MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : ரோகிணியை மாட்டிவிட்ட கிரிஷ்... மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த விஜயா...!

Siragadikka Aasai : ரோகிணியை மாட்டிவிட்ட கிரிஷ்... மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த விஜயா...!

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஆஸ்பத்திரியில் வைத்து முத்து மற்றும் மீனாவை சந்தித்துள்ள கிரிஷ், எல்லா உண்மையையும் கூறி உள்ளார்.

3 Min read
Author : Ganesh A
Published : May 22 2026, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் வீட்டை மீட்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் மீனா வீட்டில் தங்கி இருக்கும் விஜயா, தன்னுடைய மகன் மனோஜ் ஷோரூமிற்கு ரோகிணி வந்திருப்பதை சிசிடிவி மூலமாக பார்த்துவிடுகிறார். பின்னர் அதில் இருக்கும் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே ரோகிணியை லெஃப்ட் ரைட் வெளுத்து வாங்குகிறார் விஜயா. கடைக்கு வந்தவர்கள் முன்னிலையில், அவமானப்பட்டு கூனி குறுகி நிற்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ரோகிணியை அசிங்கப்படுத்திய விஜயா
Image Credit : jiohotstar

ரோகிணியை அசிங்கப்படுத்திய விஜயா

மூஞ்சு நிறைய மேக்கப் போட்டுக்கிட்டு யாராவது ஆம்பளை கிடைப்பாங்களானு அலையிருயே வெக்கமா இல்லை உனக்கு. ஆம்பளை வேணும்னா வேற யாரையாவது தேடிக்க வேண்டியது தான, என் புள்ள தான் உனக்கு கிடைச்சானா. அடியே வெக்கம் கெட்டவளே நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டு தான சாப்பிடுற, நான் மட்டும் அங்க வந்தேன் உன்னை செருப்பாலயே அடிப்பேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, எவனாவது இழிச்சவாயன் கிடைப்பான் அவனைப் போய் ஏமாத்து போ. இனிமே நீ கடைப்பக்கம் வந்த துடைப்பக்கட்ட பிஞ்சிடும். போடி வெளிய என விஜயா சொல்ல, இதனால் கடும் கோபம் அடைந்த ரோகிணி, அந்த கேமராவையே பிடுங்கி எடுக்கிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : சிந்தாமணிக்கு சாபம் விட்ட விஜயா... காசுக்காக வீட்டோட மாப்பிள்ளையாகப்போகும் ரவி?
Related image2
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
36
உண்மையை உளறிய கிரிஷ்
Image Credit : jiohotstar

உண்மையை உளறிய கிரிஷ்

இதையடுத்து கிரிஷை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார் ரோகிணி. அங்கு முத்துவும், மீனாவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கிரிஷிடம் எதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருக்க என கேட்க, தலைவலி அதனால் தான் வந்தேன் என சொல்கிறார். எதனால் தலைவலி வந்தது என கேட்டதும், அடிக்கடி அம்மா, ஆச்சி கூட சண்டைபோட்டா தலைவலி வரும், மனோஜ் அப்பா கூட போன்ல டென்ஷனா பேசுனா தலைவலி வரும், அதேமாதிரி சிந்தாமணி பாட்டி கூட பேசும்போதும் எனக்கு தலைவலிக்கும் என கூறி ரோகிணியை வசமாக மாட்டிவிட்டுள்ளார் கிரிஷ். பின்னர் ரோகிணி அவரை டாக்டரிடம் அழைத்து செல்கிறார்.

46
ஒட்டுக்கேட்கும் விஜயா
Image Credit : jiohotstar

ஒட்டுக்கேட்கும் விஜயா

மறுபுறம் விஜயா மட்டும் மீனா அம்மா வீட்டில் தனியாக இருக்கும் போது, மீனா அம்மாவை தேடி அவருடைய தோழிகள் இருவர் வருகிறார்கள். பத்திரிக்கை கொடுக்க வந்திருப்பதாக அவர்கள் சொல்ல, அவங்க இப்போ வந்திருவாங்க என சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்கிறார் விஜயா. உள்ளே சென்றதும் வெளியே என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்கிறார் விஜயா. அப்போது அந்த இரு பெண்களும், மீனாவுக்கு கொடுமைக்கார மாமியார் அமைஞ்சிருக்குனு அக்கா நம்மகிட்ட சொல்லி வருத்தப்படுவாங்க. இப்போ விதியை பாத்தியா, அதே மாமியாருக்கு இப்போ தங்குறதுக்கு வீடு இல்ல. சந்திரா அக்கா வீட்டுல தங்குற நிலைமை ஆகிடுச்சு என சொல்கிறார்கள். இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுவிடுகிறார் விஜயா.

56
சந்திரா உடன் சண்டை போடும் விஜயா
Image Credit : jiohotstar

சந்திரா உடன் சண்டை போடும் விஜயா

பின்னர் மீனா அம்மா வந்ததும் அவரிடம் பத்திரிக்கை கொடுத்துவிட்டு இருவரும் கிளம்புகிறார்கள். அவர்கள் சென்றபின்னர் ரூமை விட்டு வெளியே வரும் விஜயா, சந்திராவிடம் நான் கொடுமைக்கார மாமியார்னு ஊர் ஃபுல்லா சொல்லி வச்சிருக்கீங்களா என கேட்டு சண்டை போடுகிறார். இப்படி என்னை அவமானப்படுத்துறவங்க வீட்டுல ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது என சொல்லிக் கொண்டிருக்கையில் முத்துவும் மீனாவும் அங்கு வருகிறார். அப்போது நடந்ததை கூறுகிறார் விஜயா. பின்னர் மீனாவை பார்த்து வீட்டை மீட்க உன்னுடைய பதவியை வேண்டுமென்றே விட்டுக் கொடுக்காமல் இருக்க, அதனால தான் நான் இப்படி அவமானப்படுறேன் என சொல்கிறார் விஜயா.

66
காரை விற்க முடிவெடுக்கும் முத்து
Image Credit : jiohotstar

காரை விற்க முடிவெடுக்கும் முத்து

உடனே மீனா, நான் இப்பவே போய் என்னுடைய பதவியை ராஜினாமா பண்ணப் போறேன் என செல்கிறார். அவரை தடுத்து நிறுத்தும் முத்து, நான் பணத்தை கொடுத்து வீட்டை மீட்பேன் என சொல்கிறார். உன்னால எப்படிடா அவ்வளவு பணத்தை ரெடி பண்ண முடியும் என விஜயா கேட்க, முடியலேனா நான் என் காரை வித்தாவது பணத்தை கட்டுவேன் என கூறி இருக்கிறார். ரெண்டு நாள் தான் டைம், அதுக்குள்ள பணத்தை கொடுக்கலேனா நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன் என சொல்லிவிடுகிறார் விஜயா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Actor Jai: கோவிலில் எனக்கு நடந்த அவமானம்.! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!
Recommended image3
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணிக்கு சாபம் விட்ட விஜயா... காசுக்காக வீட்டோட மாப்பிள்ளையாகப்போகும் ரவி?
Recommended image2
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved