- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை தேடி கண்டுபிடிக்க ஜனனி சென்றுள்ளார். அவரை போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்டிருக்கும் நிலையில், அவரை யார் கடத்தினார்கள் என்பது தெரியாமல் குழம்பிப் போன போலீஸ் வேறுவழியின்றி ஜனனியை ரிமாண்டில் எடுத்து விசாரிக்க வீட்டிற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஜனனி மீதுதான் சந்தேகம் இருப்பதாக சொல்ல, சக்தி மாடிக்கு சென்று ஜனனியை அழைக்க செல்கிறார். அங்கு ரூமில் சென்று பார்த்தால் ஜனனி உள்ளே இல்லை. இதையடுத்து வீடு முழுக்க தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?
எஸ்கேப் ஆன ஜனனி
ஜனனி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன விஷயம் அறிந்த போலீஸ், கன்பார்ம் அவங்க தான் தர்ஷினியை கடத்தி வச்சிருப்பாங்க, முதலில் அவங்கள பிடிக்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். போலீஸ் வந்தால் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்ததும் ஜனனி, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் ஒரு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில், திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். தர்ஷினியின் காதலனாக கூறப்படும் சுவாமிநாதன் சிறுமலையை சேர்ந்தவர் என்பது நினைவுக்கு வந்ததும், ஜனனி சிறுமலைக்கு செல்கிறார்.
இராவணனின் மாஸ்டர் பிளான்
மறுபுறம் தர்ஷினியை ஆள் வைத்து கடத்தி வைத்திருக்கும் இராவணன், அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆதி குணசேகரனின் குடும்பத்தில் ஒருத்தர் கூட உயிரோடு இருக்கக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறார் இராவணன். ஜனனி கைதானால், கோர்ட்டில் ஆதி குணசேகரனுக்கு எதிரான கேஸ் விசாரணைக்கு வரும்போது அவர் ஆஜர் ஆகாவிட்டால், ஆதி குணசேகரன் ஈஸியாக வெளியே வந்துவிடுவார் என இராவணனின் உதவியாளர் கேட்க, அதற்கு அவர் அப்படி ஈஸியா அவனை தப்பிக்க விடமாட்டேன். அவனை சிக்க வைக்க ஒரு பிளான் இருக்கு என சொல்கிறார்.
மன்னிப்பு கேட்கும் சுவாமிநாதன்
தர்ஷினியை இராவணன் கடத்திய விதமும் சற்று புதுமையாக உள்ளது. சுவாமிநாதனை கடத்தி, அவன் மூலம் தர்ஷினியை கடத்தி இருக்கிறார். தற்போது தர்ஷினி - சுவாமிநாதன் இருவரும் ஒரே இடத்தில் அடைத்துவைக்கப்பட்டு உள்ளனர். தன்னால் தான் உனக்கு இந்த நிலைமை வந்தது என்னை மன்னிச்சிரு தர்ஷினி என கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கிறார் சுவாமிநாதன். அதைவிடு, இப்போ இங்கு இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றி யோசி என கூறுகிறார் தர்ஷினி.
காத்திருக்கும் ட்விஸ்ட்
இராவணனின் பிடியில் சிக்கி இருக்கும் தர்ஷினியை, ஜனனி மீட்பாரா? அல்லது போலீஸ் ஜனனியை கைது செய்து சிறையில் அடைக்குமா? ஆதி குணசேகரனை பழிவாங்க இராவணன் எடுக்கப்போகும் புது ரூட் என்ன? ஜனனிக்கு தர்ஷினி இருக்கும் இடம் பற்றிய ஹிண்ட் கிடைக்குமா? தர்ஷினி, சுவாமிநாதன் உடன் சேர்ந்து தப்பித்துவிடுவாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.

