- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மீது பாசம் காட்டிய நந்தினிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் சக்தியும் தற்போது ஆதி குணசேகரன் வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தனி அறையில் இருக்க, ஜனனிக்கு சாப்பாடு ரெடி பண்ண கிச்சனுக்குள் செல்கிறார் சக்தி. அப்போது நந்தினியும், ரேணுகாவும் அவருக்காக கலி கிண்டித்தருவதாக சொல்கின்றனர். அதைக்கேட்டு கடுப்பாகும் சக்தி, கையில் இருந்த பாத்திரத்தை தூக்கி எறிந்து அவர்கள் இருவருடனும் சண்டை போடுகிறார். ஒன்னு அவங்க பக்கம் நில்லுங்க, இல்லேனா எங்க பக்கம் நில்லுங்க, ரெட்ட குதிரையில சவாரி பண்ணலாம்னு நினைக்காதீங்க என திட்டுகிறார்.
Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
சண்டை போடும் சக்தி
பின்னர் சத்தம் கேட்டு கதிர், ஞானம் ஆகியோரும் அடுப்படிக்கு வர, அவர்கள் சக்தியையும் ஜனனியையும் திட்டுகிறார்கள். இதனால் கடுப்பான சக்தி, கதிரை அடிக்க பாய்கிறார். பின்னர் ஜனனி, சண்டை வேண்டாம் என சொல்லி சக்தியை அழைத்து செல்கிறார். ரூமிற்கு சென்று படுத்து தூங்குகிறார்கள். அப்போது தூக்கத்தில் ஜனனிக்கு ஒரு கெட்ட கனவு வருகிறது. தர்ஷினியை ஒரு ரெளடி கும்பல் துரத்தி செல்வது போலவும், அவர்களிடம் தர்ஷினி சிக்கிக் கொள்வது போலவும் காட்டப்படுகிறது. பின்னர் பயந்து எழுந்துவிடுகிறார் ஜனனி.
ஜனனி கண்ட கெட்ட கனவு
அதன்பின்னர் சக்தியிடம், தர்ஷினிக்கு எதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு என சொல்லி ஃபீல் பண்ணுகிறார் ஜனனி. அவரை கூல்டவுன் பண்ணும் சக்தி, நீ படுத்து தூங்கு நாளைக்கு காலையில நான் தர்ஷினியோட காலேஜுக்கு போய் அவளோட ஃபிரெண்ட்ஸ் கிட்ட விசாரிக்கிறேன் என சொல்கிறார். மறுநாள் சக்தி, தர்ஷினியின் காலேஜுக்கு கிளம்பும் போது, ரூமை விட்டு வெளியே வரும் ஈஸ்வரி மயக்கம் போட்டு விழுகிறார். இதைப்பார்த்து பதறிப்போன சக்தி, வேகமாக வந்து அவரை தூக்கி, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். அதன்பின்னர் அவருக்கு சாப்பாடு கொடுத்ததும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.
நந்தினியிடம் சண்டை போடும் ஜனனி
சக்தி வெளியே சென்றிருந்த நேரத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக கிச்சனுக்கு செல்கிறார் ஜனனி. அப்போது அங்கு இருந்த ரேணுகா மற்றும் நந்தினி, அவரிடம் சாப்பிடுமாறு கூறுகிறார்கள். எனக்கு சப்பாடு வேண்டாம் என சொல்லிவிட்டு மீண்டும் மாடிக்கு செல்கிறார் ஜனனி. அப்போது அவரை தடுத்து நிறுத்தும் நந்தினி, உன்னோட கோபத்தை எல்லாம் சாப்பாடு மேல காட்டாத ஜனனி, வந்து சாப்பிடு என மீண்டும் அழைக்கிறார். அதற்கு செவி சாய்க்காத ஜனனி, எனக்கு எதுவும் வேண்டாம், நீங்க யாரும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என மூஞ்சில் அடித்தது போல் கூறிவிடுகிறார்.
ஜனனியின் முடிவு என்ன?
ஜனனியின் இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, எப்படி ஜனனி இப்படி உன்னால சொல்ல முடியுது. நாய்க்குட்டி மாதிரி, நீ சொல்லுற இடத்துக்கெல்லாம் உன் பின்னாடியே வந்திருக்கோம். எங்களையே இப்படி சொல்லுற என கண்ணீர் சிந்தியபடி பேசுகிறார் நந்தினி. அக்கா நீங்க பண்ணுனது பத்தாது, குணசேகரன் அக்யூஸ்ட் 1-னா, கதிர் அக்யூஸ்ட் நம்பர் 2, யார் என்ன பேசுனாலும் நான் இந்த வழக்கை கைவிடுவதாக இல்லை என ஒரே போடாக போட்டுவிடுகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

