- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை ஆதி குணசேகரன் வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்துள்ளனர். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக விசாரிக்க போலீசார் ஆதி குணசேகரன் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என கேட்க, அதற்கு அவர் ஜனனி மீதும் சக்தி மீதும் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து ஜனனி, சக்தி இருவரையும் இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என உத்தரவிட்டிருந்தது போலீஸ். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்படும் சக்தி - ஜனனி
போலீஸிடம் ஜனனி மாசமாக இருப்பதால் அவரை தங்கள் வீட்டில் தங்க அனுமதிக்குமாரு சக்தி கேட்டிருந்தார். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆதி குணசேகரன் வீட்டிலேயே தங்குகிறார்கள். இருவரும் தங்களின் ரூமில் சென்று அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது தர்ஷினிக்கு என்ன ஆகிருக்கும், அவ எங்க இருக்கா ஒன்னுமே தெரியலயே சக்தி என சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார் ஜனனி. இதையடுத்து அவர் டயர்டாக இருந்ததால், அவருக்கு வீட்டிலேயே சாப்பாடு செய்து எடுத்து வரச் செல்கிறார் சக்தி.
கோபத்தை கொட்டிய சக்தி
கிச்சனுக்குள் சென்று பார்க்கையில் எந்த உணவும் இல்லாததால், அவரே அங்கிருக்கு சட்டியை எடுத்து கழுவி சமையல் செய்ய துவங்குகிறார். அப்போது அருகில் இருந்த ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் அவரிடம் ஏதாவது செய்யணுமா நாங்க செஞ்சி தர்றோம், ஜனனி கலி ரொம்ப புடிக்கும் அதை நான் கிண்டி தர்றேன் என நந்தினி சொல்ல, அதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற சக்தி, சட்டென தன் கையில் இருக்கும் பாத்திரத்தை கீழே போட்டு, நீங்க ஒரு மண்ணும் செஞ்சுதர வேண்டாம் என கூறிவிடுகிறார்.
அழுது புலம்பும் ஈஸ்வரி
மறுபுறம் எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் ஈஸ்வரியை சென்று சந்திக்கும் ரேணுகா மற்றும் நந்தினி, அவரிடம் ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்க என கெஞ்சுகிறார்கள். அதற்கு அவர் எனக்கு எதுவும் வேண்டாம், தயவு செஞ்சு என்னை கொஞ்சம் தனியா விட்டுறுங்க என கூறுகிறார். அதன்பின்னர் நந்தினி, ரேணுகா இருவரும் அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகின்றனர். அவர்கள் போன பின்னர் தர்ஷினியை நினைத்தே ஃபீல் பண்ணி அழுகிறார் ஈஸ்வரி. தான் அவளை ஹாஸ்டலுக்கு போனு சொல்லிருக்கவே கூடாது என குற்ற உணர்ச்சியில் குமுறுகிறார்.
மயக்கம் போட்டு விழுந்த ஈஸ்வரி
மறுபக்கம் ஜனனி ரூமில் தனியாக அமர்ந்திருக்க, அப்போது அங்கு வரும் சக்தி, நான் தர்ஷினி காலேஜ் வரை சென்று விசாரித்துவிட்டு வருகிறேன். நீ தயவு செஞ்சு கீழ மட்டும் இறங்கி வந்துராத என கூறுகிறார். உனக்கு ஏதாச்சும் வேண்டுமென்றால் எனக்கு போன் பண்ணு நான் உனக்கு ஆர்டர் போட்டு தருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது கீழே இறங்கி வரும் போது, ஈஸ்வரி ரூமில் இருந்து வெளியே வந்து மயக்கம் போட்டு விழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

