருக்கு மீனவால் ஆபத்து ஏற்படலாம். எனவே மீனா இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று விஜயாவிடம் அந்த பெண் சாமியார் கூறுகிறார். இது சிந்தாமணியின் ஏற்பாடு என்றே தெரியாத விஜயா, பெண் சாமியாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மீனாவை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜயாவின் இந்த முடிவுக்கு அண்ணாமலை உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அண்ணாமலைக்கு விபத்து
இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் அண்ணாமலையும் அவரது நண்பரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது வேகமாக பைக்கில் வந்த நபர் அண்ணாமலை மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கிறார். இதனால் நிலைகுலைந்து கீழே விழும் அண்ணாமலையை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதை கேட்டு பதறும் விஜயா அத்தனைக்கும் காரணம் மீனா தான் என்று மீனா மீது பழியை போடுகிறார்.
மீனாவை வசை பாடும் விஜயா
இந்த தரித்திரம் பிடித்தவள் இருப்பதால்தான் என் கணவருக்கு இப்படி ஆகிவிட்டது என்றும், இவள் ஒரு ராசி கெட்டவள் வீட்டை விட்டு இப்போதே வெளியேற வேண்டும் என்று வாய்க்கு வந்தபடி மீனாவை வசை பாடுகிறார். விஜயாவின் சொற்களை தாங்க முடியாத மீனா அழுதபடியே அங்கிருந்து செல்கிறார். அண்ணாமலைக்கு நடந்த இந்த விபத்து சிந்தாமணி செய்த சூழ்ச்சி என சிறகடிக்க ஆசை சீரியலின் ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் இதை முத்து மற்றும் மீனா இருவரும் எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் எந்த சுவாரசியமும் நிலவி வருகிறது.
விஜயாவின் முட்டாள்தனம்
ஆனால் சிந்தாமணி செய்த சதியை எப்படியும் விஜயா கண்டுபிடிக்க போவதில்லை. விஜயாவிடம் இருந்து சிந்தாமணி வீட்டை பிடுங்கிய பின்பு தான் அவருக்கு அனைத்து உண்மைகளையும் தெரிய வரும். அப்போது அவர் முத்து மற்றும் மீனாவின் உண்மையான அன்பை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகிணி மனோஜ் ஒரு பக்கம், சிந்தாமணி ஒரு பக்கம் என்று அடுத்த வாரம் விஜயாவுக்கு மிகப்பெரிய பூகம்பமே காத்திருக்கிறது.

