MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : விசாலாட்சி போட்ட கண்டிஷன்; உண்ணாவிரதத்தை கைவிட்ட ஜனனி..!

Ethirneechal Thodargiradhu : விசாலாட்சி போட்ட கண்டிஷன்; உண்ணாவிரதத்தை கைவிட்ட ஜனனி..!

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த ஜனனியிடம் விசாலாட்சி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 02 2026, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்டுள்ள நிலையில், அவரை அனைவரும் வலைவீசி தேடி வருகின்றனர். சக்தி, தர்ஷினி படிக்கும் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது, ஒரு மாணவன் தர்ஷினி உடன் நெருங்கிப் பழகிய விஷயம் தெரியவந்தது. அதன்பின் அவர் விசாரித்ததில் அந்த பையன் தர்ஷினி மீது கிரஷ்ஷோடு இருந்தது சக்திக்கு தெரியவருகிறது. பின்னர் அவரின் ரூமில் சென்று பார்த்தபோது அந்த பையனும் காணாமல் போன விஷயம் தெரியவருகிறது. இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உண்ணாவிரதம் இருக்கும் ஜனனி
Image Credit : youtube/suntv

உண்ணாவிரதம் இருக்கும் ஜனனி

தர்ஷினியை ஜனனி தான் கடத்தி இருப்பார் என தான் சந்தேகப்படுவதாக ஈஸ்வரி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதனால் ஜனனியை வீட்டை விட்டு வெளியே விடாமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். தன்மீது ஈஸ்வரி இப்படி ஒரு பழி போட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனனி, சாப்பாடு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை நந்தினி, ரேணுகா ஆகியோர் சாப்பிட சொன்னபோது கூட அவர், அவர்களிடம் சண்டைபோட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார். பின்னர் விசாலாட்சியை அழைத்து விஷயத்தை சொல்லி உள்ளார் ரேணுகா.

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Related image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!
34
விசாலாட்சி போட்ட உத்தரவு
Image Credit : youtube/suntv

விசாலாட்சி போட்ட உத்தரவு

விசாலாட்சி ஜனனியை அழைத்து, சாப்பிட சொல்கிறார். முதலில் ஜனனி சாப்பிட மறுத்தாலும், பின்னர் அவர் நீ உனக்காக சாப்பிடாவிட்டாலும் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாது கண்டிப்பா சாப்பிடனும் என கண்டிஷன் போட்டதும், வேறு வழியின்றி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார் ஜனனி. இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு போதும் அத்தை என ஜனனி சொல்ல, என்ன கோழி கொறிச்ச மாதிரி கொறிச்சிட்டு போதும்ங்கிற, கொஞ்ச சாப்பிடு என சொன்னதும் எஞ்சியுள்ள சாப்பாட்டையும் சாப்பிடுகிறார் ஜனனி.

44
வம்பிழுக்கும் கதிர்
Image Credit : youtube/suntv

வம்பிழுக்கும் கதிர்

அப்போது அங்கு அருகில் நின்றுகொண்டிருந்த கதிர், யம்மா இப்பவே நல்லா கொட்டிக்க சொல்லு, நாளைக்கு காலையில போலீஸ் தூக்கிட்டுபோய், உள்ள வச்சு விசாரிச்சாங்கனா, இந்த மாதிரி துவையல், அவியல்னு எதுவும் கிடைக்காது. ஜெயில்ல என்னத்த கொடுக்குறாங்களோ அதைத்தான் திங்கணும், அதனால இப்பவே நல்லா சாப்பிட்டுக்க சொல்லு என கதிர் சொல்ல, அதற்கு பதிலடி கொடுக்கும் சக்தி, டேய் அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம், நீ வாய மூடிட்டு இரு என சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!
Recommended image3
Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved