MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த மீனா... அம்பலமான சிந்தாமணியின் சதி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த மீனா... அம்பலமான சிந்தாமணியின் சதி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலையின் இந்த நிலைக்கு காரணம் நீ தான் என விஜயா சொன்னதை அடுத்து மனமுடைந்து போன மீனா எதிர்பாரா முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 03 2026, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்கிற முனைப்பில் ஒரு சாமியாரை வீட்டுக்கு அனுப்பி வைத்து மீனா இந்த வீட்டில் இருந்தால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அதன்பின்னரும் மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாததால், ஒரு மர்ம நபரை வைத்து அண்ணாமலை மீது பைக்கில் மோத வைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு பதறி ஓடி வந்த விஜயா, மீனாவை பார்த்ததும் உன்னால் தான் என் புருஷனுக்கு இப்படி ஆகுது என திட்டி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
மீனாவை விரட்டும் விஜயா
Image Credit : jiohotstar

மீனாவை விரட்டும் விஜயா

என் புருஷன் இன்னைக்கு படுத்த படுக்கையா இருக்குறதுக்கு காரணமே இவ தான், இவ வந்ததில் இருந்தே இந்த வீட்டுக்கு தர்திரம் பிடிச்சிருச்சு என விஜயா, மீனாவை கண்டபடி திட்டுகிறார். விஜயா வார்த்தைகளால் வதம் செய்ததால், மீனாவால் ஆஸ்பத்திரியில் இருக்க முடியவில்லை. இதனால் மீனா யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். அவர் வெளியே சென்றதை யாருமே கவனிக்கவும் இல்லை. கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை கண்விழித்துவிடுகிறார். இதையடுத்து அனைவரும் சென்று அண்ணாமலையை சந்தித்து நலம் விசாரிக்கிறார்கள்.

Related Articles

Related image1
அண்ணாமலையை அடிச்சு தூக்கியது யார்? மீனா மீது விழும் பழி; வன்மத்தை கொட்டிய விஜயா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related image2
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
35
ரோகிணியிடம் உண்மையை சொன்ன சிந்தாமணி
Image Credit : jiohotstar

ரோகிணியிடம் உண்மையை சொன்ன சிந்தாமணி

மறுபுறம் சிந்தாமணி, ரோகிணி வீட்டுக்கு செல்கிறார். அங்கு ரோகிணி, அண்ணாமலைக்கு ஆக்சிடெண்ட் ஆன விஷயத்தை பற்றி பேச, அதற்கு சிந்தாமணி, நான் தான் ஆள் வச்சு இப்படி பண்ண சொன்னேன். பெருசாலாம் இல்ல, லைட்டா கை கால்ல அடிபடுற மாதிரி பண்ணுனேன். அப்படி செய்தால் தான் முத்துவையும் மீனாவையும் விஜயா வீட்டை விட்டு வெளியே அனுப்புவாங்க. அதற்காக தான் இப்படியெல்லாம் செய்தேன் என கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரோகிணி, இதனால் எதுவும் பிரச்சனை வந்திராதா என கேட்க, அதெல்லாம் வராது என அசால்டாக கூறுகிறார் சிந்தாமணி.

45
விஜயாவிடம் நலம் விசாரிக்கும் சிந்தாமணி
Image Credit : jiohotstar

விஜயாவிடம் நலம் விசாரிக்கும் சிந்தாமணி

இதையடுத்து விஜயாவுக்கு போன் போட்டு பேசுகிறார் சிந்தாமணி. அவர் என்ன சொல்கிறார் என்பதை ரோகிணியும் கேட்க வேண்டும் என்பதற்காக போனை ஸ்பீக்கரில் போட்டு பேசுகிறார். போனில் நல்லவர் போல் விசாரிக்கும் சிந்தாமணி, அதுமட்டுமின்றி மாஸ்டர் நான் சொன்னேன்ல, அந்த சாமியார் சக்தி வாய்ந்தவங்க, அவங்க சொன்னபடி நடக்குது பாருங்க. உடனே அந்த மீனாவை வீட்டை விட்டு துரத்தி விடுற வழிய பாருங்க என கூறுகிறார். அதற்கு விஜயாவும் இனி அவளை என்னோட வீட்டுக்குள்ள விடவே மாட்டேன் என சொல்கிறார். இதனால் சிந்தாமணியும் ரோகிணியும் சந்தோஷமடைகிறார்கள்.

55
மீனா எடுத்த அதிரடி முடிவு
Image Credit : jiohotstar

மீனா எடுத்த அதிரடி முடிவு

பின்னர் அனைவரும் சென்று அண்ணாமலையை பார்த்து பேசுகிறார்கள். அவர் தான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்ல, அந்த சமயத்தில் தான் ஸ்ருதி கவனிக்கிறார், மீனா காணாமல் போன விஷயத்தை. அதன் பின்னர் மீனாவை மருத்துவமனை முழுவதும் தேடுகிறார்கள். மீனா அழுதுகொண்டே தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்கிறார். அங்கு தன்னுடைய மாமியார் தன்னை திட்டிய விஷயத்தை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். மாமாவுக்கு என்னால தான் இப்படி ஆயிடுச்சு, இதுக்கப்புறம் அங்கு போக மாட்டேன் என சொல்கிறார் மீனா. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Ethirneechal: எதிர்நீச்சலில் மெகா ட்விஸ்ட்! கோலங்கள் நாயகியின் மிரட்டலான கம்பேக்! இனி ஆதி குணசேகரனுக்கு ஆப்பு கட்டாயம்.!
Recommended image3
உடைந்து போன பாக்கியலட்சுமியின் நம்பிக்கை! விக்ரமின் மறுபக்கம் - செல்லமே செல்லமே சீரியலில் உச்சகட்ட திருப்பம்!
Related Stories
Recommended image1
அண்ணாமலையை அடிச்சு தூக்கியது யார்? மீனா மீது விழும் பழி; வன்மத்தை கொட்டிய விஜயா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved