- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி மற்றும் ரவிக்கு எதிராக நீத்து போட்ட பிளான் தோல்வியில் முடிந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்து சதித்திட்டத்துடன் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிற்குள் முகத்தை மூடியபடி வந்திருக்கிறார். அவர் அங்கு லெமன் டீ ஆர்டர் பண்ணி குடித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஸ்ருதியும், ரவியும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டிவிட்டு ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த நீத்து, நீங்க ரெண்டு பேரும் இனி நிம்மதியாவே இருக்க முடியாதபடி பண்ணுறேன் என மனசுக்குள்ளே வன்மத்தை கொட்டுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
நீத்து விட்டுச்சென்ற பேக்
நீத்து, டீ குடிச்சிட்டு தன் முகத்தை மூடியபடியே அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். அதன்பின் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் நீத்து பேக் ஒன்றை மறந்து வச்சிட்டு போனதாக ஸ்ருதி மற்றும் ரவியிடம் கொடுக்கிறார். அவர்கள் அது யார் பேக் என விசாரித்துக் கொண்டிருக்கும் போது, போலீஸ் அங்கு வருகிறார்கள். அவர்கள் இந்த ஹோட்டலில் லைசன்ஸ் இல்லாம சரக்கு சப்ளை பண்ணுவதாக புகார் வந்திருக்கு அதைத்தான் விசாரிக்க வந்திருக்கிறோம் என கூறுகிறார். அப்போது அங்கிருந்த பேக்கை பார்த்து இதுல என்ன இருக்கு என கேட்கிறார்.
ஸ்ருதி ஹோட்டலுக்கு ரெய்டு வந்த போலீஸ்
இங்கு சாப்பிட வந்த பெண் இந்த பையை மறந்து வச்சிட்டு போனதாக ஸ்ருதி சொல்ல, போலீசார் அந்த பையை திறந்து பார்க்கிறார்கள். அப்போது அந்த பை முழுக்க சரக்கு பாட்டில்கள் இருக்கின்றன. இதையடுத்து சட்டவிரோதமாக சரக்கு விற்பனை செய்ததற்காக உங்களை அரெஸ்ட் பண்ணுறேன் என போலீஸ் சொல்ல, அதற்கு ஸ்ருதி, இது அந்த நீத்து வேலையாக தான் இருக்கும் என சந்தேகப்பட்டு சிசிடிவை செக் பண்ணி பார்க்கிறார். அதில் நீத்து தான் அந்த சரக்கு பாட்டில்களை எல்லாம் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. அதன்பின் போலீஸ் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள்.
நீத்துவின் டிராமா அம்பலம்
அந்த பேக்கை எடுத்துக்கொண்டு நீத்துவிடமே போலீஸ் கொடுக்கிறார்கள். நீத்து சொல்லி தான் அந்த போலீஸ் அங்கு விசாரிக்க வந்திருக்கிறார்கள். தன்னுடைய பிளான் பிளாப் ஆன சோகத்தில் நீத்து நின்று கொண்டிருக்க, அப்போது ஸ்ருதியும், ரவியும் பைக்கில் வந்து அவரை எச்சரிக்கிறார்கள். இனி இதுமாதிரி சில்லரைத்தனமான வேலையெல்லாம் பண்ணாத என சொல்லிவிட்டு செல்கிறார்கள். தன்னுடைய பிளான் சொதப்பியதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் நீத்து. ரவி இந்த விஷயத்தை முத்துவிடமும் போன் பண்ணி சொல்லிவிடுகிறார்.
ஏலத்திற்கு வரும் வீடு
முத்து, நீத்துவின் சகுனி வேலை பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். இதையடுத்து முத்துவுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் வீட்டை ஏலத்துக்கு விடப்போவதாக கூறுகிறார்கள். அதனால் வீட்டை எப்படி மீட்பது என்பது தெரியாமல் சோகத்தில் இருக்கிறார் முத்து. அந்த கவலையோடு ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் செல்ல, அங்கு வந்த ஸ்வேதா என்ன ஆச்சு டல்லா இருக்கீங்க என முத்துவிடம் கேட்க, அவர் ரெஸ்டே இல்லாமல் கார் ஓட்டுவதால் ரொம்ப டயர்டா இருக்கு என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

