MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?

Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம், அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சக்தி.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 05 2026, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன வழக்கில் ஜனனியை ரிமாண்டில் எடுத்து விசாரிக்க போலீசார் வீட்டுக்கு வந்த நிலையில், அங்கு ஜனனி திடீரென காணாமல் போகிறார். அவரை வீடு முழுக்க போலீஸ் வலைவீசி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சக்திக்கும் அவர் எங்கு சென்றார் என்பதே தெரியாதாம். இப்படி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் நைசாக எஸ்கேப் ஆன ஜனனி, தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக சிறுமலைக்கு சென்றிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சுவாமிநாதனை தேடி செல்லும் ஜனனி
Image Credit : youtube/suntv

சுவாமிநாதனை தேடி செல்லும் ஜனனி

ஜனனி, தர்ஷினியின் நண்பரான சுவாமிநாதனை தேடி தான் சிறுமலை சென்றிருக்கிறார். அங்கு வனப்பகுதியில் அவரை வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள். உள்ளே யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை வந்து அழைத்து செல்ல சொல்கிறார்கள். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், ஜனனியை தனக்கு நன்றாக தெரியும் என கூறி அழைத்துச் செல்கிறார். ஜனனியும் உள்ளே சென்றால் போதும் என முடிவெடுத்து அந்த பெண் உடனே வனப்பகுதிக்குள் செல்கிறார். செல்லும் வழியில் சுவாமிநாதனை பற்றி விசாரித்தபடி செல்கிறார் ஜனனி.

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Related image2
Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
35
ஜனனி கடத்தப்படுகிறாரா?
Image Credit : youtube/suntv

ஜனனி கடத்தப்படுகிறாரா?

ஆனால் அந்த பெண் குறிப்பிட்ட தூரம் சென்றதும் சுவாமிநாதன் என்கிற பெயரில் இங்கு யாருமே இல்லை. ஆனால் இந்த நேரத்தில் இங்கிருந்து செல்வது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லி ஜனனி ஒருமாதிரி பார்க்கிறார். அவரின் பார்வையை வைத்து பார்த்தால், அந்த பெண் ஜனனியை கடத்திச் செல்ல வந்திருப்பாரோ என்கிற கேள்வி எழுகிறது. ஜனனியை கடத்த ஆதி குணசேகரன் அனுப்பிய ஆளாகவோ அல்லது இராவணன் அனுப்பிய ஆளாகவோ அவர் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஜனனிக்கு என்ன ஆகும் என்கிற பரபரப்பு ஒருபுறம் நிலவுகிறது.

45
கோபத்தை கொட்டிய சக்தி
Image Credit : youtube/suntv

கோபத்தை கொட்டிய சக்தி

மறுபுறம் ஜனனியை தேடி சென்ற சக்தி, வீட்டுக்கு ஆக்ரோஷமாக வருகிறார். வந்த வேகத்தில் ஆதி குணசேகரனிடம், ஜனனி எங்க, அவளை என்ன பண்ணீங்க. அவளுக்கு உங்களால தான் ஏதோ ஆபத்து, அவளை என்ன பண்ணீங்கனு சொல்லுங்க என கேட்டு சேரை தள்ளிவிடுகிறார் சக்தி. அப்போது அருகில் இருந்த கதிர், டேய் கைய, கால உடைச்சிருவேன். யார்கிட்ட வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க, போடா வெளிய என சொல்ல, சக்தி அவரது சட்டையை பிடித்து அவரை அடிக்கப்பாய்கிறார். அங்கிருந்த ஞானம் அவரை தடுத்து நிறுத்துகிறார்.

55
ஆதாரத்துடன் அதகளம் செய்யும் சக்தி
Image Credit : youtube/suntv

ஆதாரத்துடன் அதகளம் செய்யும் சக்தி

டேய் சக்தி தேவையில்லாம பேசாத என ஞானம் சொன்னதும், இந்த ஊழையிடுற வேலையெல்லாம் இங்க வச்சிக்காத என பதிலடி கொடுக்கும் சக்தி, தர்ஷினியை தேடிப்போன என் பொண்டாட்டி ஜனனியை காணோம் என சொன்னதும், என்னது ஜனனியை காணோமா என ஆச்சர்யத்துடன் கேட்கிறார் குணசேகரன். அப்போது அவர் அருகில் செல்லும் சக்தி, தயவு செஞ்சு என்கிட்ட நடிக்காதீங்க, நீங்க ஈஸ்வரி அண்ணியை கொலைவெறியோடு தாக்கிய வீடியோ என்கிட்ட இருக்கு என சக்தி சொல்ல அதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்
Recommended image2
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved