MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்

Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலம் விடுவதற்காக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், முத்து அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 01 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து வீட்டை மீட்பதற்காக பணத்தை ரெடி பண்ணும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அவர் இதற்காக தன்னுடைய பழைய ஓனரிடம் இருக்கும் ஓடாத கார்களை எல்லாம் வாங்கி, அதனை சரிசெய்து புதிதுபோல் மாற்றி, அந்த கார்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்து வீட்டுக் கடனை அடைத்துடலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறார். அந்த பழைய கார்களை எல்லாம் இரண்டே நாட்களில் அவரே சரிசெய்து புதிதுபோல் மாற்றிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வக்கீல் நோட்டீஸ்
Image Credit : jiohotstar

வக்கீல் நோட்டீஸ்

மீனா அம்மா வீட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் உடன் வருகிறார். அவர் சிந்தாமணி தான் இந்த நோட்டீஸை அனுப்பி இருப்பதாகவும். அதில் வீட்டை ஏலத்தில் விடுவதற்கான நாளை குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார். இனிமேல் நம்மால் ஒன்னுமே செய்ய முடியாது. அந்த பணத்தை ரெடி பண்ணி அவர்களிடம் கொடுத்தால் மட்டுமே நம்மால் வீட்டை மீட்க முடியும் என சொல்லிவிடுகிறார். அவர் சொன்னதைக் கேட்டதும் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. மறுபுறம் விஜயா, தன்னுடைய வீடு தன் கையை விட்டு போகப்போகிறதா என சொல்லி அழுகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Related image2
Siragadikka Aasai : வீட்டை அபகரிக்க சிந்தாமணி செய்யும் சூழ்ச்சி... முத்துவின் புது பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
35
முத்துவுக்கு சவால்
Image Credit : jiohotstar

முத்துவுக்கு சவால்

இதையடுத்து அங்கு வரும் முத்துவிடம் எப்படியாவது பணத்தை ரெடி பண்ணுங்க என கூறுகிறார் மீனா. அதற்கு அவர் தற்போது ரெடியாகி உள்ள கார்களை காட்டி பைனான்சியரிடம் கடன் கேட்டு பார்க்கிறேன். அவரிடம் வட்டி கொஞ்சம் அதிகம், இருந்தாலும் அவன் கிட்ட பேசிப்பார்க்கிறேன் என கூறுகிறார். அதற்கு மீனா, எப்படியாவது நம்ம வீட்டை காப்பாத்திடனும், அத்தை, மாமாவோட கெளரவம் இதுல தான் இருக்கு என சொல்கிறார். உடனே முத்து, நீ கவலைப்படாத அப்பா ரெண்டு நாள்ல வீட்டை நான் மீட்டுவிடுவேன். யாரும் அதை நினைச்சு பயப்பட வேண்டாம் என கூறுகிறார்.

45
கடன் தர மறுக்கும் பைனான்சியர்
Image Credit : jiohotstar

கடன் தர மறுக்கும் பைனான்சியர்

அடுத்ததாக முத்து பைனான்சியரின் வீட்டிற்கு செல்கிறார். அவரிடம் முத்து பணம் கேட்க, உனக்கு பணம் தர முடியாது என மூஞ்சில் அடித்ததுபோல் சொல்லிவிடுகிறார் பைனான்சியர். இதைக்கேட்டு ஷாக் ஆன முத்து, கெஞ்சி கேட்டுப்பார்க்கிறார். அதற்கு அந்த பைனான்சியர், நீ பணம் வாங்கும்போது பவ்வியமா இருப்ப, திருப்பி கேட்டா பிரச்சனை பண்ணுவ. இப்படி தான் இதுக்கு முன்னாடி பண்ணுன, அதனால உனக்கு நான் பணம் தர மாட்டேன் என சொல்லிவிடுகிறார். ரோட்டுல போற முன்னப்பின்ன தெரியாதவனுக்கு கூட நான் கடன் கொடுப்பேன் உனக்கு மட்டும் கொடுக்கவே மாட்டேன் என கறாராக கூறுகிறார்.

55
பைனான்சியர் போட்ட கண்டிஷன்
Image Credit : jiohotstar

பைனான்சியர் போட்ட கண்டிஷன்

இருப்பினும் முத்து அவரிடம் கெஞ்சி கேட்டுப்பார்க்கிறார். வேறுவழியின்றி அந்த பைனான்சியர் ஒரு கண்டிஷன் போடுகிறார். உனக்காக யாராச்சும் வந்து சாட்சி கையெழுத்து போட்டால் நான் கடன் தருகிறேன் என சொல்கிறார். இதையடுத்து சாட்சி கையெழுத்து போட ஆளைத் தேடி அலைகிறார் முத்து. யாருமே சாட்சி கையெழுத்து போட வரவில்லை. இறுதியாக தன்னுடைய பழைய ஓனரிடம் சென்று தன்னுடைய பிரச்சனையை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Recommended image2
Siragadikka Aasai : வீட்டை அபகரிக்க சிந்தாமணி செய்யும் சூழ்ச்சி... முத்துவின் புது பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved