- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலைக்கு தன்னால் ஆபத்து இருப்பதாக நினைத்துக் கொண்ட மீனா, இனி வீட்டுக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த விஜயா, தற்போது பெண் சாமியார் சொன்னபடி தன்னுடைய கணவர் அண்ணாமலைக்கு ஆபத்து வந்து விபத்தில் சிக்கியதை அடுத்து, மீனாவை திட்டி இனி வீட்டுக்கே வரக்கூடாது என கூறிவிட்டார். மீனாவும் தன்னால் மாமா உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதெல்லாம் சிந்தாமணியின் பிளான் என்பது இதுவரை யாருக்குமே தெரியவில்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
டிஸ்சார்ஜ் ஆன அண்ணாமலை
மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றதும் மாமாவுக்கு தன்னால் தான் இப்படி ஆனதாக நினைத்து ஃபீல் பண்ணி அழுகிறார். அவரை சீதா சமாதானப்படுத்துகிறார். மறுபுறம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரும் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார் விஜயா. அண்ணாமலை வீட்டுக்குள் வந்ததும் மீனா எங்கு என கேட்கிறார். அதற்கு அனைவரும் பதிலளிக்காமல் சைலண்டாக இருக்க, முத்து, அவள் பூ டெலிவரி கொடுக்க சென்றிருப்பதாக சொல்கிறார். முத்து பொய் சொல்கிறார் என்பதை கண்டுபிடித்த அண்ணாமலை, விஜயாவிடம் நீ தான் அவளை திட்டி வெளிய அனுப்புனியா என கேட்கிறார்.
வீட்டுக்கு வர மறுக்கும் மீனா
விஜயாவும் எதுவும் சொல்லாமல் சைலண்டாக இருக்க, உடனே முத்துவிடம் மீனா இப்போ எங்க இருக்கா என அண்ணாமலை கேட்கிறார். அவளுடைய அம்மா வீட்டில் இருப்பதாக முத்து சொல்ல, உடனே அவளை அழைச்சிட்டு வா என அனுப்பிவிடுகிறார். பின்னர் மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்லும் முத்து, அங்கு சென்று மீனாவிடம் அப்பா உன்னை அழைத்துவர சொன்னதாக சொல்ல, அதற்கு மீனா தான் கொஞ்ச நாளைக்கு அங்கு வரமாட்டேன் என கூறிவிடுகிறார். மாமாவுக்கு இப்படி நடந்ததுனால அத்தை சொன்னதை என்னால நம்பாம இருக்க முடியல என கண்ணீர் சிந்துகிறார் மீனா.
விஜயாவை திட்டிய ஸ்ருதி
மறுபுறம் ஸ்ருதி வீட்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் குஷியான விஜயா, மீனா இந்த வீட்டுல இருந்து போனதுக்கு அப்புறம் நல்லதா நடக்குது. இப்போ பாரு நீயே மறுபடியும் வந்துட்ட என சொல்ல, அதற்கு ஸ்ருதி, நான் அங்கிளை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன் என சொல்லி விஜயாவுக்கு பல்பு கொடுக்கிறார். பின்னர் ஸ்ருதியும் மீனாவை பற்றி விசாரிக்க, அவர் அம்மா வீட்டுக்கு சென்ற விஷயத்தை கூறுகிறார்கள். இந்த மூட நம்பிக்கையை நம்பியா இப்படியெல்லாம் செய்வீங்க என விஜயாவை திட்டுகிறார் ஸ்ருதி. இதெல்லாம் முட்டாள்தனமான செயல் என ஆதங்கத்தை கொட்டுகிறார் ஸ்ருதி.
சிக்குவாரா சிந்தாமணி?
ஸ்ருதி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் விஜயா தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வில்லை. நான் என்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் மீனா தற்போதைக்கு வீட்டுக்கு வரமாட்டார் என தெரிகிறது. மறுபுறம் சிந்தாமணி சொல்லி தான் அந்த பெண் சாமியார் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார். அண்ணாமலையை விபத்தில் சிக்க வைத்ததும் சிந்தாமணி தான் என்கிற உண்மையை விரைவில் முத்துவோ அல்லது மீனாவோ கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் கதைக்களம் இன்னும் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

