MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து வீட்டை மீட்க பணத்தை ஏற்பாடு செய்த விஷயத்தை சிந்தாமணியிடம் போட்டுடைத்துள்ளார் ரோகிணி.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 02 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீடு ஜப்தி செய்யப்பட்டு அதற்கு சீல் வைத்துள்ளார் சிந்தாமணி. இதனால் அவர்கள் தற்போது மீனா அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார்கள். வீட்டை மீட்கும் பொறுப்பை முத்து ஏற்றுள்ள நிலையில், அதற்கு தேவையான பணத்தை ரெடி பண்ண பிசியாக உழைத்து வருகிறார் முத்து. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பழைய ஓனரிடம் இருந்த கார்களை எல்லாம் சரி செய்து அதனை புதிதுபோல் மாற்றி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முத்துவுக்கு கிடைக்கும் பணம்
Image Credit : jiohotstar

முத்துவுக்கு கிடைக்கும் பணம்

முத்து கார்களை எல்லாம் புதிதுபோல் ரெடி பண்ணி இருப்பதை பார்த்த மீனா, மிகவும் சந்தோஷப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் முத்துவின் பழைய ஓனர், முத்து கார்களை எல்லாம் சரிசெய்து பளபளவென மாற்றி இருப்பதை பார்த்து வியந்து போகிறார். அதுமட்டுமின்றி முத்துவுக்கு பணம் தர மாட்டேன் என சொன்ன பைனான்சியரையும் கூடவே அழைத்து வந்திருக்கிறார். அவரிடம் அங்கு இருக்கும் கார்களை எல்லாம் காட்டி இதற்காக முத்துவுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என கேட்கிறார். அவரும் சில கண்டிஷன்களுடன் சம்மதம் தெரிவிக்கிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Related image2
Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்
35
ரோகிணியிடம் உண்மையை சொன்ன மனோஜ்
Image Credit : jiohotstar

ரோகிணியிடம் உண்மையை சொன்ன மனோஜ்

இதனால் செம சந்தோஷம் அடையும் முத்து வீட்டுக்கு சென்று அனைவரிடமும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்கிறார். பின்னர் விஜயா, தன் மூத்த மகன் மனோஜுக்கு போன் போட்டு முத்து பணத்தை ரெடி பண்ணிய விஷயத்தை கூறுகிறார். விஜயாவிடம் மனோஜ் போன் பேசி முடித்ததும் ரோகிணி மனோஜை சந்திக்க வருகிறார். அவர் வந்ததும் சிசிடிவியை ஆஃப் பண்ணிவிட்டு, பேசுகிறார் மனோஜ். அப்போது ரோகிணியிடம் முத்து, வீட்டை மீட்பதற்காக பணத்தை ரெடி பண்ணிய விஷயத்தை கூறிவிடுகிறார் மனோஜ்.

45
சிந்தாமணியை சந்திக்கும் ரோகிணி
Image Credit : jiohotstar

சிந்தாமணியை சந்திக்கும் ரோகிணி

இதன்பின்னர் வீட்டுக்கு சென்று ஆழ்ந்த யோசனையில் ரோகிணி அமர்ந்திருக்க, அவரைப் பார்க்க சிந்தாமணி அங்கு வருகிறார். அவரிடம் தனியாக சென்று பேசும் ரோகிணி, முத்து வீட்டை மீட்க பணத்தை ரெடி பண்ணிய விசயத்தை சொல்லிவிடுகிறார். மேலும் அவரிடம் நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது ஆண்ட்டி, அந்த விஜயா திரும்ப அந்த வீட்டுக்கு போகக்கூடாது, வீடு கிடைச்சதுனா மனோஜுக்கு மறுபடியும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. அவங்க மீனா வீட்டில் இருந்தால் தான் அமைதியா இருப்பாங்க என கூறுகிறார்.

55
சிந்தாமணியின் சதி வேலை ஆரம்பம்
Image Credit : jiohotstar

சிந்தாமணியின் சதி வேலை ஆரம்பம்

நான் மனோஜ் கூட சேரும்போது அந்த வீடு அவங்களுக்கு கிடைச்சா போதும் என ரோகிணி சொல்ல, உன்னை அவன்கூட சேர்த்து வைக்கவா நான் அந்த வீட்டை ஜப்தி பண்ண வச்சேன். இவ ஒருத்தி நான் சொன்னதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கா என தன் மனசுக்குள்ளேயே பேசி சிரிக்கிறார் சிந்தாமணி. நீ மனோஜ் கூட சேரும் வரை அவங்களுக்கு அந்த வீடு கிடைக்காம நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறும் சிந்தாமணி, ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார். அது என்ன? அவர் வீட்டை ஏலத்தில் விட என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!
Recommended image2
Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்
Recommended image3
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Recommended image2
Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved