MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி

Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சிறுமலையில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் வந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 06 2026, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி, தர்ஷினியை தேடும் பணியில் இறங்கி இருக்கிறார். அதன் ஒருபகுதியாக அவர் தற்போது சுவாமிநாதனை தேடி சிறுமலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணின் உதவியுடன் சிறுமலை காட்டுக்குள் சென்றுள்ளார் ஜனனி. சிறிது தூரம் போன பிறகு தான், அங்கு சுவாமிநாதன் என யாருமே இல்லை என்கிற உண்மையை அந்த பெண் ஜனனியிடம் கூறுகிறார். இருந்தாலும் இன்று நீங்கள் கீழே செல்ல முடியாது. அதனால் இன்று எங்களுடன் தங்கிவிட்டு செல்லுங்கள் என கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிறுமலையில் ஜனனி
Image Credit : youtube/suntv

சிறுமலையில் ஜனனி

இதையடுத்து சிறுமலையில் உள்ள மலை கிராமத்திற்கு செல்லும் ஜனனி, அங்குள்ள குடிசை வீட்டில் தங்கி இருக்கிறார். தன்னை அங்கு அழைத்துவந்த பெண்ணிடம் அந்த ஊர் பற்றி கேட்டு தெரிந்துகொள்கிறார். ஜனனியின் போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை டிராக் பண்ணிய இராவணன், தன்னுடைய ஆட்களை அனுப்பி ஜனனியை தூக்கிவரச் சொல்கிறார். அவர்களும் இரவில் அங்கு செல்ல, ஜனனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவரை அங்கிருந்து தரதரவென இழுத்து செல்கிறார். ஊர் மக்கள் அவர்களை தடுக்கிறார்கள்.

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
Related image2
Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?
34
ஜனனியை இழுத்துச் செல்லும் கும்பல்
Image Credit : youtube/suntv

ஜனனியை இழுத்துச் செல்லும் கும்பல்

அப்போது ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இராவணனின் ஆட்கள். எங்களுக்கு ஜனனி மட்டும் தான் வேணும், ஒழுங்கு மரியாதையா அவளை எங்களோடு அனுப்பி வையுங்கள், இல்லையென்றால் இங்கு நடக்குறதே வேற என எச்சரிக்கிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கெல்லாம் அசராத ஊர் மக்கள், ஜனனியை கூட்டிட்டு போக விடமாட்டோம் என தடுக்கிறார்கள். ஆனால் அந்த நபர்கள் ஜனனியை தரதரவென இழுத்துச் செல்கிறார்கள். அநேகமாக தர்ஷினி இருக்கும் இடத்தில் தான் ஜனனியையும் கடத்திக் கொண்டு வைப்பார்கள் போல தெரிகிறது.

44
ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி

மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரனுடன் சண்டை போடும் சக்தி, ஜனனியை நீங்க தான் கடத்தி வச்சிருக்கீங்க என அவர் மீது பழிபோடுகிறார். அதுமட்டுமின்றி அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாக சொல்லும் சக்தி, அவர் ஈஸ்வரியை எப்படி தாக்கினார் என்பதையும் அவர் கண்முன்னே செய்து காட்டுகிறார். இதைப்பார்த்த ஆதி குணசேகரன் வெட வெடத்துப் போகிறார். அப்போது அங்கு இருந்த ஈஸ்வரி, சம்பந்தப்பட்ட நான் கேக்குறேன். அந்த வீடியோவை இப்போவே எனக்கு போட்டு காட்டு என கேட்கிறார்.

இதையடுத்து என்ன ஆகப்போகிறது? ஜனனி அந்த இராவணன் ஆட்களிடம் இருந்து தப்பித்தாரா? ஈஸ்வரி கேட்ட வீடியோவை அவரிடம் சக்தி போட்டுக் காட்டினாரா? தர்ஷினியை தேடிக் கண்டுபிடித்தார்களா? தர்ஷினி, இராவணன் கேங்கிடம் இருந்து தப்பித்தாரா? சக்தி ஜனனியை தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : செருப்பால அடிப்பேன்... ரோகிணியை டார் டாராக கிழித்த விஜயா; அதிர்ச்சியில் மனோஜ்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved