MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி

Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி

Ethirneechal Thodargiradhu Serial Today Episode: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்டுள்ளதால் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 25 2026, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி தன் தங்கச்சி அன்புக்கரசிக்காக நியாயம் கேட்ட நிலையில் அவரை நியாயம் கிடைக்கும் வரை வீட்டிலேயே தங்க அனுமதி கொடுத்துள்ளார் ஈஸ்வரி. அம்மாவின் இந்த முடிவை தர்ஷினி எதிர்க்க, நீ இந்த விஷயத்துல தலையிடாத என தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, உனக்கு இப்போ படிப்பு தான் முக்கியம் ஒழுங்கா ஹாஸ்டல் போய் படிக்கிற வழியப்பாரு என சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பாகி மாடிக்கு செல்கிறார் தர்ஷினி. அதுமட்டுமின்றி அன்புக்கரசியை நீ தர்ஷன் ரூமில் தங்கிக்கோ என கூறுகிறார். இதைக்கேட்டு நந்தினி, ரேணுகா ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சாட்சி சொல்ல ஆள் திரட்டும் ஜனனி
Image Credit : youtube/suntv

சாட்சி சொல்ல ஆள் திரட்டும் ஜனனி

தர்ஷினி மாடியில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு ஜனனி போன் பண்ணுகிறார். அவர் தர்ஷினியிடம் நீ கோர்ட்ல சாட்சி சொன்னா ஸ்ட்ராங்கா இருக்கும்னு சாருபாலா மேம் சொல்றாங்க, அதனால நீ கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துரு என சொல்கிறார் ஜனனி. அதற்கு தர்ஷினியும் ஓகே சொல்ல, வீட்ல என்ன சொல்லிட்டு வருவ என கேட்கிறார் ஜனனி, அதற்கு அவர் நான் ஹாஸ்டல் போய் படிக்க போறேன்னு சொல்லிட்டு வந்துடுறேன் என கூறுகிறார். சரி காலைல கிளம்பி வா என ஜனனி சொல்ல, நான் இப்பவே கிளம்பி வர்றேன் என சொல்லிவிட்டு வீட்டில் பொட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் தர்ஷினி.

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : உனக்கு 2 பொண்டாட்டி கேக்குதாடா? தர்ஷனை அடிவெளுத்த ஈஸ்வரி - ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Related image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
35
ஜனனி பேச்சை கேட்டு கிளம்பும் தர்ஷினி
Image Credit : youtube/suntv

ஜனனி பேச்சை கேட்டு கிளம்பும் தர்ஷினி

கீழே ஆதி குணசேகரன் அமர்ந்திருக்க, எங்க கிளம்புற என கேட்கிறார்கள். அதற்கு தர்ஷினியும் அம்மா தான் என்னை ஹாஸ்டல் போக சொன்னாங்க, அதான் கிளம்பிட்டேன் என சொல்கிறார். அவரை நந்தினி போல வேண்டாம் என தடுக்க பார்க்கிறார். ஆனால் குணசேகரன் அவ போகட்டும் என சொல்லிவிடுகிறார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த தர்ஷினி, ஜனனிக்கு போன் போட்டு அட்ரஸை தன்னுடைய போனுக்கு அனுப்புமாறு கேட்கிறார். ஜனனியும் அனுப்பி வைக்கிறார். பின்னர் வாடகை கார் ஒன்றில் ஏறி ஜனனி வீட்டுக்கு கிளம்புகிறார் தர்ஷினி. அந்த கார் டிரைவர் ஏதேதோ பாதையில் அழைத்து செல்ல, தர்ஷினிக்கு சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பெண்கள் காரில் ஏறுகிறார்கள்.

45
கடத்தப்படும் தர்ஷினி
Image Credit : youtube/suntv

கடத்தப்படும் தர்ஷினி

யார் இவங்க என தர்ஷினி கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண் மயக்க மருந்து தடவிய துணியை தர்ஷினி முகத்தில் வைத்து அமுக்குகிறார். இதனால் தர்ஷினி மயங்கிவிட அவரை கடத்திச் செல்கிறார்கள். தர்ஷினி பக்கத்துல வந்துட்டேன்னு சொல்லி ரொம்ப நேரம் ஆச்சேனு ஜனனி பதற்றம் அடைகிறார். தர்ஷினிக்கு போன் போட்டால் அவருடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருக்கிறது. இதனால் டென்ஷன் ஆகிறார் ஜனனி. பின்னர் சக்தி உடன் கிளம்பும் ஜனனி, தர்ஷினியை தேடச்செல்கிறார். மறுபுறம் வீட்டில் தர்ஷினி ஹாஸ்டல் கிளம்பி சென்ற விஷயத்தை நந்தினியும், ரேணுகாவும் ஈஸ்வரியிடம் சொல்கிறார்கள். தர்ஷினி கடத்தப்பட்ட விஷயம் இன்னும் ஈஸ்வரிக்கு தெரியாது.

55
தர்ஷினியை கடத்தியது யார்?
Image Credit : youtube/suntv

தர்ஷினியை கடத்தியது யார்?

ஆதி குணசேகரன் தர்ஷினியை கடத்தி இருக்க வாய்ப்பே இல்லை. அவரை கடத்தியது இராவணனாக தான் இருக்கும். ஏனெனில் ஜனனியின் போனை விடாமல் ட்ராக் செய்து வருகிறார் இராவணன். தர்ஷினி ஜனனி வீட்டுக்கு செல்லும் விஷயமும் அவருக்கு தெரிந்திருக்கும். அதனால் அவரை கடத்தி, ஜனனிக்கு மேலும் கெட்டப்பெயர் வர வைக்க பிளான் போட்டுள்ளார் இராவணன். தர்ஷினியும் ஜனனியும் போனில் பேசிய ஆடியோவை அவர் ஈஸ்வரி அனுப்பி வைத்து, ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே மேலும் பகையை முட்டிவிடப்போகிறார் இராவணன். தன் மகளை ஜனனி கோர்ட்டில் சாட்சி சொல்வதற்காக கடத்தி வைத்திருக்கிறார் என்று சொல்லி ஈஸ்வரி ஜனனி மீது போலீசில் புகார் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
Recommended image3
Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : உனக்கு 2 பொண்டாட்டி கேக்குதாடா? தர்ஷனை அடிவெளுத்த ஈஸ்வரி - ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Recommended image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved