MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சரவணன் வாழ்க்கையில் Ex Lover? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் இயக்குநர் வைத்த சீன் பை சீன் செக்; இனி எல்லாமே அதிரடிதான்!

சரவணன் வாழ்க்கையில் Ex Lover? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் இயக்குநர் வைத்த சீன் பை சீன் செக்; இனி எல்லாமே அதிரடிதான்!

Pandian Stores 2 Serial Scene By Scene Twist and Director Game Play : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இயக்குநர் ரசிகர்களுக்கு டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் எக்ஸ் லவ்வர் அறிமுகம், தங்கமயில் கர்ப்பமாக இருப்பது போன்று காண்பித்துள்ளார்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Feb 28 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

Pandian Stores 2 Serial Scene By Scene Twist and Director Game Play : ரசிகர்களுக்கு பிடித்த சீரியல்களில் ஒன்றாக பார்க்கப்படுவது விஜய் டிவியில் ஒளிபரப்பு செயப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆனால், சீரியலில் டைட்டிலுக்கு ஏற்ப ஆரம்பத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் நாளடைவில் காட்சிகளும், கதாபாத்திரங்களும் அதற்கு புறம்பாகவே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தந்தையின் சொல்லுக்கு எதிராகவே ஒவ்வொரு காட்சிகளும், கதாபாத்திரங்களும் காண்பிக்கப்படுகின்றன.

210
சரவணன் மற்றும் மீனா
Image Credit : jiohotstar

சரவணன் மற்றும் மீனா

பாண்டியனின் மகன்களில் சரவணனுக்கு மட்டுமே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. ஆனால், அதுவும் இப்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. மற்றவர்களான செந்திலுக்கு கதிர் திருமணம் செய்து வைத்தார். கதிருக்கு கோமதி திருமணம் செய்து வைத்தார். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கண்ட காட்சிகள் எல்லாம் ஒன்றுக்கு பின் ஒன்று வித்தியாசமானதாக இருந்துள்ளது.

310
அரசி மற்றும் குமரவேல் காதல் காட்சிகள்
Image Credit : jiohotstar

அரசி மற்றும் குமரவேல் காதல் காட்சிகள்

இதைவிட மகள் அரசியின் காட்சி தான் டுவிஸ்ட். தனது தாய் மாமாவின் மகனான குமரவேலுவை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து அவரிடமிருந்து விலகினார். ஆனால், அவரை தனியாக சந்திக்க சென்ற போது கடத்தப்பட்டு தனக்கு தானே தாலியும் கட்டிக் கொண்டு அவரது வீட்டிலேயே சில காலம் வாழ்ந்தார். பிறகு உண்மை தெரியவர பாண்டியன் தனது மகளை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து கோர்ட், கேஸ் என்று சென்று வழக்கை வாபஸூம் பெற்றார்.

410
தங்கமயில் கர்ப்பம் – முன்னாள் காதலி அஞ்சலி
Image Credit : jiohotstar

தங்கமயில் கர்ப்பம் – முன்னாள் காதலி அஞ்சலி

இதே போன்று சரவணன் திருமண வாழ்க்கையில் தங்கமயிலை பிரிந்து வாழ்ந்து அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் புதிய வரவாக சரவணனின் முன்னாள் காதலியை இயக்குநர் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து சரவணன் மற்றும் அஞ்சலி தொடர்பான காட்சிகள் சீரியலில் இடம் பெற்றன. அஞ்சலியும் கணவரை பிரிந்து வந்துவிட்டார்.

510
Pandian Stores 2 Serial
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial

இப்போது இருவரும் தனித் தனியாகவே வாழ்ந்து வரும் நிலையில் ரசிகர்களின் கண் பார்வையில் இருவரும் மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், அப்படி எதுவும் நடக்காது என்று சொல்லும் வகையில் மீனா மற்றும் சரவணனின் காட்சிகள் நிரூபித்துவிட்டன. எப்படியென்றால், நாங்கள் இருவரும் எப்போதும் நண்பர்களாகத்தான் இருப்போம் என்று சொல்லிவிட்டார். மேலும், என்னுடைய மனநிலையில் இப்போது என்னால் அடுத்த திருமணத்தை பற்றி யோசிக்க கூட முடியவில்லை என்றார். 

610
Pandian Stores 2 Serial Director Twist
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Director Twist

மேலும், நான் 2ஆவது திருமணம் செய்து கொண்டால் கூட தவறேதும் இல்லையே என்றார். இதையெல்லாம் தாண்டி பெரிய டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் வயதானவரை கவனித்துக் கொள்ளும் வேலைக்கு சென்ற தங்கமயில் வாந்தி எடுக்கும் காட்சி இடம் பெற்றது. அது அவருக்கு அஜீரணக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக தோன்றினாலும் சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு அவர் கர்ப்பமாக இருப்பதாக எண்ணம் தோன்றுகிறது.

710
Pandian Stores 2 Serial Today Episode Tamil 2026
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode Tamil 2026

உண்மையில் தங்கமயில் கர்ப்பமாக இருந்தால் சரவணனுடன் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? அல்லது ஜீவனாம்சம் முறையில் செட்டில்மெண்ட் கொடுப்பார்களா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. எனினும் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாக்கியத்திற்கு தெரிந்தால் பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க திட்டம் போடுவார் என்று தோன்றுகிறது.

810
Star Vijay Pandian Stores 2 Latest Twist
Image Credit : jiohotstar

Star Vijay Pandian Stores 2 Latest Twist

ஏற்கனவே சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் தனிக்குடித்தனம் அனுப்பி வைத்து கடையை தனது மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கோர்ட்டில் கூறியிருந்தார். இப்படி ஒவ்வொரு காட்சிகளுக்கும் பின் ஏதோ ஒரு இடத்தில் அந்த காட்சியின் தொடர்ச்சி எப்படியாவது சீரியலில் இடம் பெற்றுவிடுகிறது.

910
Pandian Stores 2 Serial Director Game Play
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Director Game Play

இன்னொரு விஷயம் மறந்துவிட்டோம் பாருங்க, அதாவது அரசி தனியாக இருக்கும் ஒரு பிச்சைக்காரனை வீட்டிற்குள் நுழைய வைத்து அவரை பயமுறுத்தி அந்த இடத்தில் குமரவேலுவை காப்பாற்ற வைத்து அரசி மற்றும் குமரவேலுவிற்கும் இடையில் காதலை மலர செய்துள்ளார். ஏற்கனவே குமரவேலுவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில், அதனை காந்திமதி உண்மையை சொல்லி அந்த திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினார்.

1010
Pandian Stores 2 Saravanan Ex-Lover Twist
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Saravanan Ex-Lover Twist

அரசியை மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் குமரவேலுவிற்கும் இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் விருப்பமில்லை. இதே போன்று அரசிக்கும் குமரவேலுவிற்கு நிச்சயதார்த்தம் நடப்பதில் விருப்பம் இல்லை. இப்படி இருவருக்குள்ளும் காதலை மலர செய்த இயக்குநர் அடுத்ததாக என்ன டுவிஸ்ட் வைத்திருக்கிறார் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை தொடர்ந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியின் குழந்தையால் குணசேகரனுக்கு ஆபத்து; புது குண்டை தூக்கிப்போட்ட ஜோசியர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved