MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!

Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் பேச்சைக் கேட்டு ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல ஆயத்தமாகி வருகிறார் தர்ஷினி.

2 Min read
Author : Ganesh A
Published : May 23 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறதுசீரியலில் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் வீட்டில் வைத்து தன் கையால் திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஈஸ்வரி ஆசைப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து, தாலி கட்டும் நேரத்தில் தர்ஷனுடன் சேர்ந்து வாழ தனக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பார்கவி. அதுமட்டுமின்றி அன்புக்கரசியையும் போன் போட்டு வீட்டுக்கு வர வைத்திருக்கிறார். அவருடன் அறிவுக்கரசி, முல்லை ஆகியோரும் வந்து அன்புக்கும், தர்ஷனுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : ரோகிணியை மாட்டிவிட்ட கிரிஷ்... மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த விஜயா...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஈஸ்வரி போட்ட கண்டிஷன்
Image Credit : youtube/suntv

ஈஸ்வரி போட்ட கண்டிஷன்

தர்ஷன் தன்னுடைய தங்கச்சியை எப்படியெல்லாம் ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பதை அறிவுக்கரசி லிஸ்ட் போட்ட சொல்ல, அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி, தர்ஷனை அடிவெளுத்திருக்கிறார். வீட்டுல பார்கவி, ஆபிஸ்ல அன்புக்கரசினு ரெண்டு பேரையும் வச்சிக்கலாம்னு நினைச்சியாடா என கேட்டு, கன்னத்திலேயே பளார் பளார் என அறைவிட்டிருக்கிறார் ஈஸ்வரி. அதுமட்டுமின்றி நீ அன்புக்கரசியை எப்படியாவது பேசி வெளிய அனுப்பு, இல்லேனா நீ செஞ்ச தப்புக்கு தண்டனையா அவளையே கல்யாணம் பண்ணிக்கோ என கூறிவிடுகிறார் ஈஸ்வரி.

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : உனக்கு 2 பொண்டாட்டி கேக்குதாடா? தர்ஷனை அடிவெளுத்த ஈஸ்வரி - ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Related image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்
35
அன்புக்கரசியின் சூழ்ச்சி
Image Credit : youtube/suntv

அன்புக்கரசியின் சூழ்ச்சி

நியாயம் கிடைக்கும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம் என அறிவுக்கரசியிடம் கூறி இருக்கிறார் ஈஸ்வரி. இப்படி நிலைமை தங்களுக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்திக் கொள்ள முற்படும் அன்புக்கரசி, புது குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். ஈஸ்வரியிடம் பேசும் அன்புக்கரசி, உங்க பையன் தர்ஷன் என்கூட திருச்சி வரைக்கும் வந்து, என்னோடு ஒரே ரூமில் தங்கினாருல்ல, அங்க என்ன நடந்துச்சுனு தெரியுமா என சொல்லி, தன்னுடைய கட்டுக் கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கி உள்ளார் அன்புக்கரசி.

45
சாருபாலா கொடுக்கும் ஹிண்ட்
Image Credit : youtube/suntv

சாருபாலா கொடுக்கும் ஹிண்ட்

மறுபுறம் ஜனனிக்கு தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாம் இராவணனின் செயல் தான் என்பது தெரியவருகிறது. அவரே அதனை போன் போட்டு சொல்லி இருக்கிறார். அதுமட்டுமின்றி இதையெல்லாம் தான் குணசேகரனை பழிவாங்க தான் செய்துவருகிறேன் என்றும் கூறுகிறார். பின்னர் உடனடியாக சாருபாலாவை சந்திக்கும் ஜனனி, அவரிடம், இந்த வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வர என்ன செய்ய வேண்டும் என கேட்க, ஈஸ்வரி ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொன்னால் தான் அப்படி நடக்கும் என கூறுகிறார்.

55
சாட்சி சொல்லப்போகிறாரா தர்ஷினி?
Image Credit : youtube/suntv

சாட்சி சொல்லப்போகிறாரா தர்ஷினி?

ஈஸ்வரி அக்கா அப்படி சொல்ல மாட்டாங்க, வேறு ஏதாவது வழி இருக்கா மேம் என ஜனனி கேட்க, அந்த வீட்டுல நம்ம பக்கம் நிற்கக்கூடிய ஒரே ஆளுனா தர்ஷினி மட்டும் தான். அவ ஆதி குணசேகரனின் பொண்ணூங்குற காரணத்தால், அவ வந்து கோர்ட்ல பேசுனா நமக்கான சான்ஸ் கொஞ்சம் அதிகமா இருக்கும் என சொல்கிறார் சாருபாலா. உடனே தர்ஷினிக்கு போன் போட்டு வர சொல்கிறார் ஜனனி. அப்போது தர்ஷினி வெளியே கிளம்பும் போது அவரை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, நீ போகக் கூடாது என சொல்ல, நானும் இந்த கேஸ்ல ஒரு முக்கியமான சாட்சி தான் நான் பேசுவேன் என பதிலடி கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Serial: ரூ.18 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்.! நடிகை ராதிகா சரத்குமார் மீது பகீர் புகார்களை அடுக்கிய பிரபல நடிகை.!
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : உனக்கு 2 பொண்டாட்டி கேக்குதாடா? தர்ஷனை அடிவெளுத்த ஈஸ்வரி - ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved