- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வந்தபோது அவரை கண்டபடி திட்டி இருக்கிறார் விஜயா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் வீடு ஜப்தி செய்யப்பட்டுள்ளதால், அதனை எப்படியாவது மீட்க வேண்டும் என போராடி வருகிறார் முத்து. மறுபுறம் ஸ்ருதியின் அம்மா வீட்டில் இருக்கும் ரவியிடம் அவரது மாமனார் ஒரு டீலிங் போட்டிருக்கிறார். அது என்னவென்றால், தான் 10 லட்சம் தருவதாகவும், அந்த பணத்தை வீட்டை மீட்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இனி நீங்கள் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறார். ஆனால் அந்த கண்டிஷனை ஏற்க மறுத்துவிடுகிறார் ரவி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Ethirneechal Thodargiradhu : தர்ஷனை பழிவாங்கிய பார்கவி... அன்புக்கரசி கழுத்தில் தாலி ஏறுமா?

தலைவி பதவியை ராஜினாமா செய்ய சொல்லும் விஜயா
தலைவி பதவியை விட்டுக் கொடுத்தால் வீட்டுக்கு வைத்த சீல்-ஐ எடுப்பதாக சிந்தாமணி சொல்லிருக்கால்ல அப்புறம் ஏன் நீ அந்த பதவியை ராஜினாமா பண்ணாம இருக்க என மீனாவிடம் கேட்கும் விஜயா, உனக்கு நம்ம வீட்டை விட அந்த பதவி தான் முக்கியமா போச்சா என கேட்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் அண்ணாமலை, அவ எதுக்கு பதவியை விட்டுக் கொடுக்கணும், அதெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன நடந்தாலும் அந்த தலைவி பதவியை மட்டும் ராஜினாமா பண்ணீராத மீனா என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார் அண்ணாமலை.
விஜயாவை லாக் பண்ணிய அண்ணாமலை
அங்கிருந்த ரவி, அண்ணி உங்களை நம்பி ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்காங்க, அவங்களுக்காக நீங்க இந்த பதவியை வீட்டுக்கொடுக்க கூடாது என சொல்கிறார். உடனே விஜயா, அப்போ வீடு நம்ம கையைவிட்டு போகணுமா என கேட்க, இந்த கேள்வி வெங்காயத்தையெல்லாம் உன்னுடைய பையன் மனோஜ் கிட்ட கேட்டிருக்கணும் என சொல்லி விஜயாவை ஆஃப் பண்ணுகிறார் அண்ணாமலை. ரெண்டுபேரும் சேர்ந்து என்னுடைய கையெழுத்தை திருட்டுத்தனமா போடும்போது உன் அறிவு வேலை செய்யலையா என கேட்க, கப்சிப்னு ஆகிறார் விஜயா.
ஒட்டுக் கேட்கும் விஜயா
இதையடுத்து மீனாவின் அம்மா, தன்னுடைய மகன் சத்யாவிடம், சம்மந்தி அம்மாவுக்கு மட்டன் ரொம்ப புடிக்கும்னு மீனா சொல்லுவா, அதனால இன்னைக்கு மட்டன் வைக்கலாம் என சொல்கிறார். அதற்கு சத்யா, எனக்கு நாளைக்கு தான் சம்பளம் வரும், இப்போ காசு இல்லையே என கூறுகிறார். உடனே மீனா அம்மா, கடன் வாங்கி வாங்கிட்டு வா என கூறுகிறார். இதையெல்லாம் ரூமில் இருந்து ஒட்டு கேட்கும் விஜயா, கடன் வாங்கிலாம் வாங்க வேண்டாம், சாம்பாரே வையுங்க என சொல்கிறார். பின்னர் மீனா அம்மா மளிகை கடைக்கு பொருள் வாங்க கிளம்பிவிடுகிறார்.
மீனா அம்மாவின் பெருந்தன்மை
தனக்காக இவ்வளவு சிரமப் படுகிறார்களே என யோசிக்கும் விஜயா, மீனாவின் அம்மா மார்க்கெட்டில் இருந்து வருவதற்குள் சமையல் செய்துவிடுகிறார். அவர் அண்ணாமலைக்கு சாப்பாடு போட்டு கொடுக்க, அவர் அதை சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டோட நீ இப்படி நடந்துக்குறது நல்லா இருக்கு என சொல்கிறார். பின்னர் விஜயா, மீனா அம்மா மற்றும் சத்யாவுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். அப்போது சாம்பாரில் உப்பு இல்லாததால் விஜயா ஜெர்க் ஆகிறார். ஆனால் அவர்கள் இருவரும் நல்லா இருக்கு என சொல்லி சாப்பிடுகிறார்கள். இதையடுத்து அண்ணாமலையிடம் ஃபீல் பண்ணி பேசும் விஜயா, சாப்பாடு நல்லா இல்லேனாலும் நல்லா இருக்குனு சொல்லி சாப்பிடுறாங்க என சொல்ல, அது அவங்க பெருந்தன்மை என கூறுகிறார் அண்ணாமலை.
வக்கீல் கொடுத்த ஐடியா
மறுபுறம் முத்து வக்கீலை சென்று சந்திக்கிறார். அவரிடம் வீட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் சீல்-ஐ அகற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என கேட்க, அதற்கு அவர் ஜப்தி உத்தரவை ரத்து செய்வதற்காக ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறுகிறார். ஆனால் அந்த மனு தாக்கல் செய்தால் ஒரு 10 லட்சம் டெபாசிட் செய்ய சொல்வார்கள். அதனை உங்களால் ரெடி பண்ண முடியுமா என கேட்கிறார். அதற்கு முத்து ஓகே சொல்ல, வெளியே வந்த பின் மீனா எப்படி அவ்வளவு பணம் ரெடி பண்ணுவீங்க என கேட்கிறார். பின்னர் ஸ்வேதாவிடம் கடன் வாங்க முடிவு செய்கிறார்கள்.
ரோகிணியை வெளுத்துவாங்கிய விஜயா
மறுபுறம் வீட்டில் உள்ள விஜயா, மனோஜ் ஷோரூமிற்கு ரோகிணி வருவதை சிசிடிவி மூலமாக பார்த்துவிடுகிறார். அய்யோ வந்துட்டா என விஜயா பதற, என்ன ஆச்சு என அண்ணாமலை கேட்கிறார். அதன்பின் அவரிடம் அந்த வீடியோவை காட்டுவது மட்டுமின்றி, சிசிடிவில் ஸ்பீக்கர் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தே ரோகிணியை திட்டுகிறார் விஜயா. ஏய் ஃபிராடு இங்க ஏன் வந்த, மூஞ்சு நிறைய பவுடர் பூசிக்கிட்டு யாராவது ஆம்பளை கிடைப்பாங்களானு அலையிருயே வெக்கமா இல்ல உனக்கு என விஜயா அசிங்கமாக கேட்க, அதை ஷோரூமில் உள்ள எல்லோரும் கேட்டுவிடுகிறார். இதனால் கண்ணீர் சிந்துகிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

