MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!

உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் உறுதி செய்து இருக்கிறார். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 01 2026, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : Youtube

Pandian Stores 2 Serial Today Episode

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தங்க மயிலின் பெற்றோர் பல பொய்களை சொல்லி தங்க மயிலை சரவணனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வர தங்க மயிலை வீட்டை விட்டு அனுப்புகின்றனர். இதனால் கோபமடைந்த தங்க மயிலின் தாயார் காவல் துறையை நாட, பிரச்சனை பெரிதாகிறது. இந்த விவகாரம் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது.

25
வாந்தி எடுத்த தங்கமயில்
Image Credit : Youtube

வாந்தி எடுத்த தங்கமயில்

விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்க மயிலை அவரது தாயார் மிகவும் மோசமாக நடத்துகிறார். இதனால் மனமுடைந்த தங்கமயில் ஒரு வயதானவரை கவனித்துக் கொள்ளும் வேலையில் சேர்க்கிறார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தங்க மயிலுக்கு லைட்டாக தலை சுற்றுகிறது. திடீரென்று வாந்தி எடுக்கத் தொடங்குகிறார். அப்போது மீனாவுக்கு போன் செய்யும் அவர் மீனாவை வேலை செய்யும் வீட்டிற்கு வரவழைக்கிறார். தனக்கு காலையிலிருந்து வாந்தி வருவதாகவும், தலை சுற்றுவதாகவும் கூறுகிறார்.

Related Articles

Related image1
சரவணன் வாழ்க்கையில் Ex Lover? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் இயக்குநர் வைத்த சீன் பை சீன் செக்; இனி எல்லாமே அதிரடிதான்!
Related image2
ஜனனியின் குழந்தையால் குணசேகரனுக்கு ஆபத்து; புது குண்டை தூக்கிப்போட்ட ஜோசியர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
கர்ப்பமாக இருக்கும் தங்க மயில்
Image Credit : Youtube

கர்ப்பமாக இருக்கும் தங்க மயில்

உடனே அவரை மீனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தங்கமயிலை பரிசோதிக்கும் மருத்துவர் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் தங்கமயில், இந்த விஷயத்தை சரவணன் இடம் கூறுவதற்காக அவரை கோவிலுக்கு வரவழைக்கிறார். கோவிலுக்கு வரும் சரவணனிடம் மருத்துவர் அளித்த ரிப்போர்ட்டுகளை காட்டி, அதை வாங்கி பிரித்துப் பார்க்குமாறு கூறுகிறார். ஆனால் சரவணன் வந்த விஷயத்தை மட்டும் கூறுமாறு கடுமையாக பேசுகிறார்.

45
தங்க மயிலை வசைபாடும் சரவணன்
Image Credit : Youtube

தங்க மயிலை வசைபாடும் சரவணன்

அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், உங்கள் வாரிசை வயிற்றில் சுமப்பதாகவும் சரவணனிடம் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சரவணன், “இந்த குழந்தை யாருடையது?” என்று கடுமையான வார்த்தைகளால் தங்க மயிலை வசைபாடுகிறார். மேலும், “உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கடுமையான சொற்களைக் கூறுகிறார். இதனால் மணமுடையும் தங்கமயில் கதறி அழுகிறார்.

55
இனி நடக்கப்போவது என்ன?
Image Credit : Youtube

இனி நடக்கப்போவது என்ன?

இனி தங்க மயிலின் வாழ்க்கையில் என்ன நிகழப் போகிறது? அவர் மீண்டும் சரவணனுடன் இணைவாரா? இல்லையா? என்ற சஸ்பென்ஸ் உடன் கதை நகர்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்திரகலா விரித்த வலை.. தானாக வந்து சிக்கிய கார்த்திக்! புதையலையும் அலேக்காக ஆட்டைய போட்ட வில்லி - கார்த்திகை தீபம் அதிரடி சீன்!
Recommended image2
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Recommended image3
மகளைக் கண்டுபிடித்த விக்ரம்! நிலா தான் தன் மகள் எனத் தெரிந்ததும் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு!
Related Stories
Recommended image1
சரவணன் வாழ்க்கையில் Ex Lover? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் இயக்குநர் வைத்த சீன் பை சீன் செக்; இனி எல்லாமே அதிரடிதான்!
Recommended image2
ஜனனியின் குழந்தையால் குணசேகரனுக்கு ஆபத்து; புது குண்டை தூக்கிப்போட்ட ஜோசியர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved